நண்பர்களுக்கு வணக்கம்.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நம் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு விட்டது. நடுத்தர வர்க்கம் எப்படியோ தாக்குப்பிடித்து விடும். ஆனால் விளிம்புநிலை மக்களின் துன்பங்கள் எழுதித்தீராதவை. எனவே, ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட
ஏழைகள், அன்றாடக் கூலிகள்,
ரேஷன் கார்டு இல்லாதவர்கள்,
சாலையோர வாசிகள், முகவரி இல்லாதவர்கள், மனநலம் பிறழ்ந்தவர்கள், இரவலர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பல தரப்பினருக்கும்
நாங்கள் உதவத் தொடங்கினோம்.
சென்னையில் இனியன்,
ஆன்மன்; கும்பகோணத்தில் புவனா; புதுக்கோட்டையில் புதுகை சத்யா; கடலூர் பகுதியில் ரமேஷ் பாபு; வேலூரில் திருநங்கை ஐஸ்வர்யா; திருச்சியில் ராஜாமகள்; விழுப்புரத்தில் சுந்தரபாண்டியன்; திருவாரூரில் மணிமாறன்; நாகப்பட்டினத்தில் ரம்யா; திருப்பூரில் அன்வர் பாட்சா; கோவை பகுதியில் ஒடியன் லட்சுமணன் எனப் பலரும் களத்தில்
வேலை செய்து வருகிறார்கள்.
இந்தப் பணிகளுக்காக
நிதி கேட்டு பேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தேன். ஏராளமான நண்பர்கள் முன்வந்தார்கள்.
அவர்கள் தர முன்வந்த தொகையை களத்தில் வேலை செய்கிறவர்களுக்கு நேரடியாக அனுப்பச் செய்தேன்.
கடந்த ஒரு மாதத்தில் என் நண்பர்கள் மூலமாக கிடைத்த தொகை சுமார் 6 லட்சம் ரூபாய். களத்தில் இயங்கும் நண்பர்களும்
தமது நட்பு வட்டத்திலிருந்து நிதியும் பொருட்களும் திரட்டி விநியோகித்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோருக்கு உணவும், ஆயிரக் கணக்கானோருக்கு
அத்தியாவசிய உணவுப் பொருட்களும் வழங்கி வருகிறோம்.
இந்நிலையில்,
3ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு
வந்து விடும் என்று நம்பினோம். ஆனால் மேலும் 14 நாட்களுக்கு நீடித்து விட்டது. அரசுத் தரப்பிலிருந்து
மேலும் நிவாரணம் வழங்கும் அறிவிப்பு ஏதும் வரவில்லை. சில இடங்களில் அம்மா உணவகத்தில்
இலவசமாக வழங்கி வந்த உணவும் நிறுத்தப்பட்டு விட்டது. இத்தனை நாட்களும் எமது குழுவினர்
வழங்கி வந்த உணவைக்கொண்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள் இனிவரும் நாட்களிலும்
எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். வழக்கமான நேரத்தில் உணவு வராமல் ஏமாந்து போவார்கள்
என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது.
எனவேதான் பணிகளைத்
தொடர்வதற்கு பொதுவெளியில் நன்கொடை திரட்டுவதென முடிவுசெய்தேன். இதற்காக crowd
funding வலைதளங்களில் பதிவு செய்து
நிதிக் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
1. Milap என்னும் நிதிதிரட்டும்
வலைதளம்.
2. Ketto என்னும் நிதிதிரட்டும்
வலைதளம்.
17ஆம் தேதி வரை எமது
பணிகள் தொடர வேண்டுமானால் உங்கள் நிதியுதவியால் மட்டுமே இது சாத்தியம்.
நிதி மிகுந்தவர் பொற்குவை
தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள்
தாரீர்
அதுவுமற்றவர் இணைப்பினைப்
பகிர்வீர்.
எனவே, இந்தப் பதிவில் உள்ள நிதியுதவித் தளங்களின் இணைப்புகளை
உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள். உங்கள் வாட்ஸ்அப் / பேஸ்புக் குழுக்களில் பகிருங்கள்.
சங்கிலித் தொடர்போல இச்செய்தி பரவட்டும்.
(மிலாப் தளத்தில் இதுவரை
ஒரு லட்சம் நிதி வந்திருக்கிறது.)
*
ஒரு நிறுவனமாக இல்லாமல்
தனிமனிதனாக விடுக்கும் வேண்டுகோளுக்கு நிதி வழங்குவதில் சிலருக்குத் தயக்கம் வரும்
என்பது புரிகிறது. எனவே, இதுவரை நானும் நண்பர்களும்
பேஸ்புக் நண்பர்கள் உதவியுடன் மேற்கொண்ட பணிகள் குறித்து சிறு குறிப்பைத் தர விரும்புகிறேன்.
தில்லியில் சாலையோரவாசிகளுக்கு
குளிர்காலத்தில் கம்பளி வழங்கும் பணி ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
2015 சென்னை கடலூர் வெள்ளத்தின்போது
சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணம் திரட்டித் தரப்பட்டது.
கேரள வெள்ளத்தின்போது
பத்து லட்சத்துக்கும் அதிகமான நிதி திரட்டி உதவி செய்திருக்கிறேன்.
கஜா புயலின்போதும்
பத்து லட்சம் வரை நிதிதிரட்டி உணவும் அத்தியாவசியப் பொருட்களும் தார்பாலின்களும் வழங்க
ஏற்பாடு செய்தேன்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட
பள்ளி மாணவர்களுக்காக சுமார் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுப் புத்தகங்கள்,
பேனா-பென்சில் போன்ற பொருட்கள்
விநியோகம் செய்யப்பட்டன.
புயலால் சேதமடைந்த
சில பள்ளிகளின் கட்டுமானப் பணிக்காகவும் நண்பர்களின் மூலமாக பல லட்சம் ரூபாய் ஏற்பாடு
செய்து கொடுத்தேன்.
இவை தவிர,
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு,
கட்டுமானம், போன்ற பணிகளுக்காகவும், அவசியம் உதவி தேவைப்படும் சிலருக்கு மருத்துவ உதவிகள்,
ஆதரவற்றவர்களுக்கு சுயதொழில்
உதவிகள் என ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் நிதி திரட்டித் தரப்படுகிறது.
இவை எல்லாமே பேஸ்புக்
நண்பர்கள் மூலமாகவே திரட்டித் தரப்பட்டு வருகிறது. எனவேதான் இதுவரை வலைப்பூவில் இதைப்பற்றி
எழுதியதே இல்லை.
இப்போது மேற்கொண்ட
பணிகளைச் செய்வதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே உங்களிடம் வந்திருக்கிறேன்.
உதவுங்கள். உதவச்
செய்யுங்கள்.
நன்றி வணக்கம்.
களத்தில்
இருப்போருக்கு நேரடியாக அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட கணக்குகளுக்கும்
அனுப்பலாம்
ENIYAN
027001000039224
Indian Overseas Bank
Anna Nagar
IFSC - IOBA0000270
|
N. Syed Ibrahim
802010110002739
Bank of India
Triplicane Branch
IFSC - BKID0008020
|
R SHAHJAHAN
90092010103160
Syndicate Bank
R.K. Puram Sector V
IFSC - SYNB0009009
|
R Lakshmanasamy
006601000028731
Indian Overseas Bank
Coimbatore
IFSC - IOBA0000066
|
No comments:
Post a Comment