சாலிம் அலி. இந்தியாவில்
பறவையியலின் முன்னோடி. இயற்கை ஆர்வலர்.
மும்பையில் பிறந்தது, வீட்டில் குருவிகளை கவனித்தது, படிப்பு வராதது,
பர்மாவில் குடும்பத் தொழிலைக் கவனிக்கச் சென்றது, அங்கும் இயற்கையின்பாலும் பறவைகளின்பாலும் ஆர்வம்
கொண்டது, நாடுதிரும்பிய பிறகு
ஜெர்மனி சென்றது, அங்கு பறவையியலை
சற்றே முறையாகக் கற்றது, திரும்பி வந்தபிறகு
சமஸ்தான மன்னர்களின் பிரதேசங்களில் பறவையியல் ஆய்வுகளை மேற்கொண்டது, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், போபால், இந்தூர் என ஊர் ஊராகச் சுற்றியது, பறவையியல் ஆய்வுக்காக ஆப்கானிஸ்தானுக்கு
சாகசப்பயணம் மேற்கொண்டது, பம்பாய் இயற்கை
வரலாற்றுக் கழகத்துடன் பல்லாண்டுகள் நெருங்கிய உறவு கொண்டிருந்தது .....
எல்லாவற்றையும் அவருடைய மொழியிலேயே வாசிக்க விரும்பினால்....
ஒரு சிட்டுக்குருவியின்
வீழ்ச்சி
(சாலிம் அலியின்
சுயசரிதை - The Fall of a Sparrow)
தமிழாக்கம் - நாக. வேணுகோபாலன்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
*
காமராஜர்
காமாட்சி என்னும் இயற்பெயர்
கொண்ட காமராஜர், இந்திய அரசியலில் ஒரு சகாப்தம். கர்மவீரர், தென்னாட்டு காந்தி
என பலவாறாக அழைக்கப்பட்ட இந்த மாமனிதர் மக்கள் தலைவர் என்பதன் உண்மையான உதாரணமாகத்
திகழ்ந்தவர். விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து, கடைசிமூச்சு வரை
மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருந்த ஒப்பற்ற தலைவர். நேரு மறைவுக்குப்
பிந்தைய நெருக்கடியான காலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, நாடு
எதிர்நோக்கியிருந்த பல சிக்கல்களைத் தீர்த்துவைத்தவர். அவர் தமிழகத்தின் முதல்வராக
இருந்த காலத்தில் கல்வி, தொழில்துறை, வேளாண்மை என
பலதுறைகளிலும் தமிழ்நாடு அபார முன்னேற்றம் கண்டது. இந்த நூல், காமராஜரின் ஆளுமையை, அவரது அரசியல்
வாழ்க்கையை வரலாற்றுச் சம்பவங்களோடு விவரிக்கிறது.
வி.கே. நரசிம்மன்
இந்தியாவின் மூத்த பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர். தி ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ்
உள்ளிட்ட பல நாளேடுகளில் பணியாற்றியவர். மொழி பெயர்ப்பாளராகவும் முத்திரை
பதித்தவர். நரசிம்மனின் புதல்வர் வி.என். நாராயணன் பின்னுரை
எழுதியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராகவும் டிரிப்யூன் நாளேட்டின்
தலைமை ஆசிரியராகவும் இருந்தவர்.
மொழிபெயர்ப்பாளர் நாக.
வேணுகோபாலன் மைய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிஞர், பேச்சாளர், விமர்சகர், நாடக நடிகர் என பன்முகத்
திறமை கொண்டவர். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கடற்புரத்து கிராமம், நமது நீதித்துறை, ஒரு
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, மனித உரிமைகள் உள்ளிட்ட பல நூல்களை தமிழாக்கம்
செய்திருக்கிறார்.
காமராஜர் - ஓர் ஆய்வு
நேஷனல் புக் டிரஸ்ட்
வெளியீடு
ஐஎஸ்பிஎன் - 978-81-237-7101-4
, ரூ.230
*
கடந்தது கடந்து விட்டது
நடப்பது நடந்து
கொண்டிருக்கிறது
நாளை என்பது நாளைமறுநாளுக்கு
நேற்றாகியிருக்கும்.
(Past
is gone, present is going, and tomorrow is day after tomorrow's yesterday.
.....)
ஆர்.கே. நாராயணனின் The Painter of Signs வாசித்தேன்.
எளியவர்களின் வாழ்க்கையை
நகைச்சுவை கலந்த சித்திரங்களால் தீட்டியவர் தம்பி லட்சுமணன்.
அதே எளியவர்களின் வாழ்க்கையை
நகைச்சுவை கலந்து எழுத்தில் சித்திரித்தவர் அண்ணன் நாராயணன்.
The
Painter of Signs பெயர்ப்பலகை எழுதுகிறவனின் கதை. 1950களின் சமூகச்சூழலும் காதலும் பின்னிப்
பிணைந்த கதை
*
பாஜகவும் காவிப் பரிவாரமும்
படேலை சொந்தம் கொண்டாடுகின்றன. உண்மையில் அவர் இரண்டுக்கும் எதிராக இருந்தார்.
கோட்சே காந்தியைக்
கொன்றிருக்கக் கூடாது, நேருவைக் கொன்றிருக்க
வேண்டும் என்று அண்மையில் ஆர்எஸ்எஸ் பத்திரிகை ஒன்று எழுதியது
நேருவுக்கு பதிலாக படேல்
பிரதமர் ஆகியிருக்க வேண்டும் என்பது காவிப்பரிவாரத்தின் நிலையான கருத்து. தன்
வரம்பு என்ன என்று படேலுக்கே தெரிந்திருந்தது. அதை அவரே பல முறை வெளிப்படுத்தியும்
இருக்கிறார்.
இருந்தாலும் காவிப்பரிவாரம்
இதை திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலோருக்கு வரலாறு
தெரியாது என்பதே காரணம்.
வரலாற்றை மேலும் அறிய
விரும்புவோர் வாசிக்க மூன்று நூல்கள் இருக்கின்றன. மூன்றுமே நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடுகள்.
1.
GANDHI-PATEL: Letters and Speeches – This collection brings out some of the
significant correspondences between Gandhi and Patel, their mutual respect for
each other and also the differences between the two on various matters.
978-81-237-5556-4;
Rs 75
2.
NEHRU-PATEL: AGREEMENT WITHIN DIFFERENCES: Selected Documents and
Correspondence, 1933-1950 – This collection brings together, correspondence
between Pandit Jawaharlal Nehru and Sardar Vallabhai Patel. What is striking
about these exchanges is the candour and high intellectual acumen with which
they addressed many of these issues.
978-81-237-5874-9;
Rs. 95
3.
GANDHI-NEHRU CORRESPONDENCE: A Selection – Spanning a period of about 26 years,
this collection brings together select correspondence between Mahatma Gandhi
and Pandit Jawaharlal Nehru. Together they portray a strikingly unique
relationship that was not only personal but also political. 978-81-237-6125-1;
Rs 95
அருமையான நூல்கள்
ReplyDeleteஅனைத்தையும் வாங்கிப் படிக்கின்றேன்
நன்றி நண்பரே