ஐநூறு ரூபாய் நோட்டுகள் வெளிவந்துவிட்டன. இன்னும்
நான்கைந்து நாட்களில் நிலைமை சீராகி விடும் என்று கூறப்பட்டு பத்து நாட்களுக்கு
மேலாயிற்று. இன்னும் 500 ரூபாய் நோட்டுகளை பலரும் பார்க்கவே இல்லை.
இதற்கிடையில், என்னுடைய வங்கியில் 500 ரூபாய் நோட்டு கிடைத்தது,
எந்த சிக்கலும் இல்லை, கூட்டமும் இல்லை என்று சிலர் எழுதுகிறார்கள். அவர்கள்
எழுதுவதைப் பார்க்கும்போது, அவை பெரும்பாலும் தனியார் வங்கிகள். ஆக, தனியார்
வங்கிகளுக்கு மட்டும் முன்னுரிமை தரப்பட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள் போய்ச்
சேருகின்றன. பொதுத்துறை வங்கிகளுக்குப் போகவில்லை என்ற சந்தேகம் எவருக்கும் எழும்.
வங்கி அதிகாரிகளுக்கும் இதே சந்தேகம் எழுந்து, அது பத்திரிகைச் செய்தி ஆகியுள்ளது.
டீமானிடைசேஷனை ஆதரித்து எழுதுபவர்களுக்கு மட்டும் எப்படி
500 ரூபாய் நோட்டு எளிதாகக் கிடைக்கிறது? நண்பர் அருண் எழுதிய கற்பனை உரையாடல் :
*
சார், புது 500 ரூவா நோட்டு கொஞ்சம் ரெடியாயிருக்கு. விநியோகத்துக்கு அனுப்பிரலாமா....?
சீக்கிரம் அனுப்பு. எங்கே அனுப்பறே?
2000 நோட்டே இன்னும் பற்றாக்குறையா
இருக்குற எடத்துக்கெல்லாம் உடனே அனுப்புறேன்...
அங்க எதுக்கு அனுப்பனும் ??
உழவுக்கு, உரத்துக்கு, மளிகைக்கு, மருத்துவத்துக்கு இப்படி எல்லாத்துக்கும் பணமா தேவைப்படுற எல்லாரும் அங்கதான
வரிசைல நிக்குறாங்க...?
தேவைப்படுறவனுக்கு பணத்தைக் குடுத்தா அதை செலவு பண்ணிட்டு
அடுத்த செலவுக்கு மறுபடியும் பணமெடுக்க வரிசைல வந்து நிப்பான்... மீடியாக்காரன்
மக்கள் அவதின்னு நியூஸ் போடுவான்.
அப்போ எங்கதான் அனுப்ப ...?
சிட்டில உள்ள ஐடி பார்க்ல உள்ள எல்லா ஏடிஎம்களையும் முதல்ல
நிரப்ப சொல்லு... அதுக்கும் மேலே மிச்சமிருந்தா மத்த இடத்துக்கு அனுப்பு.
ஆனா அவங்கதான் மீல் பாஸ், பேடீஎம், கிரெடிட்/டெபிட் கார்டு, ஆன்லைன் பர்சைஸ், டோர் டெலிவரின்னு இருக்காங்களே, அவங்களுக்கு இவ்ளோ லிக்யூட் கேஷ் தேவைப்படாதே...?!
அது எனக்கும் தெரியும். அவசியம் உள்ளவனுக்கு காசு குடுத்தா
செலவழிப்பான்.அவசியம் இல்லாதவனுக்கு குடுத்தா அத வச்சு செல்ஃபீ எடுத்து
போஸ்ட் போடுவான்...அத பாத்துட்டு இன்னும் நாலு பெரு செல்ஃபீ போடுவான்....
பத்தலைனா நாலு தேசபக்தி கட்டெறும்பை பிடிச்சு சட்டைக்குள்ள
விட்டோனு வையி... பொது ஜனம் வரமுடியாத, கேம்பஸ் உள்ளாடி இருக்குற பாங்குக்கு போய் பணம் வித்ட்ரா
பண்ணிட்டு வந்து... நான் பத்து நிமிஷம் தான் லைன்ல நின்னேன் பணம் எடுத்துட்டு
வந்துட்டேன்... நாட்டுக்காக ஒரு பத்து நிமிஷம் பொறுக்க முடியாதான்னு போஸ்ட்
போடுவான்... லைக்கு ஷேர்ன்னு சும்மா பிச்சுக்கும்.....
அடுத்த பேட்ச் பணம் வர
வரைக்கும் நாமளும், பணம் இல்லைன்னு சொல்றதெல்லாம் பொய்... சமூக வலைத்தளத்துல பாருங்க.... எதிர்க்
கட்சிகள் மிகை படுத்துறாங்கன்னு சொல்லி சமாளிச்சுட்டே போலாம்....
எது வேணா தீரலாம்... தேசபக்தி எறும்பு மட்டும் எப்பவும்
ஸ்டாக் வச்சிருக்கணும்... புரிஞ்சுதா...
நல்லா புரிஞ்சுது சார்...!
புரிஞ்சது
ReplyDeleteஆதங்கத்தைப் பதிவு செய்த விதம் அருமை
வாழ்த்துக்களுடன்...
True.
ReplyDeleteஎன் கண்ணுலேயும் சரியா தட்டுப்பட மாட்டேங்குதே அவ்வளுவு கோபமா ? ஐநூறு ரூபாய் நோட்டுக்கு
ReplyDeleteஎன் கண்ணுலேயும் சரியா தட்டுப்பட மாட்டேங்குதே அவ்வளுவு கோபமா ? ஐநூறு ரூபாய் நோட்டுக்கு
ReplyDelete