Monday, 18 March 2013

பிரிய(யா) நிலா



ரயிலின் வேகத்துக்கிணையாய்
வெட்டவெளி வானில்
என் முகம் பார்த்தவாறே
ஓடி வருகிறது வெள்ளிநிலா
எனக்குத் தெரியும் அதுவும் 
பிரியத்தான் போகிறதென
பிரியத்தான் போகிறோமென
அதற்கும் தெரியுமாவென்றே
கவலையாய் இருக்கிறது.

* * *

நேற்றிரவு விடைபெறாத
ஏக்கத்தில் இளைத்த நிலா
ஆயிரம் காதங்களுக்கும் அப்பால்
இன்றும் தொடர்கிறது
சன்னலினூடாக என்
முகம் பார்த்தவாறு
அடுத்த சந்திப்புக்கு
ஆறுமாதமோ ஆண்டுகளோ
ஆகக்கூடுமென்பது 
அதற்குப் புரிந்திருக்குமோவென்றே 
கவலையாக இருக்கிறது.

* * *

நீ வானத்திலும்
நான் பூமியிலும்
உனக்கும் எனக்கும்
எட்டாத்தொலைவு
எல்லாம் அறிந்திருந்தும்
விடியலுக்கு முந்தைய
கடைசி தரிசனத்திற்காக
பனியின் ஊடாக
குளிரில் நடுங்கியவாறே
என் பாதை அறிந்து
பின்தொடர்கிறாய்
காலைக் குளிரிலும்
கதவைத் திறப்பேனென
காத்திருக்கும் நீ
கண்டறிந்தது எப்படி ...


6 comments:

  1. அருமையான கவிதை.

    படங்களெடுத்து அதற்கேப்ப கவிதையும்....

    கவிதைகள் நிறைய எழுத ஆரம்பிச்சாச்சு போல ஷாஜஹான் ஜி! :)

    இனி எங்களுக்கு வேட்டை தான்!

    ReplyDelete
  2. நன்றி வெங்கட். ஆம், இவை ரயில் பயணத்தின்போது எடுத்த படங்கள், எழுதிய கவிதைகள். இன்னும் நிறைய இருக்கின்றன. விரைவில் வரும்.

    ReplyDelete
  3. சூப்பர் அண்ணாச்சி ! இதை படிப்பதற்கு இரண்டு நாள் முன்பு udaipur to டெல்லி ரயில் பயணத்தில் இதே எண்ணங்களுடன் நிலவை க்ளிக்கினேன். அந்த எண்ணங்களை மிக அருமையாக கவிதைகளாய் வடித்து பதிவு செய்திருக்கிறீர்கள் ! அருமை

    சத்யா அசோகன்

    ReplyDelete
  4. நன்றி சத்யா. ஒத்த சிந்தனை என்று இதைத்தான் சொல்வார்களோ...

    ReplyDelete