Wednesday, 23 January 2013

உலகப் புத்தகத் திருவிழா

நான் மிகவும் சுறுசுறுப்பானவன் என்பது உங்களுக்கே தெரியும். 2012 உலகப் புத்தகத் திருவிழாவின் கடைசிநாள் பதிவில் சுவாரஸ்யமான புகைப்படங்களைப் பதிவேற்றுவதாகக் கூறியிருந்தேன். நாங்கள் எல்லாம் சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் பரம்பரை... இதோ செய்து விட்டேன். என்ன, விரைவில் என்பது மறந்துவிட்டது... அடுத்த புத்தகத் திருவிழா வரப்போகிறது. பிப்ரவரி 4 முதல் 10 வரை. விவரங்கள் அடுத்த பதிவில். இப்போதைக்கு கீழே இருக்கிற புகைப்படங்களில் நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களோ உண்டா என்று பாருங்கள்.

திருவிழா என்றால் வண்ணக்கோலம் பூண்டிருக்க வேண்டும் அல்லவா...

பெரிய மனிதர்... பெரிய  விஷயம்...
 
சரியான படிப்பாளி. வீடு போவதற்குள் பாதி படித்தாயிற்று பார்த்தீர்களா...
 
ஆட்களை இழுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது...
 
இதெல்லாம் பழைய  ஸ்டைல்... சென்னைக்கும் வந்தாச்சு
... இந்த ஆண்டு இன்னும் என்னென்ன என்று பார்க்க வேண்டும்.
 
பாதி நிரம்பியிருக்கிறதா இல்லை பாதி காலியா...
புத்தகம் வாங்க வந்துவிட்டு சினிமா பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி...

இந்த இடம் எந்த இடம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்....
குறிப்பு-நூறாண்டுத் தலைநகர் தில்லி என்பதற்காக தில்லி அரங்கில் வைக்கப்பட்டிருந்த புகைப்படம்

எதை எங்கே வைப்பது என்று குழப்பமாக இருக்கிறதே...

மேலும் சில படங்கள் அடுத்த பதிவில் - அடுத்த புத்தகத் திருவிழா பற்றிய விவரங்களுடன். காணத் தவறாதீர்கள்.

No comments:

Post a Comment