Monday, 24 March 2014

சாலை விபத்துகள் - ஓர் அலசல்

கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி, ஜெயக்குமார் என்ற இளைஞன் திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் மறைந்தான். பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது டாடா சுமோ பின்னாலிருந்து மோதியதில் உயிரிழந்து விட்டானாம்.

இவன் தில்லியில் எங்கள் வீட்டுப் பையன் போல இருந்தவன். சொந்த ஊர் வீரசிகாமணி. எலக்டிரானிக்ஸ் கம்யூனிகேஷனில் டிப்ளமா படித்தான். ஆங்கிலத்தில் அவ்வளவாக தேர்ச்சி இல்லாததால் சரியாக வேலை அமையாமல் ஒரு கட்டத்தில் என்னிடத்தில் வந்து சேர்ந்தவன்.

இதுவும் கடந்து போகும்தான், சந்தேகமே இல்லை. எங்கள் வீட்டுப் பையன்களாக இருந்தவர்கள் எத்தனை பேர் என்று எனக்கே தெரியாது. ஆனால் அத்தனை பேரிலிருந்தும் அவன் மட்டும் எப்படி எங்களுக்கு வித்தியாசமானவனாக இருந்தான் என்பது என்னை நேரில் அறிந்த மிகச்சிலருக்கு மட்டுமே தெரியும். 

குடியில்லை, சிகரெட் இல்லை, ஆடம்பரப் பழக்கம் ஏதும் இல்லை. சிக்கனமாக இருப்பான். உழைத்துச் சேர்த்த பணத்தில் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தான். என் மகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தான். டேடா என்ட்ரி செய்தான். அவன் கைபடாத வீ்ட்டு சாதனங்களே எங்களிடம் இல்லை. கடைசியாக 2011 டிசம்பர் 28ஆம் தேதி உடுமலையில் எங்கள் இல்லத் திறப்புவிழாவுக்காகவே நெல்லையிலிருந்து வந்தான். வழக்கம்போலவே எங்கள் வேலைகளில் துணையாய் இருந்தான். 


இவன் நினைப்பிலிருந்து மீள சிரமமாக இருக்கிறது. கண்ணீரைக் கட்டுப்படுத்துவது இப்போதும் சிரமமாக இருக்கிறது. அவனுடைய விபத்துக்கு அவன் காரணமல்ல என்று தெரிய வந்தது. இருந்தாலும் சாலை விபத்துகளில் உயிரிழந்த நண்பர்களின் முகங்கள் நினைவில் நிழலாடுகின்றன. சாலை விபத்துகள் குறித்து நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்ததை இந்தச் சம்பவம் எழுத வைத்தது. இது ஜெயக்குமாருக்கு அஞ்சலி. இளைஞர்கள் இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன். 

* * *

•  உலக மக்கள் தொகையில் 17.5% மக்கள் வசிக்கும் இந்தியாவில், சாலைவிபத்துகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் 0.7 சதவிகிதம்தான் உள்ளன. 
•       உலகெங்கும் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். 20 முதல் 50 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஊனமடைகின்றனர். 2020இல் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை 20 லட்சமாக இருக்கும் என மதிக்கப்படுகிறது.
•    15-29 வயதுக்கு உட்பட்டவர்களின் மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பது சாலைவிபத்துகளே. இதனால் ஒவ்வொரு நாட்டுக்கும் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1 முதல் 3 சதவிகிதம் வரை இழப்பு ஏற்படுகிறது.
•     உலக நாடுகளின் மொத்த வாகனங்களில் 50 சதவிகிதம்தான் குறைந்த அல்லது நடுத்தர வருவாய் நாடுகளில் உள்ளன. ஆனால் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 91% பேர் இந்த வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான்.
•      சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களில் பாதிப்பேர் நடந்து செல்பவர்கள், சைக்கிள்காரர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள்தான். 

* * *

இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்க வேகத்தைவிட வாகன எண்ணிக்கை அதிகரிப்பு வேகம் மிக அதிகமாக இருக்கிறது. 

இந்தியாவின் மொத்த உயிரிழப்புகளுக்கான காரணங்களில் ஆறாவது முக்கியக் காரணமாக இருப்பது சாலை விபத்து. உயிரிழப்பவர்களில் பெரும்பாலோர் இளையவர்கள் மற்றும் நடுத்தர வயதினர்.

2001 முதல் 2011 வரையான பத்தாண்டுகளில் இந்தியாவில் சாலை வசதி மேம்பாட்டு விகிதம் 3.4%. மக்கள் தொகைப் பெருக்க விகிதம் 1.6%. ஆனால் வாகனப் பெருக்கம் 9.9%. இதே காலகட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை 2.1% அதிகரித்தது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.8%, காயமுற்றோர் எண்ணிக்கை 2.4% அதிகரித்தது.

1970உடன் ஒப்பிட்டால் 2011இல் வாகனங்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 9.8%, காயமுற்றோர் எண்ணிக்கை 7.3 சதவிகிதமும்தான் அதிகரித்துள்ளது என்பதும் கவனிக்கப்பட வேண்டியதுதான்.

இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து வரும் உயிரிழப்பு விகிதம் கவலை தருகிறது. 2002இல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழப்பு விகிதம் 18.1%. ஆனால் 2011இல் இது 24.4%. 

கவனிக்க வேண்டியது என்னவென்றால், சாலைவிபத்துகள் குறித்த ஆய்வில் மூன்று விஷயங்கள் கணிக்கப்படும். ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, ஒவ்வொரு பத்தாயிரம் வாகனத்துக்கும், ஒரு ஆயிரம் கிலோமீட்டர் சாலைக்கும் இடையிலான விபத்து விகிதம் கணக்கிடப்படுகிறது.

2002-2011 இடைப்பட்ட காலத்தில் சாலைவிபத்துகள் விவரம்

•        1970இல் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 13 பேர் காயமுற்றனர், 2.7 பேர் உயிரிழந்தனர். ஆனால் 2011இல் காயமுற்றோர் 42.3, உயிரிழந்தோர் 11.8. இது அபாயகரமான விகிதமாகும். 

•        இதுவே பத்தாயிரம் வாகனத்தின் அடிப்படையில் பார்த்தால், 1970இல் 500 விபத்துகள் என்றால், 2011இல் 36தான். அதேபோல, 1970இல் உயிரிழந்தோர் 104 என்றால், 2011இல் 10தான். இது குறைவாகத் தெரிவதற்கு, வாகனங்கள் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்படுவதும் காரணமாகும். 

* * *

வாகன விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்பது கவலைதரும் விஷயம். அதாவது, வாகன எண்ணிக்கை, காயமுற்றோர் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை என்ற விகிதத்தில் தமிழகம்தான் நாட்டிலேயே முதலிடம் பெறுகிறது. 

நாட்டின் மொத்த வாகனங்களில் 13.8 சதவிகிதம் தமிழகத்தில் உள்ளன. விபத்துகளில் உயிரிழந்தோரில் 10.8 சதவிகிதம், காயமுற்றோரில் 14.5 சதவிகிதம் தமிழகத்தில்தான். அதாவது, 2012இல் நாட்டிலேயே அதிக வாகனங்கள் உள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன - 15.4%. 

2011இல் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில்தான் அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளன - நகர்ப்புறத்தில் 46.5%. கிராமப்புறத்தில் 53.5%. உயிரிழப்புகளில் இந்த வித்தியாசம் இன்னும் அதிகம். நகர்ப்புறங்களில் 36.6%, கிராமப்புறங்களில் 63.4%. அதாவது, உரிய நேரத்தில் உரிய மருத்து வசதி கிடைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
 
உயிர்களைப் பறித்த வாகனங்களின் விகிதம்
எந்த வயதுப் பிரிவினர் விபத்துக்கு ஆளாகின்றனர் என்று பார்ப்பதும் அவசியமாகிறது. 2012ஆம் ஆண்டில் 25 முதல் 65 வயது வரையானவர்கள் 51.9%. 15 முதல் 24 வயது வரையானோர் 30.3%. விபத்துகளில் உயிரிழப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் சம்பாதிக்கும் வயதில் இருப்பவர்கள். விபத்துக்குள்ளான பெண்கள் 15% மட்டுமே என்பது முக்கியமான செய்தி. மொத்த விபத்துகளில் 23% இருசக்கர வாகன ஓட்டிகள் அல்லது அதில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள்.

மேற்குறிப்பிட்ட பத்தியையும் படத்தையும் ஒப்பிடும்போதும், வாகனம் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது 18 என்பதையும் கணக்கில் கொண்டால், இளவயதினர் - குறிப்பாக ஆண்கள் விபத்துக்கு ஆளாகும் விகிதம் அதிகம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

நாளின் எந்த நேரத்தில் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன? 2012இல், மதியம் 3 முதல் 5 மணி வரை 16.7%.  மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 16.6%. நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் இரவு 3 மணி வரை 6.3%.

விபத்துக்கான முக்கியக் காரணங்கள் - குடிபோதையில் ஓட்டுதல், கவனம் திசைதிரும்புதல், களைப்பு, முடிவெடுக்க முடியாத குழப்பம். விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டிகளில் பெரும்பாலோர் அனுபவமற்றவர்களாக, துடிப்பானவர்களாக, ஆத்திரக்காரர்களாக, சாகசம் புரிபவர்களாக, ரிஸ்க் எடுப்பவர்களாக, சாலைவிதிகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 2011இல் ஏற்பட்ட விபத்துகளில் 77.5 சதவிகிதம் ஓட்டுநர் தவறின் காரணமாகவே ஏற்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது.

எல்லா விபத்துகள் குறித்த தரவுகளும் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். விபத்துகளில் சராசரியாக 5 சதவிகித அண்டர்ரிப்போர்டிங் உள்ளது எனக் கருதப்படுகிறது.

ஆக, உலகின் 18 சதவிகித மக்கள் வசிக்கும் இந்தியாவில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலோர் ஆக்கசக்தி கொண்ட இளைஞர்களாக இருக்கிறார்கள். உயிரிழப்பவர்களில் 23 சதவிகிதம் பேர் இருசக்கர வாகனத்தினர். அதிலும் குறிப்பாக இளைய வயதினர். 

கவனத்தில் வைத்திருங்கள் இளைய நண்பர்களே.....

கட்டுரைக்கு ஆதாரங்கள் –
National Statistics of Road Accidents in India

Journal of Orthopaedics, Traumatology and Rehabilitation

Thursday, 13 March 2014

Publishers from Down South in the New Delhi World Book Fair

I happened to read an article in The Hindu on 9 March which claimed that there were no Tamil stalls in the New Delhi World Book Fair. The writer of that article, may be from Andhra, was prompt enough to interview the representative from the Telugu stall, the only one from that language! But, interestingly, failed to notice two Tamil stalls just adjacent to that Telugu stall and other 5 Tamil stalls which were located behind that row ! I sent a letter to the editor, but not sure if it will be published.

Every edition of the New Delhi World Book Fair attracts a few publishers from down south. When I was associated with a publishing company, I was the in-charge of lone Tamil stall during 1992 and 1994 book fairs. Times changed and many other publishers now take part, for instance, NCBH, Kalachuvadu, Kizhakku, Sandhiya, Bharathi, Shanthi, Islamic Foundation Trust, etc. Many of them were present in this edition of the Fair too.

Publishers from Tamil Nadu and Kerala had the highest number of stalls in Hall No. 14 from among the four south Indian states in the recently concluded New Delhi World Book Fair. While Malayalam was represented by nine stalls, Tamil language publishers had ten stalls. And Telugu and Kannada have one stall each.“Response is very good, as usual,” said Suresh from Mathrubhoomi Printing and Publishing Co. Ltd. D.C. Books, one of the largest publishers of Kerala, with two stalls was having good business. Malayala Manorama, one of the leading newspapers in Malayalam with its Delhi edition, was present here both for selling publications as well as to collect subscriptions. Considering the Keralite population in the capital spread all over the NCR region, Malayalam publishers were the happiest lot. The All Kerala Publishers & Booksellers Association, a representative body of about 200 publishers from the state, was also present with a representative collection of books from about 25 publishers. 

“So far the response is not encouraging. We have brought only select titles, mostly new publications, to this Fair,” said Rukudeen of Islamic Foundation Trust, who was present in the Book Fair for the second time. Whereas, Ongaram Publications had only the writings of Swami Ongarananda in its stall. Jothi Kumar, its representative, said, “We are having only religious books and it seems people are not much interested in this subject.” 


Kizhakku Pathippagam, which is more into direct selling, booked orders from the book lovers to deliver them by courier. “This helps us to avoid huge expenses on transportation and damage of books,” said Pandian from Kizhakku. They had a set of select publications for display, which were also sold off in the last few days. New Century Book House is a regular participant since two decades and its representative Kumar was happy with the response from visitors and institutional buyers. 


Kannan from Kalachuvadu Publications Pvt. Ltd., one of the notable publishers of Tamil Nadu said, “We are here with select books including classics and our aim is not just to cater to the general readers but to supply books to the libraries and institutions.” Balaji Institute of Computer Graphics, a first time participant in the NDWBF, had in its stands a lot of books on computers in Tamil. They were promoting particularly one title ‘Puthagam Patriya Puthagam’, (A Book about Book), which, according to them, carries all information about book—history of book, publishing, production, ISBN, marketing, libraries in India, list of books nationalized, etc.

Malarvizhi from Semparuthi, a publisher of children’s books, too, was encouraged with the response, “I am surprised to see that our children’s books in Tamil attracts even non-Tamils too and so I have made my mind to come to the next edition of the Fair with a few translations in Hindi too.” BAPASI, the organiser of the Chennai Book Fair, was also present for the first time with a representative collection from about 50 publishers.
“I am waiting for the weekend, because the population from Karnataka is comparatively less in Delhi,” said H. Puttappa, representative of Karnataka Publishers Association which is here with a collective display of publications from about 10 publishers from the state. 

Most of the language publishers were happy with the institutional buying. The New Delhi World Book Fair is the best opportunity for libraries, exporters and other institutions to select the best under one roof. Visitors from Sri Lanka who especially came for the Fair also used this opportunity to buy books in Tamil and English. 

Apart from these stalls in languages section of Hall No. 14, National Book Trust, India and Sahitya Akademi, the major publishers of books in all Indian languages, had in their stall a fair number of publications in various languages. Unfortunately, they were not noticed by visitors who visited particularly for language books.

Wednesday, 12 March 2014

ஜோ டி குரூஸ் – பாராட்டு விழா

கொற்கை நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜோ டி குரூஸ் அவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கச் செயலர் முகுந்தன், எழுத்தாளரின் வாழ்க்கையையும் எழுத்துகளையும் அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார். குரூஸ், மாலன் இருவருக்கும் சால்வை அணிவித்து பெருமைப் படுத்தியது தில்லித் தமிழ்ச் சங்கம்.நூலை தான் இதுவரை வாசிக்கவில்லை என்று கூறிய புலவர் விசுவநாதன், சங்க இலக்கியத்தில் நெய்தல் நில வாழ்க்கை சித்திரிக்கப்பட்டது குறித்துப் பேசினார்.

தலைமை வகித்த எழுத்தாளர் மாலன், நூல் குறித்து விரிவாகவே பேசினார். ஆரம்ப காலத்திலிருந்தே சாகித்ய அகாதமி வழங்கும் விருதுகளைப் பார்க்கையில், படைப்புக்கு விருது என்பதைவிட படைப்பாளிக்கு விருது என்பதையே கொள்கையாகக் கொண்டிருந்தது என்பதை உதாரணங்களுடன் சுட்டினார். தான் உள்பட இளைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து அந்த நிலை மாறிவருவதைக் காண முடிகிறது என்றார்.குரூஸ் எழுதிய முதல் நாவல் ஆழிசூழ் உலகு. அதற்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இரண்டாவது நாவல் கொற்கை சாகித்ய அகாதமி பரிசு பெற்றது. அதற்கு முன்னால் அவர் சில கவிதைகளை எழுதியிருக்கிறார். அவற்றைக் கவிதை என்று அவரே இப்போது ஒப்புக்கொள்வாரா என்று சந்தேகம்தான் என்றார் மாலன்.

கொற்கை நாவல் நூறாண்டுகால வரலாற்றை களமாகக் கொண்டிருக்கிறது. இது பழங்காலக் கொற்கை அல்ல. தூத்துக்குடியைத்தான் கொற்கையாக சித்திரிக்கிறார். தெற்கின் முக்கியமான தொழில்நகரம் தூத்துக்குடி என்றுதான் கூற வேண்டும். மீன்பிடி தொழில் இருந்திருக்கிறது. உப்பளம் இருந்திருக்கிறது. விவசாயம் சார்ந்த தொழிலும் இருந்தது. நூற்பாலைகள் இருந்திருக்கின்றன. கடல்கடந்த வணிகத்துக்கான தலமாகவும் இருந்தது. இத்தகைய பழமையான மற்றும் முதலாவது தொழில் நகரின் கதை இது. இதில் கதாநாயகன் என்று யாரும் இல்லை. காலத்தைக் கதாநாயகன் என்றுகூடக் கூற முடியாது. மீனவ சமூகத்தைப் பற்றிய கதைகள் என்றால் வண்ணநிலவனின் கடல்புரத்தில், ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க் கரையில் ஆகிய இரண்டைத்தான் குறிப்பிட வேண்டும். ஆனால் இதுவரை கவனிக்கப்படாத வித்தியாசமான பரிமாணத்தை இந்த நாவல் முன்வைத்திருக்கிறது என்று பாராட்டினார்.தில்லியில் இருப்பதால்தான் தில்லித் தமிழ்ச் சங்கம். அதனாலேயே சங்கத்திற்கு ஓர் சிறப்பும் உண்டு. விருது பெற வருகிற படைப்பாளிகள் அனைவரையும் முதலாவதாகப் பாராட்டும் வாய்ப்பு சங்கத்துக்குக் கிடைக்கிறது. இதில் சங்கம் எந்தப் பாகுபாடும் காட்டுவதில்லை. எழுத்தாளர் பற்றிய சர்ச்சைகளோ, விருது குறித்த சர்ச்சைகளோ சங்கம் கவனத்தில் கொள்வதில்லை. மாலனும் இதுகுறித்து குறிப்பிட்டு சங்கத்தைப் பாராட்டினார்.

ஏற்புரை வழங்கிய குரூஸ், மிகச்சுருக்கமாக நன்றி தெரிவித்து விடைபெற்றார்.


பொருளாளர் அறிவழகன் நன்றியுரை வழங்கினார்.