Monday, 25 February 2013

போஸ்டிங் குழப்படி

ஊரில் இருந்த நேரத்தில் எழுதிய பதிவுதான் அம்மாவுக்கு ஒரு கடிதம். எழுதி முடித்து பதிவேற்ற முயற்சி செய்தபோது பிழை என்ற சேதி தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. டிராஃப்டில் இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகள் சேமிக்கப்பட்டு விட்டன. போஸ்ட் ஆகிவிட்டது தெரியாமல் போனது. அதனால்தான் இதே தலைப்பில் நான்கு பதிவுகள் வெளியாகின என்பதையும், முக்கியத்துவம் கருதி நான்குமுறை வெளியிடவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகப் புத்தகத் திருவிழா பற்றிய பதிவிலும் இதே சிரமம் இருந்தது. இணைய இணைப்பின் வேகம் போதாமையால் படங்கள் நிறைந்த பதிவை சேமிக்கவே முடியவில்லை. ஊருக்குத் திரும்பியபிறகு, 30க்கும் மேற்பட்ட டிராஃப்ட் பதிவுகளை நீக்கிவிட்டு புதிதாக எழுதி பதிவேற்றினேன்.

Sunday, 24 February 2013

அம்மாவுக்கு ஒரு கடிதம்


அன்புள்ள அம்மா
நீங்கள் எல்லாருக்கும் அம்மா ஆக முடியுமா.... தமிழகத்தில் சில நகரங்களில் கடந்த சில நாட்களில் சுற்றிவந்தபோது எங்கு நோக்கினும் அம்மா அம்மா அம்மா என்ற சுவரெழுத்துகள், பிளெக்ஸ் பேனர்கள். பார்த்துப்பார்த்து பதிந்து போனதால் இப்படி விளிக்கிறேன். மற்றபடி அம்மாவைத் தவிர வேறெவரும் அம்மாவாக முடியாது என்பது என் நம்பிக்கை. இருக்கட்டும்.

இரண்டு மாதங்கள் முன் வந்திருந்தபோது ஊரெங்கும் சுவரெழுத்துகளைக் கண்டேன் -
     65ஆவது பிறந்த நாள் காணும அம்மா அவர்களை
     வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
அல்லது
     வணங்கி வாழ்த்துகிறோம்
என்று.
எனக்கு ஒரு கேள்வி. வாழ்த்துகிற வயதை எட்டியவர்கள் யாருமே உங்கள் கட்சியில் இல்லையா... அல்லது வயதானவர்கள் எல்லாருமே வணங்க மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் உங்கள் நிரந்தர ஆர்வமா...

வணங்கி வணங்கி உங்கள் அமைச்சர்கள் அனைவரின் முதுகெலும்புகளும் இனியும் நேராக்கவே முடியாது என்கிற அளவுக்கு வளைந்துபோய் விட்டன. போகட்டும், அது அவர்கள் விரும்பி வளைத்துக்கொண்டது.

அதுதவிர இந்த பேனர்களில் எல்லாவற்றிலும் கவனிக்க வேண்டியது அதன் வாசகங்கள். உங்களுக்கு மட்டுமே வயதாகி விட்டது, எங்களுக்கெல்லாம் வயதாகவில்லை என்று உங்கள் தொண்டர்கள் பகிரங்கமாக ஊர்ஊராக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இது என்ன குசும்பு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா... போகட்டும்.

இந்த முறை தமிழகம் வந்தபோது எல்லா நகரங்களிலும் ஏராளமான பிளெக்ஸ் பேனர்கள். பேனர்கள் என்றாலும் சும்மா சாதாரண பேனர்களோ ஆளுயர பேனர்களோ அல்ல. மகா பிரம்மாண்ட பேனர்கள். அதில்தான் எத்தனைவிதமான பாராட்டுகள், துதிகள், புகழ்மாலைகள்...
மனிதநேயத் தலைவி
கருணைக் கடல்
காவேரித் தாய்
காவேரியின் கலங்கரை விளக்கு
புறநானூற்றுத் தாய்
தானே துயர் துடைத்த தாய்
ஏழைகளின் தெய்வம்
பெண்ணினத்தின் முன்னோடி
பாரத தேசத்தின் சிற்பி
எதிர்காலப் பிரதமர்
தங்கத் தாரகை
அன்புத் தாய்
இதய தெய்வம்
தமிழகம் காக்க வந்த தலைவி
தாய் திட்டம் தந்த தலைவி
கிங் மேக்கர்
நிரந்தர பொதுச்செயலர்...

இன்னும் குறிப்பெடுக்காதவை எத்தனையோ... முன்னர்
     வாழ்த்த வயதில்லாமல் வணங்கியவர்கள்
இப்போது
     கடவுளை வாழ்த்த இயலாது வணங்குகிறோம்
என்கிற அளவுக்குத் துதிபாடிகளாக ஆகியிருக்கிறார்கள்.
அம்மாவை ஒருமையில் அழைப்பது தமிழர்களின் வழக்கம். மரியாதைக் குறைவு அல்ல இது, அன்பின் உரிமையில் விளைவது. ஆனால் அம்மா தாயே, அம்மா தெய்வமே என்பதெல்லாம் அன்பின்பாற்பட்ட விளித்தல்தானா என்று நீங்கள் எப்போதேனும் கேட்டுக்கொண்டதுண்டா...

உங்களை பாராட்ட உங்கள் தொண்டர்களுக்கு உரிமை உண்டுதான். அவர்களுக்கு உங்கள்மீது அபார மரியாதை இருக்கவும்கூடும். ஆனாலும் இத்தனை துதிகளும் உளமார்ந்த துதிகள் என நீங்கள் நம்புகிறீர்களா... பதவிகளில் இருப்பவர்கள் தக்கவைத்துக் கொள்ளவும், பதவிகளில் இல்லாதவர்கள் புதிய பதவிகளைப் பெற அல்லது மற்றவர்களின் பதவிகளைப் பிடிக்கவே இந்தத் துதி என்பது உங்களுக்குப் புரியாததா... இதுகூடப் புரியாத அளவுக்கு உங்களுக்கு அரசியல் அனுபவம் இல்லாமல் போய்விடவில்லை. புரிந்தும் இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், வயது உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தது என்று கேட்கலாம் அல்லவா. இருக்கட்டும்.

திருப்பூரில் சில பேனர்கள் பார்த்தேன் - உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்கள் நடத்துகிறார்களாம். நல்லதுதான். மற்றொரு பேனரில் 10006 பேருக்கு அன்னதானம் செய்வார்களாம். தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி உயர்வாலும் மின்வெட்டால் வேலைகள் இழந்தும் பட்டினி கிடப்போருக்கு ஒருவேளை சோறு கிடைத்தால் மகிழ்ச்சிதான். சரி, அது என்ன 10006 பேர்... 10007ஆவதாக வரும் நபருக்கு உணவு தரமாட்டார்களா... அல்லது ஆள் குறைந்து போனால் என்ன செய்வார்கள்.... என்ன மூடநம்பிக்கை இது. இதுபோன்ற மூட நம்பிக்கைகள் என்றென்றும் இங்கே நிலைத்திருக்க வேண்டும் என்பதே உங்கள் ஆசையா...

உடுமலையில் சில திருமண மண்டபங்களின் அருகே சில பேனர்களைப் பார்த்தேன். மணமக்களை வாழ்த்துவதன் பெயரால் உங்கள் துதிதான் அதிலும்.

புரட்சித் தலைவி என்ற பட்டம் உங்கள் பெயரோடு நிலைத்து விட்டது. நிலைக்கட்டும். தமிழகத்தில் யாருக்குத்தான் பட்டங்கள் இ்லலை உங்களுக்கு இல்லாதிருக்க. ஆனால் ஒரு சிறிய கேள்வி பெண்ணினத்தின் முன்னோடியே, தமிழகம் காக்க வந்த தலைவியே... நீங்கள் என்ன புரட்சி செய்தீர்கள் என்று எப்போதாவது உங்களை நீங்களே கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா.... அப்படிக் கேட்டால் தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொரு பட்டப்பெயரையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கும் என்பீர்களா.... சரி, விடுங்கள்.

இத்தனை பிளெக்ஸ் பேனர்களும் அடுத்த என்னவாகும் என்று ஒரு கணமேனும் நீங்கள் சிந்தித்துப் பார்த்திருப்பீர்களா... பாலிதீன் பைகளுக்கும், டம்ளர்களுக்கும் தடை என்று விதித்திருக்கிற தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திலும் எத்தனை நூறு பேனர்கள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா... பிளெக்ஸ் பேனர் கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல வேட்டைதான். ஆனால் இத்தனையும் மீண்டும் பயன்படுத்த முடியாத கழிவுகள் அல்லவா... எத்தனை கோடி ரூபாய் இந்த ஒருநாள் கூத்துக்காக வீணடிக்கப்பட்டிருக்கும்... சில மாதங்களுக்கு முன்னால் ஓர் ஆணை இட்டீர்கள் - பேனர்களில் சிறு-குறு தலைவர்களின் படங்கள் ஏதும் இருக்கக்கூடாது என்று. உங்கள் ஆணையை தொண்டர்கள் எப்படி சிரமேற்கொண்டு பின்பற்றுகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். ஒரு ஊரிலும் ஒரு பேனரிலும் அண்ணா, எம்ஜிஆர், நீங்கள் ஆகிய மூன்று பேரின் படங்களைத்தவிர ஒரு தொண்டனின் படத்தையும் பார்க்கவே முடியாது.

இந்தப் படத்தைப் பாருங்கள் - தொடர்ச்சியாக ஒரே மாதிரி வாசகங்களுடன் ஒரே மாதிரி பேனர்கள் வரிசையாக, பிரம்மாண்டமாக நிற்கின்றன. அன்னூரில் கண்ட இந்தக்காட்சி ஓர் உதாரணம்தான். திருப்பூரில் ஐம்பது அடிக்கு ஒரு பேனர்.

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் பேனர்களே வைக்கக்கூடாது என்று ஓர் ஆணை விட்டிருக்க முடியாதா உங்களால்.... உங்கள் தொண்டர்களுக்கு சிறு வேண்டுகோள் விடுத்திருந்தால் போதுமே, நகரமே பேனர்கள் இல்லாமல் சுத்தமாகி விடுமே. பேனர் வைக்கும் பணத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு கல்விச் செலவுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுபோன்ற நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யச் சொல்லியிருந்தால் நிச்சயம் நீங்கள் உண்மையிலேயே பெண்ணினத்தின் முன்னோடியாக, கருணையின் சின்னமாக ஆகியிருப்பீர்கள்.

கடந்த சில நாட்களில் பல ஊர்களைச் சுற்றி வந்தேன். அத்தனை ஊர்களுக்கும் பொதுவானவையாகத் தோன்றியவை இரண்டு விஷயங்கள் - ஒன்று, இந்த பேனர்கள். இரண்டு, மின்வெட்டு. ஊர் தவறாமல் கிராமம் தவறாமல் நாளுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு.

பள்ளி செல்லும் குழந்தைகள் படிக்க இயலாமல் தவிக்கிறார்கள். தாய்மார்கள் வீட்டு வேலைகளை சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள். சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய முடியாமலும், கிடைத்த ஆர்டர்களுக்கு சப்ளை செய்ய முடியாமலும் தவித்து தம் நிறுவனங்களை மூடிக்கொண்டு வருகிறார்கள். விவசாயிகள் மின்சாரம் இருக்கிற நேரத்தில் மட்டுமே வயல்களுக்கு நீர்பாய்ச்ச முடிகிற நிலையில் தவிக்கிறார்கள். எந்தெந்தத் தொழில் எல்லாம் மின்சாரத்தை அடிப்படையாக வைத்து இயங்குகிறதோ அத்தனை தொழில்களிலும் உற்பத்தியாகும் பொருள்களின் விலை அதிகரித்து விட்டது. இதன் விளைவுகுறித்து நீங்கள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

மனித உடல் குறிப்பிட்ட நேரச் சக்கரத்தின்படி இயங்குவது. தமிழக மக்களின் உடலின் கடிகாரம், இப்போது மின்சாரம் இருத்தல்-இல்லாதிருத்தல் என்பதைப் பொறுத்து இயங்குவதாக மாறி விட்டிருக்கிறது. மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை கிட்டத்தட்ட எல்லா வகுப்பு மக்களின் நேரச்சக்கரம் மாறிவிட்டது. இதன் விளைவு அடுத்த இரண்டு தலைமுறைகளைப் பாதிக்கக்கூடியது.

இது தமிழகத்தின் இருண்ட காலம். இருண்டகாலத்தில் பிறந்தநாளை வெளிச்சம்போட்டுக் கொண்டாடுவதை நீரோ மன்னனின் செயலோடுதான் ஒப்பிட முடியும்.

இறுதியாக,
அதே அன்னூரில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த சாலையின் மறுபுறத்தில் காலையில் கடைகளின் முன்னால் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தார் இந்தப் பெண்மணி. அவருக்கு பேனரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது, என்னென்ன பாராட்டுகள் உங்கள்மீது பாடப்படுகின்றன என்று படிக்கத் தெரிந்திருக்காது. அதனால் என்ன... அவர் கையை கவனமாகப் பாருங்கள். முடமான ஒரு கையில் நீர் வாளியை சுமந்து கொண்டு மறுகையால் நீர் தெளிக்கிறார்.

உங்கள் தொண்டர்கள் யாரை அம்மா என்று அழைக்கலாமென நீங்களே சொல்லுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகளுடன்


Wednesday, 13 February 2013

அனைத்துமொழி இலக்கியங்களுக்கும் சம மதிப்பு தேவை

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, சாகித்ய அகாதமி - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா இணைந்து அனைத்திந்திய எழுத்தாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தது. பிப்ரவரி 9ஆம் தேதி புத்தகத் திருவிழாவின் 18ஆம் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள் முன் வெளியிட்ட ஆங்கில வடிவத்தின் தமிழாக்கம் இது.

தொடக்கவிழாவிற்குத் தலைமை வகித்தார் சாகித்ய அகாதமியின் பொறுப்புத்தலைவர் திரு விஸ்வநாத் பிரசாத் திவாரி. ஞானபீட விருது பெற்ற முனைவர் பிரதிபா ராய் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார். மலையாள மொழியில் மூத்த எழுத்தாளர், கவிஞர், சாகித்ய அகாதமி நிறுவனத்தின் முன்னாள் செயலர் கே. சச்சிதானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
சாகித்ய அகாதமி செயலர் சீனிவாசராவ் வரவேற்புரை வழங்கினார். இந்த மாதம் 18 முதல் 22 வரை சாகித்ய அகாதமியில் இலக்கிய விழா - அதாவது, விருது வழங்கும் விழாவும் நடைபெற இருப்பதை அறிவித்தார். இந்த ஆண்டு சச்சிதானந்தன் அவர்களும் விருது பெற இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பன்மொழிக் கவிதைகள், சிறுகதைகள் வாசிக்கப்பட்டன. எந்தவொரு இலக்கியத்துக்கும் அத்தியாவசியத் தேவைகளான புனைவு, நினைவு மற்றும் கற்பனை ஆகியவற்றை இயற்குடி மற்றும் வாய்மொழி இலக்கியங்களின் பொருத்தப்பாட்டில் ஆய்வதற்கான ஓர் அமர்வும் இடம்பெற்றது. 

காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பரிமாறப்பட்டு வரும் வாய்மொழி இலக்கியம்கதைகள், கற்பனைக் கதைகள், பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள்—ஆகியவை மனித வாழ்வு, பொருளியல் மற்றும் ஆன்மீகத்துக்கான உறுதியான தத்துவங்களைக் கொண்டவையாய் இருக்கின்றன. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலிருந்தும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்மொழிப் படைப்பையும் பதிப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவை காலத்துக்கும் நிலைத்திருக்கக்கூடிய வகையில் அச்சு வடிவில் பொக்கிஷமாக சேமிக்கப்பட முடியும்,” என்றார் சீனிவாசராவ்.

தலைமையுரை ஆற்றினார் விஸ்வநாத் பிரதாப் திவாரி. இலக்கியமும் புத்தகங்களும் மனிதவாழ்வின் வெளிப்பாடுகள். அதனால் அவை வாய்மொழி இலக்கியமாக ஆனாலும் சரி, எழுத்துவடிவ இலக்கியமானாலும் சரி, எல்லாக் காலங்களுக்கும் தாக்குப்பிடித்து நிற்கக்கூடியவை. புத்தகங்கள் வாசகனுக்கு பாதையைக் காட்டக்கூடியவை. இருட்டில் வழி தெரியாமல் தடுமாறும் ஒருவன் புத்தகம் என்னும் விளக்கை நாடும்போது அவனுக்குப் பாதை தெரிகிறது. ஆனால் இன்று புத்தகங்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனசில சவால்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருபவை, வேறு சிலவோ புதிதாக உருவானவை. நாம் கடந்த காலத்தை நோக்கினால், உலகின் பல பகுதிகளிலும் எழுத்தாளர்கள் தூக்கிலிடப்பட்டதை, சுட்டுக்கொல்லப்பட்டதை, சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதை வரலாற்றில் காணமுடியும். எழுத்தாளன் என்பவன் தான் மகத்தான உண்மையை உலகுக்காக எழுதுவதாக நம்புகிறான், இந்த நம்பிக்கையே அவனை எழுதவைக்கிறது. ஆனால் மக்களாட்சிமுறைக்கு எதிரான, எதேச்சாதிகாரச் சக்திகள், கருத்துகளை அடக்க முனைகின்றன. இதை நாம் எதிர்த்தாக வேண்டியிருக்கிறது, ஏனென்றால், இலக்கியமும் புத்தகங்களும் இல்லாமல் எதுவும் முன்னேற்றம் காண்பதில்லை.” என்றார்.

புத்தகங்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால், இன்றைய தொழில்நுட்ப சாதனங்களின் ஆதிக்கம். வீடுகளில் புத்தகங்கள் தமக்கான இடத்தைத் தேடுகின்றன. ஆனால் பெரும்பாலான வீடுகளில் புத்தகங்களுக்குக் கிடைக்கும் இடம் ஆகக் கடைசியான இடம்தான், என்று கூறிய அவர், தன் கவிதைத் தொகுப்பிலிருந்து பழைய கவிதையை வாசித்தார். (இந்தியில் அவர் வாசித்த கவிதையின் சுருக்கம் இங்கே வழங்கப்படுகிறது) :
ஒரு நூல் இருளில் வைக்கப்பட்டிருக்கலாம்
அணுகமுடியாத இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம்
பலப்பல ஆண்டுகளுக்கும் அப்படியே கிடந்திருக்கலாம்
ஆனால் ஒருநாள் யாரேனும் ஒருவன் வருவான்
அறிவையும் ஞானத்தையும் தேடி
அப்போது அவன் புத்தகத்தைக் கண்டடைவான்
புத்தகம் தனக்கான வாசகனைக் கண்டறியும்.

இந்திய இலக்கியங்கள், இலக்கியத்தும் வரிவடிவத்துக்கும் இடையிலான உறவு, இலக்கியத்தின் பன்மைகள், இறுதி இலக்கு ஆகியவை பற்றி உரையாற்றினார் முனைவர் பிரதிபா ராய். இந்திய இலக்கியத்தின் ஒற்றைத்தன்மை என்பது குறித்தான எந்த விவாதம் எழும்போதும், ஆய்வறிஞர்களும் இலக்கிய வரலாற்றாசிரியர்களும் பன்முக ஒற்றுமை என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். சர்ச்சையிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, இந்திய இலக்கியம் என்பது சொற்பொருளிலும் கருப்பொருளிலும் முழுமையானது என்னும் மறுக்க முடியாத உண்மையை உறுதி செய்வதற்காக. சினிவாச ஐயங்கார் உள்பட பலர் கூறியதுபோல, பல மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றே.”


மொழியும் இலக்கியமும் பற்றிப் பேசும்போது, ஒரு சொல் மற்றவரின் சிந்தையில் நுழைந்து, பொருள் தந்து, சிந்தனையையும் உணர்வையும் தூண்டும்போது மொழி பிறக்கிறது. உணர்வுகள், மகிழ்ச்சிகள், வேதனைகள் ஆகியவற்றின் தேர்ந்த சொல்லடுக்கை மனிதன் உருவாக்கி உலகப் பொதுவானதாக ஆக்கும்போது இலக்கியம் பிறக்கிறது. சொல்லாற்றலுடன் கூடிய இலக்கியம் ஆளுமையை, உருவாக்குகிறது, ஞான ஒளி ஏற்றுகிறது, மனச்சாட்சியை விழிக்க வைக்கிறது,என்று கூறிய பிரதிபா ராய், முத்தாய்ப்பாகக் கூறினார் ஒட்டுமொத்தத்தில் எல்லா எழுத்தாளர்களும் ஒரே பாடலைத்தான் பாடுகிறார்கள், ஒரே கருத்தையே எழுதுகிறார்கள் - அன்பும் அமைதியும் என்பதே அது. நாம் அன்பு செலுத்துவோம் அனைவரையும் வாழவைப்போம்.”

இந்திய இலக்கியம் என்ற கருத்தாக்கம், அதன் பன்முகத்தன்மை மற்றும் பொதுத்தன்மைகள், செய்யவேண்டியவை என்ன என்பது விரிவான உரையாற்றினார் சச்சிதானந்தன்.


நாம் இன்று காண்கிற இந்திய இலக்கியம் என்ற கருத்தாக்கம் மேற்கத்தியப் பார்வையின் தாக்கத்துக்கு பெரும்பாலும் ஆட்பட்ட கருத்தாக்கம்தான். தெற்காசியாவுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு, இலக்கியம் என்பது மையக் கருப்பொருளாக இருக்கிறது. ஆனால் உலகத்தின் இலக்கிய வரலாற்றில் அதற்கு மிகக்குறைவான அல்லது ஓரம்கட்டப்பட்ட இடம்தான் கிடைத்திருக்கிறது. காரணம், இந்தியாவைப் பற்றிய ஐரோப்பியர்களின் கருத்து சமஸ்கிருதப் பிரதிகள் பற்றிய அவர்களின் புரிதலின் அடிப்படையில் ஆனது. 18ஆம் நூற்றாண்டு முதலான இந்திய இலக்கிய வரலாற்றில் இதைப் பார்க்க முடிகிறது. இவை சமஸ்கிருதத்தை மட்டுமே பேசுகின்றன, அத்துடன் இந்தியா புத்திலக்கியத்திற்கு முன்னேறிய 20ஆம் நூற்றாண்டு வரையிலும்கூட இதே நிலை தொடர்ந்தது.
“சான்றாக, சமஸ்கிருதம் எந்த அளவுக்குப் பழமையானதோ அதே அளவுக்குப் பழமையான மொழி தமிழ். ஆனால் வரலாற்றாசிரியர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தமிழைப்பற்றிக் குறிப்பிடக்கூட இல்லை. அவர்கள் (பிராந்திய) மொழிகளையும் அவற்றின் பிரதிகளையும் ஒதுக்கி வைத்தார்கள். அதிலும் குறிப்பாக, நமது நிஜ வேர்கள் பதிந்திருக்கின்ற, வாய்மொழி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்கள் என்ற பாரம்பரியத்தையே புறக்கணித்தார்கள். அவையெல்லாம் பேசப்படக்கூடாதவை, தீண்டத்தகாதவை என்று அவர்கள் கருதினார்கள். பெரிதும் புறக்கணிக்கப்பட்டது வடகிழக்குப் பிராந்திய மொழிகளும் இலக்கியமும்தான். இந்தியா என்ற நமது கருத்தாக்கத்தில் உண்மையில் வடகிழக்கு இருக்கிறதா என்றேகூட எனக்கு கேள்வி எழுகிறது. நாம் காப்பியங்களைப் பற்றிப் பேசும்போது வாய்மொழிக் காப்பியங்களைப் பற்றிப் பேசுவதில்லை. இந்தப் பிரச்சினை அப்படியே தொடர்கிறது. இந்திய இலக்கியம் என்பதை ஒரே மொழிக்கும் ஒரே மதத்துக்கும் உரியதாக ஆக்கிவிடுகிறது இத்தகைய பார்வை. மிகவும் அபாயகரமான பார்வை இது. 
இந்திய இலக்கியம் பற்றிய நம் புரிதல் மேற்கத்தியப் புரிதல். எனவே அது கீழையியல் நோக்கில்தான் பார்த்தது. கிழக்கு தேசங்களில் மரபுப் படிநிலைகளின்படி சில உயர்ந்தவை சில தாழ்ந்தவை என்று பார்த்தது. இது மிகத் தவறான, மேம்போக்கான புரிதல் கொண்ட பார்வை. இது மொழிகளில் உள்ள வேறுபாடுகளையோ அந்தந்த மொழிக்கே உரிய சிறப்புக் கூறுகளையோ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.


யு.ஆர். அனந்தமூர்த்தி ஒருமுறை கூறினார், இந்திய இலக்கியத்தின் பன்முகத்தன்மையை நாம் பார்க்க முனையும்போது அதன் ஒற்றுமை புரியும்; நாம் அதன் ஒற்றுமையைப் பார்க்க முனையும்போது பன்முகத்தன்மைகள் புலப்படும் என்று. சில மொழிகள், இலக்கியத்தின் பல வடிவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன, வேறு சில மொழிகள் சில வடிவங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கின்றன. சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட சில வடிவங்களும் இருக்கின்றன, பகிர்ந்து கொள்வதால் அவை பரஸ்பரம் சேர்ந்து வளர்கின்றன.
“மொழிகள் மற்றும் இலக்கிய இயக்கங்களில்பழங்குடி மக்கள் இலக்கியம், காப்பியங்கள், நாடகங்கள், கவிதைகளில் பொதுத்தன்மைகள் காணக்கிடைக்கின்றன. 3ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை செவ்விலக்கியங்களின் காலம். சான்றாக சமஸ்கிருத காப்பியங்களும் தமிழில் சங்க இலக்கியங்களும் மலர்ந்த காலம். சங்க இலக்கியத்தை மோதலையும் காதலையும் பற்றிய கவிதைகள் என்றார் ராமாநுஜன். 
“5ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டுவரை பக்தி இலக்கியங்களும் சூபி மரபும் வலுவாக இருந்தன. இவற்றை கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் காணலாம்கீர்த்தனைகள், பஜனைகள், சூபி பாட்டுகள், வடகிழக்கு மாநிலங்களின் வாக் வடிவங்கள் போன்றவை அவை. இவை மனிதம் மற்றும் மதத்தை மேலும் புரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன. பக்தி இலக்கியம் சாதி அமைப்பை மறுதலித்தது. அது உள்ளடக்கத்தில் புரட்சிகரக் கருத்துகளைக் கொண்டிருந்தது. சமத்துவத்தை நோக்கிய பாதையில் பெரிய மாற்றத்தை பக்தி இலக்கியங்கள் உருவாக்கின. சான்றாக, கபீர், மீரா, பசவண்ணா, சூபி சாதுக்கள் போன்றோரின் பாடல்கள். அவர்கள் கடவுளிடம் நேரிடையாக முறையிட்டார்கள், கடவுளுக்கும் தமக்கும் நடுவே யாரையும் அவர்கள் ஏற்கவில்லை. 
“பிறகு சுதந்திரப்போராட்ட காலத்தில் வேறுவகை இலக்கியங்கள் தோன்றின. வடக்கே தாகூர், தெற்கே பாரதி போன்றோர் வந்தனர். பிறகு முற்போக்கு இலக்கியம் வந்தது. அதன்பிறகு தற்காலத்தின்இயற்குடிகள் இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், கடவுள் மறுப்பு மற்றும் தேசிய இனம் சார்ந்த எழுத்துகள் என பல்வகை இலக்கிய வடிவங்கள்  வந்தன. இவை எல்லாமே ஒவ்வொரு மொழியிலும் கூடவோ குறையவோ இருக்கவே செய்கின்றன. ஒவ்வொரு மொழியிலிருந்தும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றன.
நமக்கு இப்போது என்ன தேவை என்ற கேள்வி எழுகிறது. நம்மிடம் கூட்டாட்சி அரசியல் சாசனம் இருக்கிறது. அதேபோல இந்திய இலக்கியம் பற்றிய கூட்டாட்சிக் கருத்து தேவைப்படுகிறது. இக்கருத்து பன்முகத் தன்மையை மதிப்பதாக இருக்க வேண்டும். ஒரு மதம், அல்லது ஒரு மொழியைக் கொண்டதாக நமது இந்தியாவை நாம் கற்பனை செய்ய முடியாது, கூடாது. பல்வேறு பண்பாடுகளுக்கு உரிய இடம் அளித்தாக வேண்டும். கீழையியல் என்ற கருத்தின்படிப் பார்க்காமல் தலித் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களையும் அணைத்தழைத்துச் செல்ல வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் அனைத்து இலக்கியங்களுக்கும் சமமான இடம் இருக்கக்கூடிய ஓர் இந்திய வரைபடத்தை நாம் உருவாக்க வேண்டும்.”

சச்சிதானந்தனின் உரை பெரும் வரவேற்புப்பெற்றது. பன்மொழி நிகழ்ச்சி என்பதும் வரவேற்புக்குக் காரணம் என்று தோன்றுகிறது.


அடுத்த அமர்வில், கவிதை வாசிப்பு நிகழ்ந்தது. அஸாமிய மொழியில் ஜீபன் நாரா, இந்தியில் கங்கா பிரசாத் விமல், மணிப்புரியில் இபோம்சா சிங், பஞ்சாபியில் பர்ஜீந்தர் சௌஹான், தமிழில் சக்தி ஜோதி, தெலுங்கில் பி. மோகன், உருது மொழியில் சந்திரபான் காயல் ஆகியோர் தமது கவிதைகளை வாசித்தனர். 

பிற்பகலில் சிறுகதை வாசிப்பு அமர்வில் அஸாமிய மொழியில் குலாதர் சைக்கியா, இந்தியில் பல்ராம், ஒடியாவில் பேபஷிஷ் பாணிக்ரஹி, சிந்தி மொழியில் சிந்து மிஸ்ரா ஆகியோர் தமது சிறுகதைகளை வாசித்தனர். மிருதுளா கர்க் இந்த அமர்வுக்குத் தலைமை வகித்தார்.

இறுதியாக, ஆய்வுரை சமர்ப்பிக்கும் அமர்வு ஒன்று நிகழ்ந்தது. புத்தகத் திருவிழாவின் மையக்கருத்து பழங்குடி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்கள் என்பதால் அதையொட்டி புனைவுகள், நினைவுகள் மற்றும் கற்பனைகள்: பழங்குடி மற்றும் வாய்மொழி இலக்கியம் என்ற தலைப்பில் கவிஞரும் எழுத்தாளருமான மமங் தாய், வடமேற்கு பிராந்திய பழங்குடி ஆய்வில் புகழ்பெற்றவரான பகவான்தாஸ் படேல் ஆகியோர் ஆய்வுரை அளித்தனர். சிறந்த மொழிபெயர்ப்பாளரும் சாகித்ய அகாதமியில் பணிபுரிந்தவருமான நிர்மல்காந்தி பட்டாசார்ஜி இந்த அமர்வுக்குத் தலைமை வகித்தார்.

அஸாமியா, மணிப்புரி, தமிழ், தெலுங்கு மொழிக் கவிஞர்கள் ஆங்கில மொழியாக்கத்தையும் அளித்தனர். ஆனால் இந்தி, பஞ்சாபி, உருது மொழியினர் அவரவர் மொழியிலேயே வாசித்தனர். எனவே, என்னைப்போன்றவர்களுக்கு அவை புரிபடவில்லை. இந்திக் கவிஞர் பிரபலமானவர். சாகித்ய அகாதமி எதிர்காலத்தில் இதுபோன்ற பன்மொழி அமர்வுகளை ஏற்பாடு செய்யும்போது, ஆங்கிலத்தில் வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினால் நல்லது.

தமிழில் கவிதை வாசித்த சக்தி ஜோதியின் கவிதையில் ஒன்று மட்டும் கீழே - இன்றைய நடுத்தர வர்க்கக் குழந்தைகளை சித்திரிக்கும் கவிதை என்பதால் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.


காவ்யாவும் சிட்டுக்குருவியும்

காவியா
கம்ப்யூட்டர் கேமில்
விவசாயம் செய்து பழகி விட்டாள்
பொட்டட்டோவில் புழு வருமா எனக்கேட்டு
மருந்தடிக்கத் துவங்கினாள்
முன்னூறு ரூபாய்க்கு முதலீடு செய்து
எண்ணூற்று இருபத்து ஐந்து ரூபாய்க்கு அறுவடை செய்து
ஐநூற்று இருபத்தைந்து ரூபாய் லாபம் பார்த்து விட்டாளாம்.
பிறகு மாற்று விவசாயமாக
தக்காளியை பயிர் செய்கிறாள்
பன்னிரெண்டாம் நாளில் செடிகளில் இலைகள் துளிர்ப்பதாக
கணக்கும் சொன்னாள்
கம்ப்யூட்டர் விவசாயம் கற்றுக்கொண்ட காவியாவுக்கு
பின்பொரு நாளில் 
விவசாயம் செய்ய நிலமிருக்கிறதா
...
விவசாயம் என்பதை லாப விளையாட்டு என்று
நினைக்கிறாளா என்பதும் தெரியவில்லை.
இப்போது அவள்
மோட்டார்வாகனப் பந்தயத்திற்கு மாறிவிட்டாள்

என்டோசல்பான் பூச்சி மருந்திற்கு
காலிபிளவரிலுள்ள புழுக்கள் செத்துவிடுகின்றன.

பாவம் சிட்டுக்குருவிகள் என்ன செய்தன
காவியாக்கள் சிட்டுக்குருவிகளாக மாறி
அனைவரின் வீட்டு
வரவேற்பறைகளிலும் அமர்ந்திருக்கின்றனர்.
கேள்விகளாய்.

Sunday, 10 February 2013

படித்ததில் பிடித்தது - 3

நாகா வரலாறு: இந்தியாவில் முதல் ஆயுதப் போராட்டம்

முன்னுரை - இரண்டு நாட்களுக்கு முன், ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பாக அமைச்சர் ப. சிதம்பரம் பேசிய செய்தி பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் இடம்பெற்றது.  அரசுக்கும் ராணுவத்துக்கும் இந்த விஷயத்தில் கருத்து ஒற்றுமை இல்லை என்பதால்தான் இந்த சட்டத்தைத் திருத்த முடியவில்லை என்றார் அவர். அரசுக்கே சட்டத்தைத் திருத்துவதில் உண்மையான அக்கறை இல்லை என்பதே உண்மை.  இந்த அரசுக்கு மட்டுமல்ல, விடுதலைக்குப் பிந்தைய எல்லா அரசுகளுமே அடக்குமுறையை மட்டும் நம்பி வந்துள்ளன, வருகின்றன.  பத்து நாட்களுக்கு முன் மொழிபெயர்க்கத் துவங்கிய இந்த நூல் அறிமுகக் கட்டுரை, வடகிழக்குப் பிரச்சினையின் வேர்களின்மீது வெளிச்சம்போட்டுக் காட்ட உதவும் என நம்புகிறேன். வேலைப்பளு காரணமாக அப்போது வெளியிட முடியாமல் போனதும்கூட ப.சி. இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்பதற்காகத்தானோ...
கஷ்மீரப் பிரச்சினை குறித்து தமிழில் பல நூல்கள் மொழியாக்கத்தில் வெளிவந்த பிறகும்கூட பொதுமக்கள் மத்தியில் கஷ்மீர் குறித்த புரிதல் பொதுப்புத்தி சார்ந்த தேசியவாத நோக்கிலானதாகவே இருக்கிறது. இந்த நிலையில் இவர்களுக்கு வடகிழக்குப் பிரச்சினை குறித்து என்னவிதமான கருத்து இருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம்.
* * *
இந்தப் புத்தகம் வாசிக்கத் துவங்கியதுமே பிடித்து இழுத்து இருத்தி வைத்துக்கொள்கிறது. உலகப் புத்தகத் திருவிழா வேலைகளில் மூழ்கியிருப்பதால் இப்போது முழுதும் படிக்க முடியாது. ஆனாலும் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமலும் இருக்க இயலவில்லை. வடகிழக்கின் சிக்கல்களை வரலாற்றுபூர்வமாக பதிவு செய்கிறது இந்நூல்.
Spring Thunder என்னும் தலைப்புக்கொண்ட முதல் அத்தியாயத்திலிருந்து முதல் சில பக்கங்களின் மொழியாக்கம் இது. செம்மைப்படுத்தாத மொழியாக்கம் குறையாக இருக்காது என நம்புகிறேன். நாகா இனமக்கள் என்பதற்கான Nagas என்ற சொல்லை நாகர்கள் என மொழியாக்கம் செய்தால் தமிழகத்திலும் இலங்கையிலும் வசித்த நாகர்களாகப் பொருள்படக்கூடிய சிக்கல் இருக்கிறது. எனவே நாகாக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.
* * *
வசந்தத்தில் இடிமுழக்கம்
1953 மார்ச் 30 தேதி வசந்தகாலக் காலை பிரகாசமாகவும் சுள்ளென்ற வெயிலுடனும் விடிந்தது.  அங்கமி, சாக்கேசாங், மாவோ, லோதா, ஆவோ என நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகாவாசிகள் கோஹிமா நோக்கி வந்திருக்கிறார்கள். வண்ணமயமான சால்வைகள் போர்த்திக்கொண்டும், விதவிதமான தலைப்பாகைகளோடும், கனமானதும் லேசானதுமான தந்தக் கைவளைகளை அணிந்தவர்களுமாய் இம்பாலிலிருந்து கோகிமா வரும் சாலையின் இருபுறங்களிலும் ஒழுங்கான வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். மணிப்பூரின் தலைநகர் கோஹிமாவுக்கு வருகை தர இருந்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அவரை வரவேற்கத்தான் காத்திருக்கிறார்கள் நாகாவாசிகள்.
நேரு முதல்முறையாக கோஹிமா வர இருந்தார். அவருடன் அவருடைய நண்பரும் பர்மாவின் பிரதமருமான ஊ நூ-வும் வருகை தர இருந்தார். தில்லியிலிருந்து வரும் ஊ நூ-விடம், பல ஆண்டுகளுக்கு முன் மணிப்பூருடன் இணைக்கப்பட்ட காபா பள்ளத்தாக்கை மீண்டும் பர்மாவுக்கு ஒப்படைப்பதற்காக வருகிறார் நேரு. இந்த நிகழ்ச்சிக்காகத்தான் இருவரும் கோஹிமா வருகிறார்கள்.
அவர்கள் வருவதற்கு சற்று முன்னர் கோஹிமாவின் காவல்துறை துணை ஆணையர் சத்யேன் பர்கடோகி ஆயுதமேந்திய குதிரைப்படை போலீசாருடன் அங்கு வந்து சேர்கிறார். சாலையோரம் காத்திருக்கும் நாகாக்கள் பிரதமரிடம் விண்ணப்பம் தர முயற்சி செய்யக்கூடும் என்று உளவுத்துறை அவரிடம் தெரிவிக்கிறது. நாகாக்கள் காலம்காலமாக தமக்கே உரிய வாழ்க்கை வாழந்து வந்திருக்கிறார்கள், அவ்வாறே தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண்டுமென அவர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்கிறது உளவுத்துறை. இப்படியொரு கோரிக்கை வைப்பது நேருவை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்றும், விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு ஏதும் தந்துவிடக்கூடாது என்றும் கருதுகிறார் பர்கடோகி. காத்திருக்கும் நாகாக்களை சாட்டைகளால் அடித்து விலக்குமாறு உத்தரவிடுகிறார்.
எதற்காகத் தம்மை அடிக்கிறார்கள், எதற்காக விரட்டுகிறார்கள் என்று புரியாமல் குழம்புகிறார்கள் நாகாக்கள். தமது சொந்த நிலத்தின்மீது நிற்கக்கூட தமக்கு உரிமை இல்லையா? அவர்கள் தன்னை வரவேற்பதை நேரு விரும்பவில்லையா?
சாலையில் நின்றுகொண்டிருந்த நாகாக்கள் மீதான தாக்குதல் பற்றிய செய்தி கோஹிமா நகரெங்கும் காட்டுத்தீபோலப் பரவுகிறது. நேருவை வரவேற்க வந்தவர்களில் நாகாக்களின் ஒரே அமைப்பான நாகா தேசிய கவுன்சிலின் உறுப்பினர்களும் இருந்தனர். நாகாக்களின் திறமைவாய்ந்த தலைவரும், கவுன்சிலின் பொதுச்செயலருமான தியோ சக்ரேயி தன் ஆதரவாளர்களுடன் இதைப்பற்றி ஆலோசனை நடத்துகிறார். காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியபின் நேருவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என முடிவு செய்கிறார்.
கோஹிமா கால்பந்து விளையாட்டு மைதானம் நாகாக்களால் நிரம்பி இருந்தது. சக்ரேயி அவர்களிடம் பேசினார் - நேரு பேசுவதை நாம் கேட்பதை அதிகாரிகள் விரும்பவில்லை போலத் தெரிகிறது. அவரை வரவேற்கக் காத்திருந்த நம் மக்கள் சாட்டைகளால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். நீங்களும் வீடுகளுக்குப் போகலாம்.
நேரு, ஊ நூ மற்றும் அவர்களுடன் வந்த பரிவாரம் கோஹிமாவை வந்தடைகிறது. நேரு உற்சாகத்துடன் மேடைமீது ஏறத்துவங்கும் நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாய் புறப்படத் துவங்குகிறார்கள். பிரதமருக்கு ஏதும் புரியவில்லை. இவ்வளவு நேரம் காத்திருந்தவர்கள் எதற்காகச் செல்கிறார்கள்? மைக்கைப் பிடித்த நேரு அவர்களை சமாதானம் செய்ய முயன்றார் - தயவுசெய்து அமருங்கள். நான் உங்களிடம் பேச வேண்டும். அமருங்கள்.
ஆனால் கால்பந்து மைதானம் காலியாகி விட்டது. சிவப்புக் கம்பளிகள் போர்த்தியிருந்த அரசாங்க மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் மட்டுமே அங்கே இருந்தனர். நேரு தன் வாழ்க்கையிலேயே இதுவரை சந்தித்திருக்காத நிலைமை இது. இதைவிட அவமானம், அதுவும் தன் பழைய நண்பர் ஊ நூ முன்னால், தனக்கு நிகழ்ந்ததே இல்லை என்று நேருவுக்குத் தோன்றியிருக்கும்.
சற்று நேரத்தில் அதிர்ச்சியிலிருந்து சுதாரித்துக்கொண்ட நிர்வாகம், நாகா ஊழியர்கள், கிராமத் தலைவர்கள் என சிலரை ஏற்பாடு செய்தது. நேரு அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்தச் சிறிய கூட்டம் ஏதோ இரங்கல் கூட்டம்போலத் தோற்றமளித்தது.
குதிரைப்படை போலீசின் சாட்டையடிகள் இந்திய மக்களுக்கும் நாகாக்களுக்கும் இடையே இருந்த உறவை நொறுக்கி விட்டது. இந்தியர்களுக்கு இரக்கமே இல்லை, தம்மை ஆளவே அவர்கள் விரும்புவார்கள் என்று ஜபுஃபிஸோ போன்ற தலைவர்கள் கூறிவந்தது உண்மைதான் என்று தோன்றியது நாகாக்களுக்கு.
நேருவும் ஊ நூ-வும் மணிப்பூர் திரும்பினார்கள்.
நேருவுடன் பெரிய பரிவாரமே வந்திருந்தது. அவர்களில் பத்திரிகையாளர்களும் பலர் இருந்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான நாகாக்கள் நேருவின் கூட்டத்தைப் புறக்கணித்த செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
1956 ஜூன் 11. கோஹிமா போராளிகளுக்கும் கீழே இருந்த அசாம் ரைபிள் படையினருக்கும் இடையே மோதல் துவங்கியது. நேருவின் கூட்டத்தில் பங்கேற்காமல் மக்கள் வெளியேறியது குறித்து நான் அப்போது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் நீண்ட கட்டுரை ஒன்றை நடுப் பக்கத்தில் எழுதினேன். அரசு வட்டாரத்தில் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் ஃபிராங்க் மோராஸ் அப்போது பம்பாயில் இருந்து செயல்பட்டு வந்தார். கோகிமாவில் மக்கள் புறக்கணிப்பு பற்றிய என் கட்டுரைக்கு மறுப்பு ஒன்றை வெளியிடுமாறு வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் அவருக்குத் தொலைபேசினார். தான் அவ்வாறு செய்ய இயலாது என்றும், அரசு இதை மறுத்து ஒரு அறிக்கை அளிக்குமானால் நிச்சயம் அதை வெளியிடுவேன் என்றும் கூறிவிட்டார் ஃபிராங்க். பிறகு, வெளியுறவுத்துறையின் இணைச்செயலராக இருந்த திரிலோகிநாத் கௌல் என்னை அணுகினார். என்னிடம் சொல்லப்பட்டதை வைத்து நான் எழுதிவிட்டதாகவும், அவையெல்லாம் உண்மையல்ல என்றும் ஒரு மறுப்பு எழுதுமாறு கேட்டுக்கொண்டார். நான் அதைச் செய்யவில்லை.
1950களில் நாகா மலைகளுக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட்டு, கைதுகளும் கிராமங்களுக்குத் தீவைப்பும் நிகழ்ந்தபோது தில்லியில் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுந்தன. 1956 ஆகஸ்ட் 23ஆம் நாள் நேரு அதற்குப் பதிலளித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் தான் கோஹிமா சென்றபோது நிகழ்ந்ததைச் சொன்னார். அந்தக் கூட்டத்தை நாகாக்கள் புறக்கணித்தது பற்றி அவர் குறிப்பிட்டார் - பர்மாவின் பிரதமர் நாகாக்களிடம் சில வார்த்தைகள் பேசட்டும் என்பதற்காக நாகா மக்களைத் திரட்டுமாறு நான் நிர்வாகத்திடம் கூறியிருந்தேன். நாகாக்கள் என்னிடம் விண்ணப்பம் ஒன்று தர விரும்புவதாக பின்னர் தெரிய வந்தது. விண்ணப்பம் தர அனுமதிக்க முடியாது என்று கோகிமா காவல்துறை துணை ஆணையர் அவர்களிடம் கூறினார். பிறகு, நானும் ஊ நூ-வும் அந்த இடத்தை அடைந்தபோது நாகாக்கள் கலைந்து செல்லத்துவங்கி விட்டனர். எனக்கு மிகவும் வேதனை ஏற்பட்டது. எனக்காக அல்ல, நம் விருந்தினருக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக.
நேருவின் கூட்டத்தைப் புறக்கணித்ததற்காக அஸாம் நிர்வாகம் நாகாக்கள்மீது கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்தது. அவர்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தார் பர்கடோகி. நேருவின் கூட்டத்தைப் புறக்கணித்த சக்ரேயி மற்றும் அவரது தோழர்களைப் பிடிப்பதற்காக நாகா கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிட்டார். கைதுகள் நிகழ்ந்தன. அரசு ஊழியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். சின்னஞ்சிறு கோஹிமா நகரத்தில்கூட ஏராளமான கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கைதுகளைத் தொடர்ந்து நாகாக்களின் ஒரே அமைப்பான நாகா தேசிய கவுன்சில் தலைமறைவு இயக்கமானது. விஸ்வேமா, ஜாகாமா, கிக்வேமா, ஃபெய்சாமா கிராமங்களில் காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியது. அனுமதி பெறப்பட்ட துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தது, ஏராளமானோரை கைது செய்தது.
நேரு இம்பாலுக்குத் திரும்பியதுமே கிராமங்களுக்குப் படையெடுத்த காவல்துறை மக்களை அடித்தது. கிராமத்தினருக்குப் பாடம் கற்பிக்க நினைத்தது. அமருங்கள் என்று நேருவே சொன்ன பிறகும் அதைக் கேட்காமல் இருக்கலாமா? வெளிநடப்புச் செய்ய எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?
சிலர் கொல்லப்பட்டனர். பார்ப்பவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கோஹிமா அருகே இருந்த மீமா கிராமத்தின் பீச்சாடாமி என்ற கிராமவாசியின் சடலம் தெருத்தெருவாக இழுத்துச்செல்லப்பட்டது.
ஆனால் ஏற்பட்டது அச்சமல்ல, ஆத்திரம். நாகாக்கள் மனதில் கோபம் கனன்றது. இறந்தவரைக்கூட அவமானப்படுத்தும் இவர்கள் எத்தகைய மனிதர்கள் என்று வியந்தார்கள், வேதனைப்பட்டார்கள்.
. . . .
நாகாக்கள் சிலர் காடுகளுக்குச் சென்று ஒளிந்து கொண்டார்கள், பின்னர் தீவிரவாதிகள் ஆனார்கள். அரசுப் பணியில் இருந்த நாகாக்களை ராஜினாமா செய்யுமாறு நிர்ப்பந்தம் செய்தார்கள். கிராமங்களிலிருந்து துப்பாக்கிகளைத் திரட்டினார்கள், காவல் நிலையங்களிலிருந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடித்தார்கள். கோஹிமாவிலும் மோகோக்சுங்-இலும் அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு நாகா தேசிய உயர்நிலைப் பள்ளிகளை நிறுவினார்கள்.
கிராமத் தலைவர்களை அரசு ஊழியர்களாகக் கருதிய அவர்கள், இனி ஆண்டுக்கு இரண்டு ரூபாய் வீட்டுவரி வசூலிக்கக்கூடாது என்று அறிவித்தார்கள். அரசு ஊழியர்கள் என்பதற்கு அடையாளமாக இருந்த சிவப்புக் கம்பளிகளைத் திருப்பித்தர உத்தரவிட்டார்கள்.
காடுகளில் ஒளிந்திருப்பவர்களை எதிரிகள் என்றது அரசு. அவர்களின் குடும்பத்தினருக்கு தண்டனை அளித்தது. பெரியவர்கள் இருதரப்பிலிருந்தும் துன்புறுத்தப்பட்டனர், சிலர் அரசுப் பணியைக் கைவிட்டனர்.
இளைஞர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. காடுகளில் இருந்தவர்களின் ஏஜென்டுகளால் இளைஞர்கள் சிலர் இழுத்துச் செல்லப்பட்டனர். தலைமறைவு ஹோம்கார்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர். வேறு சிலருக்கு துப்பாக்கிசுடும் பயிற்சி தரப்பட்டது. கிராமத்தினர் காவல்துறையால் தாக்கப்பட்டனர். ஊதியமில்லாத கட்டாய உழைப்புக்கு இழுத்துச்செல்லப்பட்டனர்.
மலைப்பகுதிகளில் இருந்த நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு 1953 செப்டம்பரில் அஸாம் அரசு கட்டாய உழைப்பு என்னும் சட்டத்தை அறிமுகம் செய்தது. சாலை போடுவது, காடுகளை அழிப்பது போன்ற பணிகளில் கிராமத்தினர் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இதிலிருந்து தப்பிக்க பலர் தலைமறைவு இயக்கத்தில் சேர்ந்தனர். இவர்களை ஒடுக்க இந்தியா மேலும் படைவீரர்களை அனுப்பியது.
இந்தியப் படையினருக்கு இந்தப் பகுதியும், இதன் மக்களும், அவர்களின் வாழ்க்கைமுறையும் அறிமுகம் இல்லாதது. ராணுவம் அடக்குமுறையை ஏவியது, பலநூறு கிராமங்களை தீவைத்து அழித்தது. இதில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது ஐம்பது ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்றுவரை தெரியாது. ராணுவத்தினால் இழுத்துச்செல்லப்பட்ட இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்பதும் இன்றுவரை தெரியாது.
நிலைமை மிகவும் மோசமடைந்தது. நாகாக்களின் தலைவர் ஜபுஃபிஸோ காட்டில் ஒளிந்திருந்தார். காட்டுக்குள்ளும் அவருக்கு பாதுகாப்பு இருக்காது என அவருக்கு நெருக்கமானவர்கள் கருதினர். அவரைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பெரும் தொகை சன்மானமாக அறிவித்திருந்தது இந்திய அரசு. எனவே, அவரை மணிப்பூரில் இருக்கும் தாமெங்க்லாங்க என்னும் பகுதிக்கு இடம் மாற்றினர். பின்னர் அங்கிருந்து அசாமின் சச்சார் மலைப்பகுதி வழியாக நடைபயணம் செய்து கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்றார் ஜபுஃபிஸோ. (கிழக்கு பாகிஸ்தான் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கதேசமாக மாறியது.) ஜபுஃபிஸோ, தலைநகர் டாக்காவில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கிருந்துதான் நாகாக்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் நிதியையும் பெறத்துவங்கினர். அவர்களுக்கு உதவுவது தனக்குப் பயன் தரும் என்று கருதியது பாகிஸ்தான். அல்பச் செலவுதான், ஆனால் இந்திய ராணுவத்தின் கணிசமான வளத்தை இந்தியா வடகிழக்கில் செலவிட நேர்ந்தது. பாகிஸ்தான் இதை பகிரங்கமாகச் செய்யவில்லை, இதைப்பற்றி கேள்வி கேட்கும்போது மறுத்தது.
. . . .
இந்தியாவுக்கு இது மேலும் வசதியாகிப்போனது.
* * *
மேலும் வாசிக்க -
The Naga Story: First Armed Struggle in India; Harish Chandola; Chicken Neck (an imprint of Bibliophile South Asia), C-127 Sarvodaya Enclave, New Delhi-110017; Rs 600 (Paperback)

இந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட யாரேனும் விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். பதிப்பகத்தாருடன் பேசவும் உதவ இயலும்.

Need for a Federal Concept of Indian Literature


The All India Writers’ Meet organised by Sahitya Akademi and National Book Trust, India was held at Auditorium No. 2, Hall No. 18 on Saturday, 9 February 2013, at the World Book Fair. The inauguration session was chaired by Shri Vishwanath Prasad Tiwari, Acting President of the Akademi. Dr. Pratibha Ray, eminent writer and Jnanpith awardee was the Chief Guest and Prof. K. Satchidanandan was the Guest of Honour on the occasion.


Welcoming the special guests, poets, writers and the audience, Shri Sreenivasarao, Secretary, Sahitya Akademi, informed the audience about the Festival of Letters that is to take place from 18-22 February 2013. The Meet witnessed excellent poetry and short story readings from different Indian languages, and explored the tribal and oral literature in connection with myth, memory and imagination—integral and essential elements in any literature.
“The oral literature—stories, fables, poems, proverbs and idioms—that have been passed on through generations contain concrete philosophies of human life, material and spiritual life,” Shri Sreenivasarao said. “Hence,” he added, “we must be keen on getting published every creative work from oral literature of every Indian languages so that it can be treasured to survive in published form for ages.”

Delivering his presidential address, Shri V.P. Tiwari said that “Literature and books are expressions of human life and hence they will survive through for all ages, may they be in the form of oral or written. Because, books show the path to the readers. When one is gropping in dark, and when he reaches a book, he do finds that path. But, nowadays, books are facing challenges—some that have been there for centuries and some new. When we look at the past, we find writers hanged, killed, shot or jailed in various parts of the world. Writer thinks that he is writing the great truth and this faith of his makes him write. But the undemocratic dictatorial forces try to suppress the views which needs to be challenged, because without literature and books nothing improves.”
Another challenge, he observed, was the electronic invasion of the electronic gadgets. “Books are searching for their spaces in homes but in many homes they find place of garbage.” He read out from one of his Hindi poetry collection, of which, a gist is given in English translation:
A book might have been kept in the dark
in an inaccessible place
for years and years
but one day
someone will come
in search of wisdom
and he will find the book
and the book find its reader.

Dr. Pratibha Devi spoke about Indian literature, the relationship between literature and scripts, diversity in literature and the ultimate result. “Any debate over the homogeneity of Indian literature is resolved in terms of a multifocal unity by scholars and literary historians alike, not to steer clear of a controversy but to assert a valid truth that Indian literature is a semantic-thematic whole. As Srinivas Iyengar and others have said, Indian literature is one although written in different scripts.”
Speaking on the language and literature she said, “Language is created when word reaches the core of the other’s self with a meaning, provoking thought and feeling. When the finest bit of man’s realisation, his suffering and celebration inscribe the unique into the universal, literature is born. Literature with word power creates character, promotes personality, ignites wisdom, even awaken conscience.” At the end of her speech she observed, “Ultimately all writers sing the same song, write the same theme, i.e. love and peace. Le us Love and Let Live.”


Prof. Satchidanandan spoke about the idea of Indian literature, its diversity and commonalities, and what needs to be done. “The idea of Indian literature, as we see today, has been mostly influced idea of the western view. Literature is a central theme of South Asia, particularly India, but it finds very small and marginal place in the literary history of the world. Because, Europeans’ view of India is based on their understanding on Sanskrit text. This can be seen in histories of Indian literature since 18th century. These speak only about Sanskrit literature and the same continued even upto 20th century, when India had developed into modern literature. For instance, Tamil, which is so ancient and rich as Sanskrit, is not mentioned anywhere by the so-called historians. They kept out the languages and their texts, and the most important of our tradition, i.e. folk and oral literature, where lies our real roots. They considered them as those not to be spoken or untouchable and the northeast was the mostly ignored. I wonder if our idea of India really had the northeast in it. When we talk about epics we do not talk oral epics. And the problem continues and this outlook reduces Indian literature to one language and one religion, which is to an extremely dangerous view.
“The understanding of Indian literature has been a western one, and it looked at it in an orientalistic view—their view of East, where some hierarchies are superior and some are inferior. This is a very wrong, simplified understanding. It does not take into consideration the differences and specifities of languages.
“U.R. Anandamoorthy once said, ‘when we look for diversity of Indian literature we see the unity; and if we look for unity in Indian literature, we see the diversity’. Some languages share some forms of literature while some have only few of them. There are also equally shared forms and by sharing they grow along. There are commonalities in the movements in languages and literature—tribal, epics, dramas and poetry. From 3rd to 14th centuries there were classic literatures, for instance classics of Sanskrit and Sangam literatures of Tamil which were Ramanujam called ‘poems of war and love’. From 5th to 19th centuries there were bhakti and Sufi literature which can be seen in almost all languages—vaks, kirtans, bhajans and sufi songs etc—for greater understanding of humanity and religion. Bhakti rejected caste system, it was radical in contents and created a major change towards equality, for instance, Kabir, Meera, Basava, Sufi who directly addressed the God rejecting the intermediaries. When we come to the independence struggle period, we have Tagore, Bharathi and others. Then came the progressive literature, and various forms of the present day—tribal, dalit, feminist, atheist and regional.
“What we need to do is have a federal concept of Indian literature. We have federal constitution. This concept should respect the plurality and we cannot imagine India of one religion, one religion or one language. We need to accommodate diverse cultures, take minorities, dalits and other literatures which is free from orientalism. To be precise, we must create a new map with all Indian languages and literature have equal place.”
Prof. Satchidanandan’s address was well received by the audience.


The next session was the Poetry reading where poets Jiban Narah (Assamese), Ganga Prasad Vimal (Hindi), Ibomcha Singh (Manipuri), Barjinder Chowhan (Punjabi), Sakthi Jothi (Tamil), P. Mohan (Telugu), and Chandra Bhan Khayal (Urdu) recited their creations in their respective languages and English renderings.

Story Readings followed in the afternoon where Kuladhar Saikia (Assamese), Balram (Hindi), Bebasis Panigrahi (Odia), Sindhu Mishra (Sindhi) presented their stories to the audience. Mridula Garg chaired the session.

Later in the afternoon, a seminar on ‘Myth Memory and Imaginations: Tribal and Oral Literature’ was held where Ms. Mamang Dai, eminent poet and writer from Arunachal Pradesh, and Dr. Bhagwandas Patel, an eminent scholar of tribal studies presented their papers. The seminar was chaired by Nirmalkanti Bhattacharjee, an eminent editor and writer. The Seminar was organised on the Theme of the New Delhi World Book Fair on Folk and Tribal Literature.


Five poets presented their poetry in English transaltion. But Punjabi and Urdu poets read out in their own languages, and I hope, Sahitya Akademi will consider asking the poets to present in English for a multilingual audience in their future programmes. To quote a sample of poetries, one from the extreme south and one from the North.

The Western Wall
People lean their heads against
the Western Wall of the Temple Mount
erected by King Solomon
people offer their cries.
Those who demolished and rebuilt
this graves-filled city
are fosilled as history.
The Wall  contained loud cries, of the past
people write their yearnings
between its crevices
with their prayers earnest.
I tearfull invoked David, the Prophet
to descend and answer their prayers.
The sun sets
leaving its rays on the Wall
the rays of agony.
I now leave the Western Wall.
The tears dripped on the Wall
Has left on me a deep
winding scar.
- Sakthi Jothi, Tamil poet.

Krishna and Shiva
Men have many-layered ends and stigmas.
Krishna and Shiva are witness to this.
In their silences, many women
Seek Krishna and Shiva.
Krishna Shiva are
Here now and gone the next moment.
The one who has a lot of happiness
has a pile of stigmas as well.
That is why Krishna and Shiva
are universally popular
just as poison and nectar are.
- Jiban Narah, Assamese poet

(This article is likely to be posted in Tamil, if time permits — R. Shahjahan aka Pudhiavan)