Saturday 30 August 2014

2014 உலகப் புத்தகத் திருவிழாவில்....

எப்படி பதிவு எழுதி வைக்க மறந்துபோனேன் என்று தெரியவில்லை. வலைப்பூதான் என் கணக்குப் பதிவேடு. ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய நூல்களை இங்கிருந்துதான் அறிந்து கொள்ள முடியும். 


தமிழ் நூல்கள்
1. எரியாத நினைவுகள்; அசோகமித்திரன்; காலச்சுவடு; 255 பக்கம்; ரூ. 225
2. பல்லுயிரியம்; ச. முகமது அலி; வாசல்; 167 பக்கம்; ரூ. 140
3. டாக்டர் நார்மன் பெத்யூன் கதை; சிட்னி கார்டன், டெட் ஆலன்; தமிழாக்கம் சொ. பிரபாகரன்; மக்கள் பதிப்பு; 415 பக்கம்; ரூ. 125 
4. டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்; ஜி. நாகராஜன்; காலச்சுவடு; 150 பக்கம்; ரூ. 120
5. எது நிற்கும்? ; கரிச்சான் குஞ்சு; காலச்சுவடு; 222 பக்கம்; ரூ. 180
6. பால்யகால சகி; வைக்கம் முகம்மது பஷீர்; தமிழாக்கம் குளச்சல் மு. யூசுப்; காலச்சுவடு; 80 பக்கம்; ரூ. 60
7. வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நிலப்பரப்பு; ரேமண்ட் கார்வர்; காலச்சுவடு; 223 பக்கம்; ரூ. 200
8. ஆளண்டாப் பட்சி; பெருமாள் முருகன்; காலச்சுவடு; ரூ. 195
9. அப்பாவின் துப்பாக்கி; ஹினெர் சலீம்; தமிழாக்கம் வெங்கட சுப்புராய நாயக்கர்; காலச்சுவடு; ரூ. 90
10. ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்; பிரான்சிஸ் ஹாரிசன்; காலச்சுவடு; ரூ. 290
11. காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை; அருந்ததி ராய்; 120 பக்கம்; ரூ. 100
12. பட்டு; அலெசாண்ட்ரோ பாரிக்கோ; தமிழாக்கம் சுகுமாரன்; காலச்சுவடு; 119 பக்கம்; ரூ. 95
13. பனி; ஓரான் பாமுக்; தமிழாக்கம் ஜி. குப்புசாமி; காலச்சுவடு; ரூ. 450
14. சிவப்புத் தகரக் கூரை; நிர்மல் வர்மா; தமிழாக்கம் எம். கோபாலகிருஷ்ணன்; காலச்சுவடு; ரூ. 225
15. நானும் ஒருவன்; சுரேஷ்குமார இந்திரஜித்; காலச்சுவடு; ரூ. 100
16. என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி; வா. மணிகண்டன்; 80 பக்கம்; காலச்சுவடு; ரூ. 70
17. வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்; கிருபாகர் சேனானி; தமிழாக்கம் பாவண்ணன்; காலச்சுவடு; 215 பக்கம்; ரூ. 175
18. குற்றவாளிக் கூண்டில் ராஜபக்‌ஷே; ப. திருமாவேலன்; விகடன் பிரசுரம்; 192 பக்கம்; ரூ. 80
19. விலங்குகள் – 1000 தகவல்; சா. அனந்தகுமார்; அறிவுப் பதிப்பகம்; 114 பக்கம்; ரூ. 75
20. டாக்டர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ் கதை; பதிப்பாசிரியர் பிரபாகரன்; தமிழாக்கம் வீ.பா. கணேசன்; மக்கள் பதிப்பு; பக்கம் 64; ரூ. 20
21. நினைவுகள் அழிவதில்லை; நிரஞ்சனா; தமிழாக்கம் பரமேசுவரன்; சிந்தன் புக்ஸ்; பக்கம் 244; ரூ. 100
22. ஏழு தலைமுறைகள்; அலெக்ஸ் ஹேலி; தமிழாக்கம் எத்திராஜுலு; சிந்தன் புக்ஸ்; பக்கம் 272; ரூ. 130
23. இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்; சையத் ஜலாலுத்தீன் உமரி; இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட்; 128 பக்கம்; ரூ. 60
24. ஃபிக்ஹுஸ் ஸுன்னா இஸ்லாமியச் சட்டக் கருவூலம்; அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்; இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட்; 208 பக்கம்; ரூ. 80
25. முஸ்லிம் தனியார் சட்டம்; ஷம்ஸ் பீர்ஜாதா; இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட்; 56 பக்கம்; ரூ. 22
26. அன்புள்ள...... ; சிராஜுல் ஹஸன்; இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட்; 64 பக்கம்; ரூ. 28
27. பொது அறிவு வினாடி வினா; கே.எஸ். சுப்ரமணி; அறிவுப் பதிப்பகம்; 103 பக்கம்; ரூ. 55. 
28. சமத்துவபுரம்; சுகுமாரன்; அறிவுப் பதிப்பகம்; 65 பக்கம்; ரூ. 55
29. சூறாவளி; கிருஷ்ணாரெட்டி; தமிழாக்கம் எத்திராஜுலு; மக்கள் பதிப்பு; 136 பக்கம்; ரூ. 40
30. சவுதி அரேபிய அரங்கில் தமிழ் குரான் இலவசமாய் எனக்கு வழங்கினார்கள்.
31. பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், புத்தகம் பற்றிய புத்தகம் என்ற நூலை இலவசமாக வழங்கினார்கள்.
(பக்க எண்கள் குறிப்பிடாத நூல்களில் பாலிதீன் உறை பிரிக்கப்படவில்லை.)

ஷர்மிலா செய்யித் எழுதிய உம்மத் எடுத்து வைத்திருந்தேன். கடைசியில் தமிழ்ச் சங்க நூலகத்துக்கு பிரதி இருக்கவில்லை என்பதால் நூலகத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன். கேட்டால் ஷர்மிலா அனுப்ப மாட்டாரா என்ன... :)

நான்கு நாட்களுக்கு முன் வாங்கியவை
1. கொரில்லா - ஷோபா சக்தி
2. உண்மை மனிதனின் கதை- போரில் பொலெவோய்
3. திமிங்கல வேட்டை - ஹெர்மன் மெல்விஸ்
4. மகாத்மா பாராட்டிய மாமனிதர் ஜீவா - ச. குமார்
5. பிரேம்சந்த் கதைகள் - லதா ராமகிருஷ்ணன் மொழியாக்கம்
6. தரிசனம் - லா.ச. ராமாமிருதம்
7. நதியிலே விளக்குகள் - என். துபோவ்
8. அசடு காசியபன்
9. அவன் எழுதிய என் கதை சிவக்கண்ணன்
10. என் கதை (சார்லி சாப்ளின்) - யூமா வாசுகி தமிழாக்கம்
11. மனுசி - பாமா (ஏற்கெனவே வாங்கியது நினைவின்றி மீண்டும் வாங்கியது)
12. ஓலைப்பட்டாசு சுஜாதா
13. தன்னாட்சி - அர்விந்த் கேஜ்ரிவால்
14. சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்
15. கேள்விக்கு என்ன பதில் (காலச்சுவடு கண்ணன் கையெழுத்திட்டுப் பரிசளித்தது)

கடைசி நாள் ஆங்கில நூல்களின் பக்கம் மகள்களோடு சென்றபோது, ஏராளமான கடைகளில் அள்ளிக்கோ அள்ளிக்கோ என்று கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். மகள்கள் அவர்களுக்குப் பிடித்த டான் பிரவுன், மில்ஸ் அண்ட் பூன், …………. நூல்களை அள்ளினார்கள்.

நான் எனக்குப் பிடித்த நூல்களைத் தேடியபோது, பில் பிரைசன் நூல்கள் இரண்டைக் கண்டடைந்தேன். ஏற்கெனவே மின்நூல் இறக்கி வைத்திருக்கிறேன் என்றாலும் 100 ரூபாய்க்குக் கிடைக்கும்போது வாங்காமல் விடலாமா... அதேபோலத்தான் ஆர்.கே. நாராயணனின் நூல்களும், வேறு சில நூல்களும் 100, 150க்கு வாங்கினேன்.
1. Notes from a Small Island; Bill Bryson; 352 pages; Rs. 100
2. The Life and Times of The Thunderbolt Kid; Bill Bryson; 404 pages; Rs. 100
3. The Alchemist; Paulo Coelho; Rs. 100
4. Gulliver’s Travels; Jonathan Swift; Rs. 100
5. The Painter of Signs; R.K. Narayan; Rs. 100
6. The Vendor of Sweets; R.K. Narayan; Rs. 100
7. Mr. Sampath: The Printer of Malgudi; R.K. Narayan; Rs. 100
8. The Financial Expert; R.K. Narayan; Rs. 100
9. Waiting for the Mahatma; R.K. Narayan; Rs. 100
10. House of Cards; Sudha Murthy; Rs. 100
11. India; The Britannica Guide; Rs. 150
12. Anna Karenina; Leo Tolstoy; Rs. 150
முத்தாய்ப்பாக, சில்டிரன்ஸ் புக் டிரஸ்ட் நிறுவகர் சங்கர் நினைவாக குழந்தைகள் அரங்கில் அமைக்கப்பட்ட சிறப்புப் பகுதி குறித்து எழுதிய சிறு பதிவில் அவருடைய கார்ட்டூன் நூல் குறித்தும் எழுதினேன் அல்லவா... சிபிடி கடையில் அந்த நூலையும் வாங்கி விட்டேன். 
“Don’t Spare Me Shankar”—Jawaharlal Nehru; சங்கரின் கார்ட்டூன்களின் தொகுப்பு; Children’s Book Trust; Rs. 250. இதிலிருந்து சில கார்ட்டூன்களை தேர்வுசெய்து பகிர ஆசை. 

வாசிப்பை நேசிப்போம்

3 comments:

  1. மிகப் பெரிய, பறந்த list உங்களுடையது... :)

    நான் மாதம் ஒரு புத்தகம் படித்தாலே அதிகம்...

    பல புத்தகங்கள் பேரைக் கேள்விப்பட்டு வாங்கி அப்படியே வைத்துவிடுகிறேன்... அதனால், கடந்த இரண்டு வருடங்களாக, படிக்காத புத்தகம் மூன்றுக்கு மேல் இருந்தால் வாங்குவதில்லை என்ற கொள்கையை கடைப் பிடிக்கிறேன்... அதையும் மீறி வாங்கியது 'புயலிலே ஒரு தோனி'... படித்துக் கொண்டிருக்கிறேன்... நேற்று flipkart'இல் ஆர்டர் கொடுத்தது - Unreal Elections...

    ReplyDelete
  2. அற்புதத் தொகுப்பு...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. புத்தகம் உங்களிடம் விலைக்கு வாங்கிக்கொள்ளலாமா?

    ReplyDelete