பழைய பொருட்களை
வாங்குகிறவனின் சாக்குப்பைக்குள் அடங்கிவிட்ட இந்த வண்ண அச்சியந்திரம் விற்றவரின்
மனநிலை எப்படி இருந்திருக்கும்? இது வாங்கப்பட்டு
வீட்டை அடைந்த நாளில் முதல்முதலாக என்ன அச்சிடப்பட்டது என்பது விற்றவனுக்கு
நினைவிருக்குமா...?
மகள் அல்லது
மகனின் புகைப்படமா?
தன் திருமணத்தில்
மாலை மாற்றியதா?
குழந்தையின் பள்ளிக்கான
பிராஜெக்டா?
வேலையற்ற
இளைஞனின் பயோடேட்டாவா?
தூரத்து
நண்பனுக்குக் கடிதமா?
பென்ஷனுக்கான
விண்ணப்பமா?
விவாகரத்துக்கான
முறையீடா?
திருமணத்துக்கான
அழைப்பிதழா?
விண்டோஸில்
இருக்கும் ரோசாப்பூவின் படமா?
எதுவாகவும்
இருந்திருக்கலாம்
காதல் கடிதமாக
இருந்திருக்காது என்றே நம்ப விரும்புகிறேன் நான்.
*
வாலும் வாலும்
- டேய் வாலு
பாத்தியா?
- கொழுப்பா?
எதுக்கு வாலுன்னு
கூப்புடறே?
- அட கிறுக்கா...
வாலு பாத்தியான்னு கேட்டேன்.
- அடாடா... உனக்கு
வாலு முளைச்சிருக்கா? எங்கே காட்டு...
- போடா வாலு. வாலு
படம் பாத்தியான்னு கேட்டேன்?
- ஓ... வாலு படம்
எத்தினியோ பாத்திருக்கேனே... டெய்ல்ஸ்-னு ஒரு புத்தகம்கூட இருக்கு. பலவகையான
வால்கள் படம் போட்டிருக்கும். காட்டவா...?
- அய்யோ... நான்
அதைக்கேக்கலே. வாலு சினிமா பாத்தியா?
- ஓ... அதைக்
கேக்கறியா.... எனக்கெங்கே நேரம்? என் வாலைப்
பாக்கவே எனக்கு நேரமில்லே.
- என்னாது...
உனக்கு வால் முளைச்சிருக்கா?
- மூஞ்சியப்
பாரு... நான் பேஸ்புக் வாலைச் சொன்னேன்.
- கிழிஞ்சுது. நீ
எங்கே உருப்படப்போறே...?
- ஆமா... வாலு
பாத்துட்ட நீ மட்டும் உருப்பட்டுடுவே...?
Image courtesy - Book titled 'Tails', NBT India.
*
நட்பு தினச்
சிந்தனை
நட்பு எப்படி
இருக்கக்கூடாது...?
மேலே இருக்கிற படத்தில் விட்டா போதும்னு
அந்தக் குட்டிப் பொண்ணு ஓடுது பாருங்க... அது மாதிரி இருக்கக்கூடாது.
Courtesy:
English-Hindi Conversation Guide
*
HP ஸ்கேனர் என்னிடம்
இருந்தது. வாங்கியபோது 13500. இப்போது 15 ஆயிரம். அடிக்கடி கெட்டுப்போய் ஒரேயடியாக
மண்டையைப் போட்டு விட்டது. மலிவாக புதியது வாங்கலாம் என்று இணையத்தில் தேடினேன். HP Scanjet 200 Flatbed Scanner பிடித்திருந்தது.
இந்த ஸ்கேனரில்
சிறப்பு அம்சம் - மின்சார அடாப்டர் தேவை இல்லை. யுஎஸ்பி டேட்டா கேபிளே
மின்சாரத்தையும் வழங்கிக் கொள்கிறது.
ஹெச்.பி. தளத்தில்
4397 ரூபாய், ஆனால் சிறப்பு விலை 3999 ரூபாய் என்றது. தில்லியில் கம்ப்யூட்டர் சந்தையான
நேரு பிளேசில் வழக்கமான கடைக்குப் போனேன். வாங்கி வந்தேன். விலை 3100 ரூபாய்.
அதுவும் ஹெச்.பி. கடையில் அல்ல. சில்லறை விற்பனைக் கடையில். பில் உண்டு. வந்ததும்
ஆன்லைனில் ஹெ.பி. தளத்தில் வாரன்டிக்காக பதிவு செய்தும் ஆயிற்று.
அப்படியானால்
அடக்க விலை எவ்வளவு, லாபம் எவ்வளவு இருக்கும்?
ஆன்லைனில்
வாங்குகிறவர்களுக்காக சொல்லணும்னு தோணுச்சு. அம்புட்டுதான்.