புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா பிரகதி மைதானில் இன்று துவங்குகிறது.
• திருவிழா நாட்கள் - 7 முதல் 15 வரை
• அனுமதி நேரம் - 11 மணி முதல் 8 மணி வரை.
• நுழைவுக் கட்டணம் - சிறுவர்களுக்கு ரூ. 20, பெரியவர்களுக்கு ரூ. 30.
நுழைவுச் சீட்டுகள் பிரகதி மைதானின் எண் 1, 2, 5, 7,
10 ஆகிய வாயில்களில்
மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட சில மெட்ரோ நிலையங்களிலும் கிடைக்கும். (என்னிடம்
இலவச நுழைவுச்சீட்டுகள் சில உண்டு. தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளலாம்.)
• தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி நூல்கள் 12-12ஏ அரங்கில் இருக்கும்.
(மெட்ரோ ரயிலில் வந்தால், பின்புற வாயிலில் பிரகதி மைதானில் நுழைந்ததும் வலதுபுறம் இருப்பவை 12-12ஏ அரங்குகள்.)
• குழந்தைகள் நூல்களுக்கான அரங்கம் - 14
• குழந்தைகள் பெவிலியன் - 14ஆம் அரங்கு. இங்கே
குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து நடைபெறும்.
• ஆங்கில நூல்களின் அரங்குகள் - 8, 9, 10, 11, 18, மற்றும் 18ஏ என்ற பெயரிடப்பட்ட
கூடாரம்.
• வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் அரங்கம் - 7
• ஆங்கில எழுத்தாளர்கள் சந்திப்புக்கான மேடை - ஆதர்ஸ் கார்னர்
10-11 மற்றும் 18ஆம் அரங்குகளில் இருக்கும்.
• இந்தி எழுத்தாளர்கள் சந்திப்புக்கான மேடை - சாகித்ய மஞ்ச் 8ஆம் அரங்கில் இருக்கும்;
லேகக் மஞ்ச் 12-12ஏ அரங்கில் இருக்கும்.
• இந்த ஆண்டின் மையக் கருத்து - மனுஷி. பெண்களின், பெண்களைப் பற்றிய
படைப்புகள். இதற்கென சிறப்பு பெவிலியன் 7ஆம் அரங்கில் இருக்கிறது.
• இந்தத் திருவிழாவில் என்சிபிஎச் தவிர தமிழ்ப் பதிப்பாளர்கள்
யாரும் வரவில்லை -
New Century Book House (P) Ltd. -
12-12A கடை எண் 157
சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றின் மொழிப்பிரிவு அரங்கக்
கடைகளில் சில தமிழ் நூல்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
சாகித்ய அகாதமி - 12-12A - கடை எண் 230-231
நேஷனல் புக் டிரஸ்ட் - 12-12A கடை எண் 45-68
மூன்று ஆண்டுகளில் புத்தகத் திருவிழா சுருங்கிக்கொண்டே
வருகிறது. இந்த ஆண்டு சிறப்பு
விருந்தினர் நாடு ஏதும் இல்லை. 1200 பதிப்பாளர்கள் பல்லாயிரம் கடைகளை பதிவு செய்ததெல்லாம் போய் இப்போது 800 பேர்தான் பங்கேற்கிறார்கள்.
திருவிழாவை ஒட்டி Fair Daily என்ற பெயரில் ஒரு நாளிதழ்
திருவிழா முடியும்வரை தினமும் வெளிவரும். வழக்கம்போல இந்த ஆண்டும் பத்திரிகை
வடிவமைப்புப் பணியில் நான் இருக்கிறேன். 7ஆம் அரங்கில், நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகங்களின் பகுதியில் பத்திரிகை
அலுவலகம் இருக்கும். அவசியம் என்னை சந்திக்க நினைப்பவர்கள் அங்கே வரலாம்.
வாசிப்பை நேசிப்போம்.
வர நினைத்திருக்கிறேன். முடிந்தால் நாளை வருவேன்.
ReplyDeleteவந்தால் அழைக்கிறேன்.
நல்ல பகிர்வு.
ReplyDeleteபுத்தக திருவிழாவுக்கு வருபவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்.
தில்லி நண்பர்களுக்கு பயன்படும் பகிர்வு.
அருமை.
ReplyDeleteவழக்கம்போலவே போட்டோக்களுடன் உங்களது கருத்துகளையும் தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்க்க / படிக்க ஆர்வமாக இருக்கிறேன் சாரே.