ரயிலின் வேகத்துக்கிணையாய்
வெட்டவெளி வானில்
என் முகம் பார்த்தவாறே
ஓடி வருகிறது வெள்ளிநிலா
எனக்குத் தெரியும் அதுவும்
பிரியத்தான் போகிறதென
பிரியத்தான் போகிறோமென
அதற்கும் தெரியுமாவென்றே
கவலையாய் இருக்கிறது.
வெட்டவெளி வானில்
என் முகம் பார்த்தவாறே
ஓடி வருகிறது வெள்ளிநிலா
எனக்குத் தெரியும் அதுவும்
பிரியத்தான் போகிறதென
பிரியத்தான் போகிறோமென
அதற்கும் தெரியுமாவென்றே
கவலையாய் இருக்கிறது.
* * *
நேற்றிரவு விடைபெறாத
ஏக்கத்தில் இளைத்த நிலா
ஆயிரம் காதங்களுக்கும் அப்பால்
இன்றும் தொடர்கிறது
சன்னலினூடாக என்
முகம் பார்த்தவாறு
அடுத்த சந்திப்புக்கு
ஆறுமாதமோ ஆண்டுகளோ
ஆகக்கூடுமென்பது
அதற்குப் புரிந்திருக்குமோவென்றே
கவலையாக இருக்கிறது.
ஏக்கத்தில் இளைத்த நிலா
ஆயிரம் காதங்களுக்கும் அப்பால்
இன்றும் தொடர்கிறது
சன்னலினூடாக என்
முகம் பார்த்தவாறு
அடுத்த சந்திப்புக்கு
ஆறுமாதமோ ஆண்டுகளோ
ஆகக்கூடுமென்பது
அதற்குப் புரிந்திருக்குமோவென்றே
கவலையாக இருக்கிறது.
* * *
நீ வானத்திலும்
நான் பூமியிலும்
உனக்கும் எனக்கும்
எட்டாத்தொலைவு
எல்லாம் அறிந்திருந்தும்
விடியலுக்கு முந்தைய
கடைசி தரிசனத்திற்காக
பனியின் ஊடாக
குளிரில் நடுங்கியவாறே
என் பாதை அறிந்து
பின்தொடர்கிறாய்
காலைக் குளிரிலும்
கதவைத் திறப்பேனென
காத்திருக்கும் நீ
கண்டறிந்தது எப்படி ...
நான் பூமியிலும்
உனக்கும் எனக்கும்
எட்டாத்தொலைவு
எல்லாம் அறிந்திருந்தும்
விடியலுக்கு முந்தைய
கடைசி தரிசனத்திற்காக
பனியின் ஊடாக
குளிரில் நடுங்கியவாறே
என் பாதை அறிந்து
பின்தொடர்கிறாய்
காலைக் குளிரிலும்
கதவைத் திறப்பேனென
காத்திருக்கும் நீ
கண்டறிந்தது எப்படி ...
அருமையான கவிதை.
ReplyDeleteபடங்களெடுத்து அதற்கேப்ப கவிதையும்....
கவிதைகள் நிறைய எழுத ஆரம்பிச்சாச்சு போல ஷாஜஹான் ஜி! :)
இனி எங்களுக்கு வேட்டை தான்!
நன்றி வெங்கட். ஆம், இவை ரயில் பயணத்தின்போது எடுத்த படங்கள், எழுதிய கவிதைகள். இன்னும் நிறைய இருக்கின்றன. விரைவில் வரும்.
ReplyDeleteWaiting to read more of your Poems. Eagerly.
ReplyDeleteWill try to fulfil your wish soon Chellappa Sir.
ReplyDeleteசூப்பர் அண்ணாச்சி ! இதை படிப்பதற்கு இரண்டு நாள் முன்பு udaipur to டெல்லி ரயில் பயணத்தில் இதே எண்ணங்களுடன் நிலவை க்ளிக்கினேன். அந்த எண்ணங்களை மிக அருமையாக கவிதைகளாய் வடித்து பதிவு செய்திருக்கிறீர்கள் ! அருமை
ReplyDeleteசத்யா அசோகன்
நன்றி சத்யா. ஒத்த சிந்தனை என்று இதைத்தான் சொல்வார்களோ...
ReplyDelete