புத்தகக் கலை
புத்தகத் திருவிழாவின்போது கலைப்பொருட்களை வடிவமைத்திருந்தது குறித்து முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன். திருவிழாவிற்கு வந்தவர்கள் எல்லாரும் இவற்றின் அருகே நின்று படமெடுத்துக்கொண்டார்கள். தில்லி கலைக்கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டு 7ஆம் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சில படைப்புகள் குறித்து -
பசுமைக்குளம் The Evergreen Pond
அறியாமை என்னும் சேற்றிலிருந்து அறிவென்னும் ஒளியை நோக்கி மேலெழுகிற தாமரைச்செடியின் மேல் பூத்திருக்கின்றன புத்தகங்கள்.
ஞானச் சுரங்கம் - The Wisdom Mine
தரையில் விரிக்கப்பட்டிருந்த இந்தப் பிரம்மாண்ட ஓவியத்தை சட்டென்று பார்த்தால் ஏதும் புரியாது. சற்றே தொலைவிலிருந்து பார்க்கும்போது புரியும் இது அறிவுச் சுரங்கம் என்பது.
வாழ்வின் ஒளி - Light of Life
புத்தகத் திருவிழாவின்போது கலைப்பொருட்களை வடிவமைத்திருந்தது குறித்து முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன். திருவிழாவிற்கு வந்தவர்கள் எல்லாரும் இவற்றின் அருகே நின்று படமெடுத்துக்கொண்டார்கள். தில்லி கலைக்கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டு 7ஆம் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சில படைப்புகள் குறித்து -
பசுமைக்குளம் The Evergreen Pond
அறியாமை என்னும் சேற்றிலிருந்து அறிவென்னும் ஒளியை நோக்கி மேலெழுகிற தாமரைச்செடியின் மேல் பூத்திருக்கின்றன புத்தகங்கள்.
ஞானச் சுரங்கம் - The Wisdom Mine
தரையில் விரிக்கப்பட்டிருந்த இந்தப் பிரம்மாண்ட ஓவியத்தை சட்டென்று பார்த்தால் ஏதும் புரியாது. சற்றே தொலைவிலிருந்து பார்க்கும்போது புரியும் இது அறிவுச் சுரங்கம் என்பது.
வாழ்வின் ஒளி - Light of Life
தாவரங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அறிவு இல்லாமல் ஞானம் இல்லை. இரண்டையும் இணைத்து அறிவென்னும் ஒளியின் பின்னணியில் செடிகளில் காய்த்திருக்கின்றன நூல்கள்.
புத்தகப் பை - School Bag
பள்ளிக் குழந்தைகள் முதுகில் பைகளைச் சுமக்கிறார்கள், மூளையில் பைகளில் உள்ள அறிவைச் சுமக்கிறார்கள். ஒரு சுமை சுமையாகத் தோன்றினாலும் அது சுமை அல்ல, எதிர்கால சுகத்துக்கான சுரங்கம்.
பளிச்சிடும் பல்பு - The Idea Bulb
எடிசனின் மூளையில் உதித்த ஒரு சிந்தனை உலகையே மாற்றியது. பளிச்சென எந்தக் கணத்திலும் தோன்றக்கூடிய சிந்தனைகள் காலத்துக்கும் மாற்றங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் புத்தகங்களால்தான் இது சாத்தியமும் ஆகும்.
ஈபில் கோபுரம் - Eiffel Tower
பிரான்ஸ் சிறப்பு விருந்தினர் நாடாகப் பங்கேற்றதற்காக வடிவமைக்கப்பட்டது இது.
முட்டைகளும் கூடும் - The Guardian Nest
முட்டைகளை இதமாக வைக்க கூடுகட்டுகின்றன பறவைகள். முட்டைக்குள் வளர்ந்து குஞ்சுகளாக வெளிவருவது போலவே இளம் உள்ளங்கள் நூல்களின் கதகதப்பில் நல்ல குடிமக்களாக வளர்கிறார்கள்.
படைப்புக் கலைஞர்கள் - சுகந்தா கவுர், ஒருங்கிணைப்பாளர். சரோஜ் குமார் தாஸ், தல்ஜீத் சிங், ரிங்கு சவுஹான், ராகுல் கௌதம், அபிஜித் சைக்கியா.
* * *
நூல் பட்டியல்
புத்தகத் திருவிழாவிலும்
அண்மைப் பயணத்தின்போது கோவையிலும் வாங்கிய நூல்கள் கலந்து விட்டன. திருவிழாவுக்கு சிலநாட்கள்
முன்னதாக இமையம் வந்திருந்தபோது அவரிடம் வாங்கிய நூல்களும் சேர்த்து என் நூலகத்தின்
அண்மை வரவுகள் -
- மண் பாரம் - சிறுகதைகள் - இமையம்
- ரம்பையும் நாச்சியாரும் - சிறுகதைகள் - சா. கந்தசாமி
- உண்மைக்கு முன்னும் பின்னும் -- நாவல் - சிவகாமி
- யுவான் சுவாங் இந்தியப் பயணம் - தொகுதி 2, 3 - தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன்
- மீட்சி - சிறுகதைகள் - ஓல்கா - தெலுங்கிலிருந்து தமிழில் கௌரி கிருபானந்தன்
- அன்பின் வெற்றி - சிறார் கதைகள் - தொகுத்து மொழிபெயர்த்தவர் யூமா வாசுகி
- ரித்விக் கட்டக் - தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி
- பகத்சிங் சிறைக்குறிப்புகள் - தொகுத்தவர் பூபேந்திர ஹூஜா - தமிழில் சா. தேவதாஸ்
- வால்மார்ட்டை விரட்டி அடிப்போம் - ஆல் நார்மன் - தமிழில் ச. சுப்பாராவ்
- ஒரு ரூபாய் டீச்சர் - நேர்காணல்கள் - யூமா வாசுகி
- நிழலும் நிஜமும் - தாய்-பர்மா ரயில் பாதையும் க்வாய் நதிப் பாலமும் பற்றிய உண்மைக் கதை - சேலம் பா. அன்பரசு
- ஒண்டிக்காரன் பண்ணையம் - நாவல் - மா. நடராசன்
- சிறையிலிருந்து ஓர் இசை - இரா. நல்லகண்ணு கட்டுரைகள் - இளசை மணியன்
- மூங்கில் மூச்சு - நினைவலைகளின் தொகுப்பு - சுகா
- பெனி எனும் சிறுவன் - அல்பேனிய நாவல் - கிகோ புளூஷி - தமிழில் யூமா வாசுகி
- வேறிடம் - குறுநாவல்கள் - சுப்ரபாரதி மணியன்
- அப்பத்தாளும் ஒரு கல்யாணமும் - சிறுகதைகள் - மா. நடராசன்
- வீடியோ மாரியம்மன் - சிறுகதைகள் - இமையம்
- புகை நடுவில் - நாவல் - கிருத்திகா
- டினோசர்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன - கட்டுரைகள் - மனுஷ்யபுத்திரன்
- கனவு ஆசிரியர் - கட்டுரைகள் - தொகுத்தவர் க. துளசிதாஸ்
- Jollyயன் வாலா Bag - ஜே.எஸ். ராகவன்
- Faking It - Amrita Chowdhury
- Bhagat Singh - Col. Raghvinder Singh
- Classic Ghost Stories
- Whatever It Takes - Lynda Page
- The Beginner’s Cook Book : Meat
- The Beginner’s Cook Book : Chicken
சக்தி ஜோதி பரிசளித்த கவிதை
நூல்கள் -
- தீ உறங்கும் காடு
- கடலோடு இசைத்தல்
- நிலம் புகும் சொற்கள்
- காற்றில் மிதக்கும் நீலம்
வாசிப்பை நேசிப்போம்
No comments:
Post a Comment