Thursday, 16 November 2017

நீரிழிவு நோய் தினம்

நவம்பர் 14 - இந்தியாவில் குழந்தைகள் தினம். சர்வதேச அளவில் உலக நீரிழிவு நோய் தினம். இந்த ஆண்டுக்கான மையக் கருத்து : பெண்களும் நீரிழிவு நோயும் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கான நமது உரிமை



ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது?
ஏனென்றால், பெண்களில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) இருக்கிறது. ஏழு பேரில் ஒருவர் பிரசவத்தின்போது கர்ப்பகால நீரிழிவுக்கு (gestational diabetes - GDM) ஆளாகிறார். பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு எதிர்கால குழந்தைகளையும் பாதிக்கிறது.

கர்ப்பகால நீரிழிவு என்றால் என்ன?
பிரசவ காலத்துக்கு முன்பு நீரிழிவு நோய் இல்லாத, கர்ப்ப காலத்தில் அதிக குளுக்கோஸ் (சர்க்கரை) இருக்கிறவர்கள் கர்ப்பகால நீரிழிவுக்கு ஆளானதாக கருதப்படுவார்கள். 2014ஆம் ஆண்டில் ஒரு கணக்கின்படி, கருவுற்றவர்களில் 9.2% பேருக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருக்கிறது.


கர்ப்பகால நீரிழிவு எதனால் ஏற்படுகிறது?
துல்லியமாகத் தெரியாது, ஆனால் சில காரணங்கள் தெரியும். கருவில் இருக்கும் குழந்தை வளர்வதற்கு பிளசென்டா எனப்படும் சூல்கொடி உதவி செய்கிறது. அது தரும் ஹார்மோன்கள் குழந்தை வளர்வதற்கு உதவுகிறது. ஆனால் இதே ஹார்மோன்கள் தாயின் உடலில் இன்சுலின் செய்யும் வேலையைத் தடுக்கின்றன. அதாவது, தாயின் உடல் இன்சுலினைப் பயன்படுத்த முடியாமல் தடுக்கின்றன. பிரசவ காலத்தில் தாய்க்கு மூன்று மடங்கு இன்சுலின் தேவைப்படலாம்.

ஆக, பிரசவ காலத்திற்குத் தேவைப்படும் இன்சுலினை உற்பத்தி செய்யவும், முழுமையாக பயன்படுத்தவும் முடியாமல் போகும். இன்சுலின் இல்லாவிட்டால், இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸ் ஆற்றலாக மாற முடியாது. அதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இது ஹைபர்கிளைசீமியா எனப்படும்.

கர்ப்பகால நீரிழிவு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
கர்ப்பகால நீரிழிவு என்பது, கருவில் சிசு ஓரளவுக்கு நன்கு உருவான பிறகு, கர்ப்பகாலத்தின் பிற்பகுதியில் பாதிக்கும். அதாவது, சிசு வளர்வதில் முனைப்பாக இருக்கும்போது தாயைப் பாதிக்கும். அதனால், பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் குறைபாடுகள் இருக்காது. ஆனால் கர்ப்பகால நீரிழிவுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அல்லது சரியாகக் கட்டுப்படுத்தப்படா விட்டால், குழந்தையையும் பாதிக்கலாம்.

கர்ப்பகால நீரிழிவு இருந்தால், இன்சுலின் அதிகம் உற்பத்தி செய்ய கணையம் அதிகப்படியாக உழைக்கும். ஆனால் இன்சுலின் அதிகம் உற்பத்தி ஆகியும்கூட, அது முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் குளுக்கோஸ் அளவு குறையாது. பிளசென்டாவின் வழியாக இன்சுலின் சிசுவைச் சென்றடையாது என்றாலும், குளுக்கோசும் இதர ஊட்டச் சத்துகளும் சிசுவை அடையும். எனவே, பிளசென்டா வழியாக சிசுவை அடையும் அதிகப்படியான குளுக்கோஸ், குழந்தைக்கும் அதிக குளுக்கோஸை சேர்க்கும். எனவே, அதை சமாளிக்க குழந்தையின் கணையம் கூடுதலாக இன்சுலின் உற்பத்தி செய்யும். குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அளவுக்கும் அதிகமாக ஆற்றல் அதற்குக் கிடைக்கும்போது, அந்த அதிகப்படியான ஆற்றல் கொழுப்பாக சேமிக்கப்படும். இதனால் அதிக எடை கொண்ட குழந்தையாக உருவாகும் (macrosomia). இப்படி அதிக கொழுப்புடன் கூடிய மேக்ரோசோமியா குழந்தைகளுக்கு அவர்களுக்கே உரிய உடல்நலப் பிரச்சினைகள் உருவாகும். உரணமாக, சிசுக்களின் தோள்களில் பாதிப்பு, குளுக்கோஸ் அளவு குறைதல், மூச்சுத்திணறல் போன்றவை. அதிகப்படியான இன்சுலினுடன் பிறக்கும் குழந்தைகள் பருமனாகவும் (obesity), பிற்காலத்தில் டைப்-2 சர்க்கரை நோய்க்கு ஆளாகவும் வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பகால நீரிழிவுக்கு ஆளாகும் பெண்களில் பாதிப்பேர், பிரசவத்துக்குப் பிறகு ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் டைப்-2 சர்க்கரை நோயாளிகளாக ஆகிறார்கள்.

ஆறுதலளிக்கும் விஷயம் என்னவென்றால், டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்களில் 70% பேருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளால் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலோருக்கு சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை, சிகிச்சைக்கான வசதி இல்லை, சிகிச்சைக்குப் பிறகும் கவனிப்பு இல்லை. விழிப்புணர்வு, பரிசோதனை, சிகிச்சை, இவற்றின மூலம் தாய்-சேய் ஆரோக்கியத்தைப் பேண முடியும்.

இந்த ஆண்டின் மையக்கருத்து இதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண்களுக்கு ஏன் சிறப்புக்கவனம் தேவை?
உலகில் தற்போது 20 கோடி பெண்கள் சர்க்கரை நோய்க்கு ஆளாகி உள்ளனர். 2040 வாக்கில் இது 31 கோடியாக உயரும் என அஞ்சப்படுகிறது. நீரிழிவு நோயின் பாதிப்பு, சிகிச்சைக்கான வாய்ப்பு, கவனிப்பு ஆகியவற்றிலும் பாலியல் பாகுபாடுகளால் ஆணாதிக்க சமூகங்களில் பெண்களுக்கு பின்னடைவு உண்டு. உலக அளவில் ஏற்படும் மகளிர் உயிரிழப்புகளில் 9ஆவது காரணமாக இருப்பது நீரிழிவு நோய்; ஆண்டுதோறும் 2.1 கோடிப்பேர் இதனால் உயிரிழக்கிறார்கள்.

பரிசோதனை, ஆரம்பகாலத்திலேயே நோயைக்கண்டறிதல், சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு ஆகியவற்றில் சமூக-பொருளாதாரக் காரணிகளும் பெண்களுக்கு பெரும் சோதனையாக உள்ளன. உணவு போதாமை, ஊட்டச் சத்துக் குறைபாடு, கூடுதல் உழைப்பு அல்லது உழைப்பின்மை ஆகியவை பெண்களை பாதிக்கின்றன.

நீரிழிவு நோய் உள்ள பெண்களில் பத்தில் 4 பேர், கருவுறக்கூடிய வயதில் உள்ளவர்கள். எனவே, இவர்களுக்கு கருவுறுதல், கருவுற்ற காலத்தில் கவனிப்பு, பிரசவம், ஆகியவற்றின்போதும் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.

உலகளவில் 11 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. (பெண்களில் 10 பேரில் ஒருவருக்கு). தற்போது 35 கோடிப்பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது; 2045 வாக்கில் 70 கோடிப்பேருக்கு சர்க்கரை நோய் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

சர்க்கரை நோய் கண்கள், இதயம், சிறுநீரகம், நரம்புகள், பாதங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். அதிலும் சர்க்கரை நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் உழைக்கும் வயதில் உள்ளவர்கள் என்பதைப் பார்க்கையில், மேற்கண்ட நோய்கள் அவர்களையும், அவர்கள் குடும்பங்களையும் எந்த அளவுக்கு வருத்தும் என்பதை ஊகிக்கலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகளில் பாதிப்பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாது. எனவேதான் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.

சர்க்கரை நோய் இதுவரை அதிகம் கவனிக்கப்படாத, புறக்கணிக்கப்பட்ட நோயாகவே இருந்து வருகிறது. ஆனால் இனியும் இப்படி இருக்க முடியாது. மார்பகப் புற்றுநோய்க்கு சொன்னதே இங்கும் பொருந்தும் குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு சிகிச்சை வசதிகளை அணுக முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு பெண்களுக்கு –– சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஆரம்ப காலத்திலேயே பரிசோதனை செய்து கொள்ளுதல் / செய்ய வைத்தல், சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு அவசியம்.

பத்திரமா பாத்துக்குங்க. 

Thursday, 2 November 2017

My First Teacher

It was 1996. It was two years since I resigned my job in a publishing concern, undertook various works for a living, and lastly started a desktop publishing unit (DTP - typing and layout desining of books).

I purchased a computer, but, to be frank, I have never touched a computer earlier! In the company where I worked earlier as a manager, there were a few systems. Computer operators used to operate them, but I have never touched one. I have seen the backside of the monitor through the small windows in railway booking / bank counters. Those were the days when people used to believe that computers must be kept in AC room, otherwise they will heat up… If you press any wrong key by mistake everything will be lost…

The computer which I purchased for my DTP unit was a 386 model, i.e. IBM 386. IBM means not a branded one, but an assembled one, with an Intel i386 microprocessor. One of my friend's friend's friend was running a computer assembling company in Munirka, and he brought the system and fixed it in our office. People who read this story today may not be aware what is a 386. Before 386, there was another version called 286. Even before that, there were systems without hard disks. Anyway, let me come to my system.

The system had 260 MB hard disk, Windows 3.0 version, Page Mager 4. UPS were not common then, and so I had opted for a power stabiliser which weighed about 8 Kg, and costed 6500 rupees. A 14" monochrome monitor. I had already purchased a Laser Printer – HP Laserjet 4Plus – with the help of Nakkeeran Gopal. That was the best printer HP ever produced.

My Computer had 4 MB RAM (YES, not 4 GB, just 4 MB)! If you are surprised about 4 MB RAM, I will narrate another story. After a few months, I wanted to increase the RAM, as my system was slow. Through one of my friends I got another 4 MB RAM – i.e. 4 chips of 1 MB each – for 800 rupees. So, all the 8 slots of RAM in the motherboard were full !

Those were the days when we used to type in MS-DOS. Even formatting of typed text could be done in DOS – i.e. Disk Operating System. For copying, deleting of files, we used DOS commands. Completed works were saved in floppy disks. There were two kinds of floppys – one was 5.25" and another 3.5". Microsoft Word was yet to come.

The office space I selected for my unit was in Indrapuri, a congested area populated by working class Tamil people. I got a computer, but not an operator. Then came a lady for interview. She was about 5 feet tall, slim, and her fingers were thin and lengthy – just like my fingers. Her husband too accompanied her.

Already I have installed a Tamil software – fonts as well as typing tool. I gave her a few pages to type in Tamil. Her fingers moved over the keyboard as if a dancer's feet moving on the stage. She did not look at the keyboard at all. The Tamil software which I had installed could not cope up with her typing speed, and letters appeared on the screen only after about 15-20 seconds after she typed. Her name was Mythili. No need to say that Mythili Sankaran was appointed.

In the last twenty years or so, I have purchased a few more computers / laptops. A few more operators came and went. But, she was the only one who became a member of our family, my trustworthy right hand in my works. Even if I had to go to south on holidays, she will manage alone.


During my young age, after finishing high school education, it was a norm in those days that one has to learn typewriting – if an institute was available. And, typing institutes were there in almost all towns. It was a place for young lovers too. I too joined in one of the institutes and went there daily carrying a few white sheets, rolled in my hand. I too learnt English typing, typewriter mechanism, etc., but forget everything in the next 30 years. Now I have to start to learn typing a…s…d…f…g…f… from Mythili again. She also taught me how to operate the system. She was my First Teacher.

Then came Windows 3.1…, 3.1.1, … 95, 98, … to XP. Page Maker 5.0, 6.0, 6.5, 7.0. We both learnt a lot as the systems and the softwares were improving. We both learnt to type in Inscript keyboard. Her typing speed was amazing. She was an expert in creating shortcuts using autocorrect to type lengthy words in MS Word, thus she can just type three / four alphabets for a 15-20 letter words. As there was a need for working in other designing softwares, I learnt Corel Draw, Photoshop etc., in which she could not excel, yet she also worked on them. She used to say, "Sir, you have excelled your guru – guruvukku minjiya shishyan!" Even now her words reverberate in my years.

Her typing method was different. She would sit on the chair with her legs folded – as if sitting in floor. A copyholder will be kept on the left side of the monitor where manuscript will be kept. Her eyes will move only on the script, she won't look at the monitor. She will type one para / page, then press Control+S, then go through the typed matter, correct any spelling mistake visible, then press Control+S again. Even today I have a few books which she has typed, but still pending for my layout designing. Whenever I see or open those files, I can visulalise her sitting and typing.
* * *
Phone will ring. It may be a call from her brother Raghavan. Their dialogue will go on in a typical Tamil Brahminical language. Phone will ring again, and it may be a client. Her language will be purely official – either in Hindi or in Tamil. She knew almost all my clients and almost all of them were happy with her behaviour.
* * *
Occasionally we had some interesting conversations.
— Sir, why almost all the poets behave like fools?
— What, fools? Whom you are talking about?
— I am talking about Bharathi. Chellamma borrows rice from here and there for making food and this Bharathi throw the rice to crows and birds! Was he nuts? What was there in his head – brain or something else?
This happened when she was typing Bharathi's biography.
— What would be the age of Thiruvalluvar when he died? About 300?
— Why are you asking like this?
— See, If I start to write a letter to my dad, it takes about a week to complete. This man, Thiruvalluvar, has written almost all matters that too in a crisp manner. That means he should be having a lot of experience. That experience could not be gained in a single life time like us.
This conversation happened when she was typing Thirukkural.
— Wah … wah… Got a manuscript written by …………………… Ha!, for a few days it wont be difficult for typing.
She said this when a new manuscript arrived, and the translator's handwriting was so good that it would look like printed matter.
— Oh my….! I have got this ………………………… manuscript!!! If he comes here, we should teach him how to write – like a teacher beat his hand with a stick.
She will say this when a manuscript with a poor handwriting comes to her. (Whom she referred here is also here in Facebook. He has also read this.)
— I am surprised how this man was able to understand what is in a woman's mind!
This comment was about Aadhavan, a short story writer.
* * *
How she could make everyone as her friend was a mystery for me. People known to me, my clients, my friends, relatives – she could talk with everyone with ease. Every year, on my birthday, first b'day wish will come from her. (Normally I don’t remember my birthday.)

Once she came with a bag. I asked her what was that.
"Yesterday I went to the market. Purchased a t-shirt."
"T-shirt?! For whom?"
"For our Jaya."
"Jaya? Who Jaya?"
"Our Jayakuamar Sir! Today is his birthday."
Jayakumar was a young man from Tirunelveli, who came to Delhi in search of a job, and was with me for a few years. He became one of my family members.
Mythili had a great memory power. She never failed to wish people known to me on their birthdays or marriage days.
… Do you remember this day? This is the day when I joined.
… Today is Jai Shankar's birthday. Have to wish him.
… Ten years back you shifted to this place on the same day.
… Have you wished your sister's daughter? Today is her marriage day.
… Last year, on this day, we all went to India Gate, do you remember?
* * *
Her first child was a daughter, Dharini. Second one was a son, Manikandan. After the second delivery, she was diagnosed with diabetes. Subsequently, both the kidneys were affected. Yet, both were functioning on 50% of their capacity and she could manage with a little medication and a strict diet.

After a few years, health problems came up. By that time, modem has come into use, and typed files could be sent by e-mail. So, I gave her a computer to work from her home. Manuscript will be given to her, and she will type and send mails. Her husband Sankaran will take / bring manuscripts. Occasionally I will also visit her home to service the computer.

By 2010, complications increased. She had to go for dialysis. Because of her health, she had to opt for peritoneal dialysis – done at home. As a chain reaction, problems also came up – getting medicine in time, infection, getting service of a nurse occasinally for changing the tubes fitted with her body. Yet, she was working until August 2010.

By the end of the month of October 2010, I had to go to Tamil Nadu on some personal work. Before leaving for south I called her and informed about my trip. “Please visit me before you leave Sir,” she requested. "I am sorry, I have heavy load of works to finish before I leave. If I come there, whole day will be gone. Don’t worry, I will visit immediately on my return," I said.

One 1st November, I was sitting in a browsing centre in Tiruppur, to write an article for All India Radio, which was to be broadcast next day. For about 20 years, I used present a programme on sports for AIR. I had to send it by mail. As I was browsing and taking notes about sports events, my cellphone rang, and it was a call from Sankaran. Mythili was unwell and she had to be admitted in a nearby hospital, he said.

This was not new, because earlier too she had been admitted into the same hospital and she will go back home with a smile after a two-days stay. This time too she will be alright, I convinced him.

I thought it was an infection problem, and she will be back home. But she betrayed me. I could not see her again.

Seven years have gone. Mythili who had stored in her memory a lot of dates has become a date.

My First Teacher lives in my memory as a date - 2 November.
*
I wrote this piece in 2012 in Tamil. Mythili's daughter Dharini asked me to write this in English for her friends. I am sorry that it took almost five years for me to fulfill her request.
*
P.S.:
November 14 is observed as World Diabetes Day and the Theme for this year is "Women and diabetes - our right to a healthy future”.
Why importance on women?
According to International Diabetes Federation :
1 in 10 women live with diabetes.
1 in 7 births is affected by gestational diabetes (GDM).
Approximately half of women with a history of GDM go on to develop type 2 diabetes within five to ten years after delivery.
But, Up to 70% of cases of type 2 diabetes could be prevented through the adoption of a healthy lifestyle.
Many do not have access to educatin, treatment and care.
Protect the health of mother and child by improving access to screening, care and education.


இனி கிடைக்காத காப்பி

வீட்டில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிதான் இருந்தது. முன்னர் எல்லாம் டிவி, டேப் ரிகார்டர் போன்ற சாதனங்களை நான் புதிதாக வாங்கியதில்லை. செகண்ட் ஹாண்டில்தான் வாங்குவேன். ஏற்கெனவே இருந்தது 1500 ரூபாய்க்கு வாங்கிய போர்ட்டபிள் டிவி. ஆன்டெனாக்கள் மறைந்த பிறகு, நாடே கலர் டிவிக்கு மாறிய பிறகு, அந்தப் பழைய பெட்டியில் கேபிளை மாட்ட முடியாத நிலை வந்த பிறகு, நிர்ப்பந்தத்தால் கலர் டிவி வாங்கும் யோசனை வந்தது.

எங்க பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்தில் ஒருத்தர் புது கலர் டிவி வாங்கிட்டார். பழசை விக்கிறார். வாங்கறீங்களா?” என்று கேட்டார் அவர். சரி என்று ரோகிணி போனோம். ஒரு கலர் டிவியுடன், பழைய 286 கம்ப்யூட்டரும்கூட இருந்தது. டிவியுடன் ஸ்டாண்டும் கொடுத்தார்கள். மாருதி ஆம்னி ஒன்றை வாடகைக்குப் பிடித்து, டிவியையும் கம்ப்யூட்டரையும் பின் சீட்டில் வைத்துக்கொண்டு நான் உட்கார்ந்து கொண்டேன். டிவி ஸ்டாண்ட் மாருதி காரின் டிக்கி பகுதியில் வைத்தாயிற்று. ஆனால் பின்கதவை மூட முடியவில்லை. யாராவது உட்கார்ந்து மூடியதுபோல பிடித்துக்கொள்ள வேண்டும். அதுக்கென்ன... நான் உக்காந்துக்கிறேன்என்று அவர் உட்கார்ந்து கொண்டார். சுமார் 30 கிலோமீட்டர் அப்படியே உட்கார்ந்து கொண்டு எங்கள் வீடுவரை வந்தார். இருக்கை இல்லாமல், தடதடக்கும் இரும்புப் பலகை மீது உட்காரந்து வருவதற்கு ரொம்பவே பொறுமை வேண்டும். அவருக்கு இருந்தது பொறுமை மட்டுமல்ல.
*
ஒருநாள் நாங்கள் எல்லாரும் அவருடைய வீட்டுக்கு விருந்துக்குப் போனோம். சாப்பிட்டு, பேசிக் கழித்த பிறகு, பக்கத்தில் இருக்கும் ஜப்பானீஸ் பார்க் போகலாமா என்றார். ஜப்பானீஸ் பார்க் என்பது ஜப்பானிய நிதியுதவியில் ரோகிணியில் நிறுவப்பட்ட ஒரு பூங்கா. பொழுதுபோக்கும் அளவுக்கு வசதிகள் ஏதும் இல்லை என்றாலும் தெற்கு தில்லியில் இருப்பது போல மிகப்பெரியது இல்லை என்றாலும், ஓரளவுக்கு பெரிய பூங்காதான். எல்லாரும் ரிக்சாக்களில் போனோம். எல்லாரும் ரிக்சா இருக்கைகளில் உட்கார்ந்து கொள்ள, அவர் ஒருவருக்கு இடம் போதவில்லை. தில்லி ரிக்சாக்களில் பின்னால் ஒரு பலகை அடிக்கப்பட்டிருக்கும். சென்னை ஷேர் ஆட்டோக்களில் பலகை போட்டிருப்பார்களே, அது போல. அந்தப் பலகையில் உட்காருவோர், விழுந்து விடாதிருக்க பழைய சவாரி வண்டிகளில் ஒரு கம்பி இருக்குமே, அதுபோல ஒரு கம்பியும் இருக்கும். நான் பின்னாடி உக்காந்துக்கிறேன் என்று அவரும் அவருடைய மகன் பொடியனாக இருந்த மணிகண்டனும் அந்தப் பலகையில் உட்கார்ந்து கொண்டு வந்தார்கள்.
*
ஒரு கோடை விடுமுறையில் மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போய்விட்டார்கள். சார்... இன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்து தங்குங்களேன்.... காலையில் வந்துடலாம்என்றார். ரோகிணியிலிருந்து சார்ட்டர்ட் பஸ்சில் மோதி பாக் வரை வந்து, டவுன் பஸ் ஏறி எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருவார். அதேபோல வீட்டிலிருந்து மோதி பாக் வரை டவுன் பஸ்சில் போய், அங்கிருந்து சார்ட்டர்ட் பஸ்சில் ரோகிணி செல்வது அவருடைய வழக்கம். சரி, இதுவரை அவர் வீட்டில் தங்கியதில்லை, போகலாமே என்று புறப்பட்டோம்.


சார்ட்டர்ட் பஸ் என்பது, வேலைக்குச் செல்பவர்கள் வசதிக்காக குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இன்னொரு இடத்துக்கு காலையில் சென்று மாலையில் திரும்பும் பேருந்து. உதாரணமாக, ரோகிணியிலிருந்து நேரு பிளேஸ் என்றால், வேலைக்குச் செல்லும் யாராவது ஒருவர் அதன் பொறுப்பை எடுத்திருப்பார். வண்டி உரிமையாளருக்கு ஒரு தொகை கொடுத்துவிட வேண்டும். போவதும் திரும்புவதுமாக நாளுக்கு இரண்டே டிரிப்கள்தான். பஸ் புறப்படுகிற இடத்தில் வாடிக்கையாக தினமும் வருபவர்களுக்கு உட்கார இடம் இருக்கும். வழியில் சிலர் ஏறினால் நின்றுகொண்டும் பயணிக்கலாம். இந்த வாகனத்தை ஏற்பாடு செய்பவர் தினமும் வசூலிலிருந்து கணக்கை முடித்து விடுவார். அவருக்கும் ஓரளவு வருவாய் கிடைக்கும்.

அவருடைய வழக்கமான சார்ட்டர்ட் பஸ் ரோகிணியிலிருந்தே புறப்படும் என்பதால் அவர் வரும்போது உட்கார இடம் கிடைக்கும். திரும்பிப் போகும்போது, நேரு பிளேசிலிருந்து வரும் பஸ் மோதி பாக் வருவதற்குள் நிறைந்து விடும். இவருக்கு பொதுவாக உட்கார இடம் கிடைக்காது. ரோகிணி வரை 25 கிமீ ஒன்று-ஒன்றரை மணிநேரம் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் போக வேண்டும்.

நாங்கள் மோதி பாக் சென்று சார்ட்டர்ட் பஸ் ஏறினோம். நான் நின்று கொண்டேன். அவருக்கு பானட்டில் உட்கார இடம் கிடைத்தது. அவர் பஸ் பொறுப்பாளரிடம் டிக்கெட் பணம் கொடுக்கும்போது எனக்கும் சேர்த்து காசு கொடுத்தார். பஸ் பொறுப்பாளர் என்னைத் திரும்பிப் பார்த்தார், அவரிடம் ஏதோ பேசினார், மறுபடி திரும்பிப் பார்த்தார். என்னிடம் வந்தவர், தன்னுடைய இருக்கையில் அமரச் சொன்னார். பரவாயில்லை, நிற்பது சிரமமில்லை என்றேன். வற்புறுத்தி உட்கார வைத்தார். அவர் கதவுப்படியில் நின்று கொண்டார். சிறிதுதூரம் போனதும் பெண்கள் ஏறினார்கள். பெண்கள் நின்று கொண்டு வரும்போது உட்கார்ந்திருக்க எனக்கு மனம் வரவில்லை. எழுந்து இடம் கொடுத்துவிட்டேன். பஸ் பொறுப்பாளர் என்னைப் பார்த்து சிரித்தார்.

ரோகிணி போனேன், சாப்பிட்டேன், குழந்தைகளுடனும் அவருடைய கணவருடனும் பேசிக் கழித்தேன், அங்கேயே உறங்கினேன். காலையில் அதே பஸ்சில் இருவரும் திரும்பி வந்தோம்.

வீட்டுக்கு வந்து வேலையைத் துவங்கும்போது அவர் கேட்டார் – “சார்... உங்களை உக்காரச் சொன்ன சார்ட்டர்ட் பஸ்காரன் என்ன சொன்னான் தெரியுமா?”

என்ன சொன்னான்?”

உங்களுக்கும் சேத்து காசு கொடுத்தேன். உங்களைத் திரும்பிப் பாத்தான் இல்லியா... நீங்க யாருன்னு கேட்டான். எங்க சார்னு சொன்னேன். உங்களுக்குக் காசு வாங்க மாட்டேன்னுட்டான்.

அட... அது ஏன்?”

உங்களைப் பாத்தா ஏதோ மரியாதை வந்துடுச்சாம். திரும்பித் திரும்பி பாக்கணும்னு தோணுச்சாம். ஏன்னு தெரியலியாம். அவருக்கெல்லாம காசு வாங்கினா அது செரிக்காதுன்னு தோணிச்சாம்.

ஹாஹாஹா

அது மட்டுமில்லே. நேத்து உங்களுக்கு உக்கார சீட் குடுத்தா நீங்க யாரோ பொம்பளைங்களை உக்கார வச்சுட்டீங்க இல்லே... இன்னிக்கி காலையில சொல்றான் - இனி நீங்க எப்போ வந்தாலும் உங்களுக்கு ஃப்ரீதானாம். உங்க சார் மாதிரி ஆளுகளைப் பாக்கறதே பெரிய விஷயம். அவரு கண்ணுலயே ஏதோ சக்தி இருக்குன்னு சொன்னான். ஆமா... பின்னே... எங்க சாரை யார்னு நினைச்சேன்னு கேட்டேன்.

சொல்லும்போது அவர் முகத்தில் இருந்த பெருமித உணர்வு...!
*
ஓரிரு ஆண்டுகள் எங்கள் கட்டிடத்திலேயே மேல் மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார். அப்போது ஞாயிறு காலைகளில் அவருடைய வீட்டுக்குச் சென்று காபி குடிப்பது வழக்கம். உடுமலையில் நான் முதல் முறையாக ஒரு வீட்டு மனை வாங்கும்போது எங்கள் மனைக்குப் பக்கத்தில் தனக்கும் வீட்டு மனை வாங்கினார். புள்ளைங்களுக்கு கல்யாணம் எல்லாம் முடிஞ்சு ஓஞ்சு போய் ரிடையர் ஆனப்புறமும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலேயே இருப்போம்என்பார்.

அப்பவும் காபி கிடைக்கும் இல்லியா?” என்று கேட்பேன்.
*
1996இல் பணியில் சேர்ந்து, 2010இல் உடல்நிலை மிகவும் சீர்கெடும் வரை என்னிடம் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்த இல்லையில்லை, எங்கள் குடும்பத்தில் அங்கமாக இருந்த மைதிலி மறைந்து இன்றோடு ஏழு ஆண்டுகள் ஆகி விட்டன. மூன்று ஆண்டுகளுக்கு முன் அவருடைய கணவர் சங்கரனும் மறைந்து விட்டார்.

எங்கள் வீட்டுமனையை விற்று விட்டேன். அவர் கம்போஸ் செய்த சில புத்தகங்கள் இன்னும் முடிக்கப்படாமல் கம்ப்யூட்டரில் இருப்பதுபோல உடுமலையில் வாங்கிய அவருடைய மனை இப்போது என்னிடம்தான் இருக்கிறது.


மைதிலியைப் பற்றி மேலும் அறிய, அவரைப் பற்றிய பழைய பதிவு இங்கே. இந்தப் பதிவை ஆங்கிலத்தில் எழுதுமாறு அவருடைய மகள் கேட்டாள். ஆங்கிலத்தில் இங்கே வாசிக்கலாம்.