Thursday, 8 March 2018

அக்னிப் பாதை


மகளிர் தினக் கவிதை

ராபர்ட் ஃப்ராஸ்டின் Miles to go before I sleep என்ற வரிகள் வரும் கவிதை மிகவும் புகழ் பெற்றது. இலட்சியம் நோக்கிப் பயணப்படுகிற ஒவ்வொருவருக்கும் பொருந்தக்கூடியது. போராட்டமே வாழ்க்கையாய்க் கொண்ட மகளிருக்கோ இன்னும் பொருத்தமானது.

The woods are lovely dark and deep
But I have promises to keep
And miles to go before I sleep
Miles to go before I sleep
  Robert Frost

என்வழியில் பசுஞ்சோலை பைம்பொழில்கள் பாய்விரிக்கும்
என்றாலும் நானேற்ற அரும் பணிகள் எனை அழைக்கும்
இளைப்பாற நேரமில்லை; என்பாதை பலகாதம்
இளைப்பாற நேரமில்லை; என்பாதை பலகாதம்
தமிழாக்கம் - என் நண்பர் சேதுராமலிங்கம்.

இந்தக் கவிதையைப் படித்த நண்பர் ஒருவர், “அக்னி பத்கவிதையையும் தமிழில் தாருங்களேன் என்று கேட்டார். அக்னி பத் கவிதை, ஹரிவன்ஷ்ராய் பச்சன் எழுதியது. இந்தியில் மிகப்பிரபலமான கவிதை. அப்படியே தமிழில் தருவது சாத்தியமே இல்லை. முயற்சி செய்திருக்கிறேன். (ஹரிவன்ஷ்ராய் யார் என்று தெரியாதவர்களுக்கு அவர்தான் அமிதாப் பச்சனின் தந்தை.)



இந்தத் தமிழாக்கம் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்

*
அக்னிப் பாதை

மரங்கள் வளர்ந்தோங்கி நிற்கலாம்
அடர்ந்தும் வலுவேறியும் இருக்கலாம்
ஒற்றை இலையின் நிழலையும்
கேட்காதே தேடாதே மயங்காதே
நீ பயணிக்க வேண்டியது நெருப்புப் பாதை

ஒருபோதும் களைத்து விடாதே
ஒருபோதும் வளைந்து விடாதே
ஒருபோதும் திரும்பி விடாதே
உறுதி கொள் மனவுறுதி கொள் உடலுறுதி கொள்
நீ பயணிக்க வேண்டியது நெருப்புப் பாதை

கண்ணீர் வியர்வை குருதியில் குளித்தும்
லட்சியம் நோக்கி நடக்கிற மனிதனைக்
கண்ணுறும் காட்சி மகத்தான காட்சி
நட, முன்னே செல், முன்னேறு,
நீ பயணிக்க வேண்டியது நெருப்புப் பாதை.

*
अग्नी पथ

वृक्ष हों भले खड़े,
हों घने हों बड़े,
एक पत्र छाँह भी,
माँग मत, माँग मत, माँग मत,
अग्निपथ अग्निपथ अग्निपथ।


तू न थकेगा कभी,
तू न रुकेगा कभी,
तू न मुड़ेगा कभी,
कर शपथ, कर शपथ, कर शपथ,
अग्निपथ अग्निपथ अग्निपथ।

यह महान दृश्य है,
चल रहा मनुष्य है,
अश्रु श्वेत रक्त से,
लथपथ लथपथ लथपथ,
अग्निपथ अग्निपथ अग्निपथ।

- हरिवंशराय बच्चन
*

Agnipath

Even if there are mighty trees all around you,
Let them be shady, let them be huge,
But, even for the shade of a single leaf,
Beg not, beg never, ask never!
The path of fire you shall tread! The path of fire! Yes, That Path of Fire!

You shall never tire,
You shall never slow down,
You shall never turn back,
This oath you will take today!
This oath you will fulfill in your life!
Take this oath!
And walk the Path of Fire, every single day!
The oath of fire! Yes, That Path of Fire!

What greater spectacle,
Than to see such a man walk,
Who in tears, sweat and blood,
Is soaked, covered and coated;
And still walks on in the Path of fire!
Walks the path of fire! Yes, That Path of Fire!
- Harivanshrai Bachan

1 comment:

  1. நல்ல தமிழாக்கம்.

    அனைத்து மகளிர்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete