ஆஸ்திரேலியாவில் வசிக்கும் டேனியல்-கேத்
தம்பதிக்கு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி, கடலில் மிதந்து வந்த ஒரு பாட்டில் கண்ணில் பட்டது.
மூடப்பட்டிருந்த அந்த பாட்டிலைத் திறந்து பார்த்தபோது, அதன் உள்ளே ஒரு
காகிதத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.
அது என்னவென்று புரியாததால், தனது பேஸ்புக்
பக்கத்தில் அந்தக் காகிதத்தின் படத்தைப் போட்டு, இதில் இருப்பது
என்னவென்று கண்டறிய உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார் டேனியல். இதில் ஏதோ காதலும்
இருப்பதுபோலத் தெரிகிறது என்றும் ஊகித்திருந்தார் டேனியல். (கடிதம் எப்போது எழுதப்பட்டது
என்று தெரியவில்லை.)
அந்தக் கடிதம் பேஸ்புக்கில் பரவியது.
விரைவிலேயே மொழியாக்கமும் கிடைத்தது.
"I'm a sailor sailing on the
Indian Ocean. I deeply miss my fiancee at home. Shortly after we were engaged,
I am travelling far away on the sea. I am sorry for leaving her behind, I could
only jot down my deep feelings to her and seal it in a floating bottle... My
only wish is to return home to live a beautiful and happy life with Jing, a
long life in harmony,"
“நான் இந்தியப் பெருங்கடலில் கப்பல்
பணியில் சென்று கொண்டிருக்கிறேன். என் வருங்கால மனைவியின் பிரிவால் வாடுகிறேன்.
எங்கள் திருமணத்துக்கான நிச்சயம் ஆன உடனேயே நான் புறப்பட வேண்டியதாயிற்று. அவளை
விட்டுவிட்டு வந்ததற்காக வருந்துகிறேன். அந்தப் பிரிவின் உணர்வை இந்தக்
காகிதத்தில் கொட்டி பாட்டிலில் மிதக்க விடுகிறேன். என் ஒரே ஆசை — வீடு திரும்பி என்
காதலி ஜிங் உடன் இனிய மகிழ்ச்சியான நீண்டகால இணக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும்.”
கடிதம் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது.
விரைவிலேயே கேத்-துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடிதம் எழுதியவரின் நண்பன்
என்று சொல்லிக் கொண்ட ஒருவர் பேசினார். தன்னுடைய நண்பன்தான் இதை எழுதியவர்
என்றார்.
ஆனால்...
“அவர்களுடைய காதல் நிறைவேறவில்லை. அந்தப்
பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விட்டது. இப்போது அந்தப் பெண்
வேறொருவருடன் வாழ்ந்து வருவதால், இரண்டு பேரில் எவருடைய அடையாளம் வெளியே தெரிந்தாலும் அந்தப்
பெண்ணின் குடும்ப வாழ்க்கையை சிக்கலாக்கி விடும். அதனால் அவருடைய அடையாளம் தெரிய
வேண்டாம் என அவர் விரும்புகிறார். இப்போதும் அந்த நண்பர் தனியராகவே இருக்கிறார்.
விரைவில் அவருக்கு வேறொரு நல்ல பெண் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன்”
இப்படிச் சொன்னார் அந்த நண்பர்.
*
எத்தனை பேருக்கு 96 ஞாபகம் வருகிறது?
96 இன்னும் பார்க்கவில்லை. படம் பார்ப்பது அரிதாகி விட்டது..... எல்லோரும் நல்ல படம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ReplyDelete