இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லியில் நடைபெறும் உலகப் புத்தகக் கண்காட்சி மீண்டும் வந்து விட்டது.
2012 பிப்ரவரி 25 முதல் மார்ச் 4 வரை பிரகதி மைதானில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடெங்குமிருந்து 1400 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் பதினான்கு அரங்குகளில் கண்காட்சி நடைபெறும்.
தமிழகத்திலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களில், தமிழ் நூல்கள் வைத்திருக்கும் கடைகள் 10ஆம் எண் அரங்கில் அமைந்திருக்கும். அவற்றின் கடை எண்களின் விவரம் கீழே.
நியூ செஞ்சுரி புக் ஸவுஸ் - கடை எண் 25
பாரதி புத்தகாலயம் - கடை எண் 22
காலச்சுவடு - கடை எண் 23
கிழக்கு பதிப்பகம் - கடை எண் 21
பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் - கடை எண் 24
சாந்தா பதிப்பகம் - சிறிய கடை எண் 16
சந்தியா பதிப்பகம் - சிறிய கடை எண் 14
இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் - சிறிய கடை எண் 13
இது தவிர, நேஷனல் புக் டிரஸ்ட் பல அரங்குகளில் கடைகள் அமைத்திருந்தாலும், ஒரு அரங்கில் மட்டுமே தமிழ் மற்றும் இதர மொழி நூல்கள் கிடைக்கும். சாகித்ய அகாதமி நிறுவனமும் பிராந்திய மொழிகளுக்கென தனி கடை அமைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிறுவனங்களின் கடை விவரம்
நேஷனல் புக் டிரஸ்ட் - அரங்கம் 14 - கடை எண் - 70-79
சாகித்ய அகாதமி - அரங்கம் 11 - கடை எண் 323-324
10ஆம் எண் அரங்கம் மெட்ரோ நிலைய நுழைவாயில் வழியாக வந்தால் மிகவும் பக்கத்தில் இருக்கிறது. உச்சநீதிமன்ற சிவப்பு விளக்குக்கு எதிராக உள்ள 8ஆம் எண் வாயில் வழியாக வந்தால் நேராக நடக்க வேண்டும். பெரிதாக அமைக்கப்பட்டுள்ள குளத்தின் இடப்புறம் 10ஆம் அரங்கம்.
உங்கள் வசதிக்காக வரைபடம் கீழே - கறுப்பு வண்ணக் கட்டத்தில் இருப்பது 10ஆம் அரங்கம் -
அனைத்து நிறுவனங்களும் நூல்களின் விலையில் சீராக 10 சதவிகிதம் கழிவு தர வேண்டும் என்பது அமைப்பாளர்களின் நிபந்தனை. சில நிறுவனங்களிடம் அதற்கும் அதிகமாகக் கழிவு பெறுவது உங்கள் திறமை....
இலட்சக் கணக்கான நூல்களைக் கண்டு நூல் விரும்பிகள் மலைத்தும் மகிழ்ச்சியில் திளைத்தும் போவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
திரைப்பட ஆர்வலர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. இந்தியத் திரைப்படங்கள் உருவான நூறாவது ஆண்டு நெருங்குவதை முன்னிட்டு இந்தப் புத்தகக் கண்காட்சியின் மையக் கருத்து - நூறாண்டை நெருங்கும் இந்திய சினிமா.
இதற்காக 7ஆம் எண் அரங்கில் தனியாக கண்காட்சி நடைபெறுகிறது. திரைப்படங்கள் தொடர்பான நூல்கள் பல மொழிகளில் காட்சிக்கு இருக்கும். அவை விற்பனைக்கு அல்ல. பதிப்பாளர்கள் விரும்பினால் அந்த நூல்களின் பதிப்புரிமை பெற சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களை அணுகலாம்.
இதில் மகிழ்ச்சியான செய்தி என்ன என்று கேட்பவர்களுக்கு...
தினமும் ஒரு திரைப்படமும் திரையிடப்படுகிறது - அதாவது, இலக்கியத்திலிருந்து திரைக்கு வந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு ஏழு திரைப்படங்கள் உண்டு. தமிழர்களின் மகிழ்ச்சிக்கு தண்ணீர் தண்ணீர் -
திரையிடப்படும் படங்கள் மற்றும் நேரம் -
25 பிப்ரவரி சனிக்கிழமை மாலை 5.30 - பதேர் பாஞ்சாலி -வங்க மொழி
26 பிப்ரவரி ஞாயிறு மாலை 5.30 - சாஹிப் பீபி ஔர் குலாம் - இந்தி
27 பிப்ரவரி திங்கள் மாலை 4.00 மணி - உம்ரோ ஜான் 1981ஆம் வருடத்தியது
28 பிப்ரவரி செவ்வாய் மாலை முற்பகல் 11.30 - தேவதாஸ் - இந்தி - 1936ஆம் வருடத்தியது
28 பிப்ரவரி செவ்வாய் மாலை 5.30 - மால்குடி டேஸ் - இந்தி தொலைக்காட்சித் தொடர்
29 பிப்ரவரி புதன் மாலை 5.30 - தண்ணீர் தண்ணீர் - தமிழ்
1 மார்ச் விழாயன் மாலை 5.30 - ஹலோதியோ சொரயே பாவதான் காய் - அசாமியா
2 மார்ச் வெள்ளி மாலை 5.30 - சூரஜ் கா சாத்வான் கோடா - இந்தி
3 மார்ச் சனிக்கிழமை மாலை 5.30 - மாதி மாய் - மராட்டி
4 மார்ச் ஞாயிறு நண்பகல் 12.00 - சாருலதா - வங்கமொழி
உம்ரோ ஜான் தவிர அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஆங்கில சப்டைடில் இருக்கும் - ஒருவேளை உம்ரோ ஜானுக்கும் இருக்கலாம்.
திரையிடுவது தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம்
இவை தவிர திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் அமர்வுகள், நூல் வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளும் நாள் முழுதும் நடைபெறும். இவை குறித்து மேலும் விவரம் அறிய அஞ்சல் அனுப்பினால் பிடிஎப் வடிவில் சிறு பிரசுரம் அனுப்ப இயலும்.
பத்து நாட்களும் புத்தகக் கண்காட்சியில் கழிக்கும் வாய்ப்பு மீண்டும் எனக்குக் கிடைத்திருக்கிறது. நேரம் கிடைத்தால் சுவாரசியமான புகைப்படங்களை பதிவில் காணலாம்.
வாசிப்பை நேசிப்போம்.

mudinthal santhippom. aluvalaga vishayamaga veliyur pogavendiyulladu.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி.
ReplyDeleteவிவரங்களுடன் நல்ல பகிர்வு...
ReplyDeleteபுத்தகக் கண்காட்சி பற்றிய முழுமையான விவரங்களை வரைபடத்துடன் அளித்து உதவிய உங்களுக்கு என் நன்றி...
ReplyDelete23ஆம் தேதி இரவு 12 மணிக்கு மேல் இந்தப் பதிவை எழுதினேன். முதல்நாள் இரவு முழுவதும் வேலை செய்து மறுநாள் பகலும் தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போயிருந்ததேன். அதன் விளைவோ என்னவோ, 2012 என்பதை 2002 என்று தட்டச்சு செய்து விட்டேன் போலும். அதேபோல மார்ச் 4 என்பதை 5 ஆக்கி விட்டேன். பிழைகளை சுட்டிக்காட்டிய ஜிஜிக்கு நன்றி.
ReplyDelete