பிப்ரவரி 14 என்றாலே உலகில் எல்லாருக்கும்
நினைவு வருவது வேறு, எனக்கு நினைவு வருவது வேறு. ஆமாம், BOOKS - MY FIRST LOVE.
புதுதில்லியில் உலகப்
புத்தகத் திருவிழா நாளை காலை துவங்குகிறது. திருவிழா பிரசுரங்கள் தயாரிக்கும்
பணிகள் சற்று முன்னர் முடிவடைந்தன. நாளை முதல் ஒன்பது நாட்களும் புத்தகத்
திருவிழாவிலிருந்து நேரலை பதிவுகள் வெளியாகும்.
• இந்த ஆண்டு தமிழ்ப்
பதிப்பாளர்கள் அதிகம் பங்கேற்கவில்லை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பபாசி, இஸ்லாமிக் டிரஸ்ட், ஓங்காரம் ஆகிய நான்கு மட்டுமே பங்கேற்கின்றன.
அரங்க எண்கள் 12-12ஏ -- கடை எண்கள் 84, 85, 86, 93
• இந்தி மற்றும்
பிராந்திய மொழிகள் - 12-12ஏ அரங்கம்
• ஆங்கிலப்
பதிப்பாளர்கள் - 1, 6, 9, 10, 11 ஆகிய அரங்குகள்
• அறிவியல், தொழில்நுட்பம்,
அரசு நிறுவனங்கள் - 14ஆம் அரங்கம்
• குழந்தைகளுக்கான
நூல்கள் - 1ஆம் அரங்கம்
• இந்த ஆண்டின் மையக்
கருத்து - வடகிழக்கின் குரல்கள். இதையொட்டி 7ஆம் அரங்கில்
சிறப்பு அரங்கம் அமைந்துள்ளது. தினமும் வடகிழக்கு தொடர்பான கருத்தரங்குகள், வடகிழக்கு மாநில மொழித் திரைப்படங்கள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
• குழந்தைகளுக்கான
சிறப்பு அரங்கமும் 7ஆம் அரங்கில்
அமைந்துள்ளது.
• விருந்தினர் நாடு -
சிங்கப்பூர், சிறப்புக் கவனிப்பு
நாடு - தென் கொரியா. மேற்கண்ட நாடுகள் உள்பட வெளிநாடுகளின் பதிப்பாளர்களும் 7ஆம் அரங்கில் இடம்பெறுகிறார்கள்.
•
10 மற்றும் 14ஆம் அரங்கில் Authors Corners அமைந்துள்ளன. இங்கே ஆங்கில
எழுத்தாளர்களை சந்திக்கலாம். 8 மற்றும் 12ஆம் அரங்கில் இந்தி எழுத்தாளர்களை சந்திக்கலாம்.
வெளிநாட்டு எழுத்தாளர்களின் நிகழ்ச்சிகள் 7ஆம் அரங்கில்
நடைபெறுகின்றன.
• பதிப்பாளர்கள், தன்னார்வ நிறுவனங்கள் நடத்தும் பல்வேறு
கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள், எழுத்தாளர் சந்திப்புகள், உரையாடல்கள்,
ஆகியவை 6, 7, 8 ஆகிய அரங்குகளில்
நடைபெற உள்ளன.
• வழக்கம்போல லால்
சவுக் மற்றும் ஹம்ஸத்வனி அரங்குகளில் மாலை வேளைகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
• திருவிழா நேரம் - 11 மணி முதல் இரவு 8 மணி வரை.
• நுழைவுக் கட்டணம் -
பெரியவர்களுக்கு 20 ரூபாய், சிறுவர்களுக்கு 10 ரூபாய். 39 மெட்ரோ
நிலையங்களிலும் நுழைவுச்சீட்டுகள் கிடைக்கும். மெட்ரோவில் வருவோர் பிரகதி மைதான்
நிலையத்தில் இறங்க வேண்டும்.
வழக்கம்போல, 7ஆம் அரங்கில்,
அன்றாடம் வெளிவரும் ஷோ டெய்லி என்ற இதழின் அலுவலகப் பகுதியில் நான் இருப்பேன்.
வாசிப்பை நேசிப்போம்.
வாசிப்பை நேசிப்போம்
ReplyDeleteநன்றி நண்பரே
புத்தகத் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாசிப்பை நேசிப்போம்...
நான்கு நாட்கள் விடுமுறை இருந்தும் அதிலும் அலுவலகம் செல்ல வேண்டியதாயிற்று.....
ReplyDeleteவர இயலாத சூழல். உங்கள் பதிவுகள் மூலம் புத்தகத் திருவிழா பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்கிறேன்.