Saturday, 13 May 2017

டிப்ஸ்

டிப்ஸ் 1 : நல்லா தண்ணியடிங்க.

எங்க வீடு கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கு. வெயில் படாமல் உள்ளடங்கி இருக்கும். அதனால், பொதுவா வெப்பம் தெரியாது. ஏ.சி. போட்ட மாதிரின்னு இல்லாட்டியும் குளுகுளுன்னுதான் இருக்கும்.

கீழே ஒரு படம் இருக்கு பாருங்க. என்னன்னு தெரியுதா? காஞ்சு போன குச்சி மாதிரி இருக்கு இல்லையா?



இப்போ இந்தப்படத்தைப் பாருங்க.


என் வீட்டில் என் கம்ப்யூட்டர் டேபிள் மேல் வச்சிருந்து இந்தப் படங்களை எடுத்தேன். இந்த வெள்ளரிப் பிஞ்சுதான் மேலே குச்சி மாதிரி காஞ்சு போயிருக்கிறது.  வெள்ளரிப்பிஞ்சு படம் 1ஆம் தேதி காலையில் எடுத்தது. குச்சி மாதிரி காஞ்சு கிடக்கே, அது 6ஆம் தேதி மாலையில் எடுத்தது.

வெயிலே படாத, குளிர்ச்சியா இருக்கிற இடத்திலேயே அவ்வளவு தண்ணியும் காஞ்சு, குச்சியாப் போச்சுன்னா, வெயிலில் சுத்துனா என்னாகும்? வடக்கே ஒவ்வொரு வருசமும் ஹீட் ஸ்டிரோக்கில் பல நூறு பேர் பலியாகிறாங்க.

வெளியே போகும்போது கையில் எப்பவும் தண்ணி எடுத்துட்டுப்போங்க. இதுக்கு வெக்கப்படத் தேவையில்லை. கையில் தண்ணி பாட்டில் எடுத்துட்டுப் போறதை ஏதோ கேவலமான விஷயமா பலரும் நினைக்கிறாங்க.

பொதுவா தாகம் எடுத்தா தண்ணி குடிப்போம். வெயில் காலத்தில் அப்படியிருக்கக் கூடாது. தாகம் எடுக்காட்டியும் தண்ணி குடிச்சுட்டே இருக்கணும்.

வெயிலில் அதிகம் சுத்துனா, வீட்டுக்கு வந்தப்புறம் நீர்க்கடுப்பு புடிக்கும். அதைத் தவிர்க்கிறதுக்கு ஒரே வழி, நிறைய தண்ணீர் குடிக்கிறதுதான்.

 * * *
டிப்ஸ் 2 : ஏமாறாதீர்

பக்கத்துல இருக்கிற மளிகைக்கடையில, ரோட்டோர காய்கறிக் கடையில, தள்ளுவண்டியில எல்லாம் காய்கறி வாங்கறதுல இன்றைய புதுவகை இளைய சமூகத்துக்கு விருப்பமில்லை.

மாலுக்கு அல்லது பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் போகணும். பொதியுருளி (டிராலி-பேஸ்கட்) உருட்டிட்டுப்போய் - தேவைப்படற பொருட்கள்னு இல்லாம - கண்ணுல படற பொருட்களை அள்ளிட்டு கார்டு ஸ்வைப் பண்ணிட்டு வரணும். அதுதான் இப்பல்லாம் ரீஜன்ட்டு.

அப்படித்தான் போறாங்களே..., அரிசி பருப்பு சர்க்கரை மாதிரியான அழுகிப்போகாத பொருட்கள் மட்டும் வாங்கிட்டு வந்தா ஆகாதா...? முட்டை, ஆப்பிள் எல்லாம்கூட அங்கதான் வாங்கறது.

பேப்பர் கூழில் செய்த ஒரு டிரேல முட்டைகளை வச்சு, பாலிதீன் மூடி போட்டு ஒட்டி வச்சிருக்கு. எட்டு முட்டை 70 ரூபாய். அதே 8 முட்டைகள் மளிகைக் கடையில் 40 ரூபாய். எதுக்கு 70 ரூபாய் கொடுத்து வாங்கணும்னு கேட்டா, நாட்டுக்கோழி முட்டையாம்...! இத்தனை நாட்டுக்கோழி முட்டைகள் உற்பத்தி செய்யணும்னா நாட்டுக்கோழிப் பண்ணைகள்னு தனியா இருக்கோணும். முட்டை ஓடு வெள்ளையா இருக்கிறதுக்கு பதிலா லேசா பிரவுன் கலரா இருக்கு. இதுமாதிரி சாதாரண முட்டைகளிலும் ஒண்ணு ரெண்டு கலந்து இருக்கும், நீங்க பாத்திருப்பீங்க. அதையே தனியா பேக் செஞ்சு இரண்டு மடங்கு விலை வைக்கிறானுக.  அதுதான் தொலையட்டும்.

ஆப்பிள். தள்ளுவண்டியிலோ பழக்கடையிலோ ஆப்பிள் வாங்கலாம். அதைவிட்டுப்போட்டு பேக்கிங் செஞ்ச ஆப்பிள் வாங்கிட்டு வர்றது. பொதுவா பழக்கடையில் ஆப்பிள் வாங்கிட்டு வந்து பிரிஜ்ல வச்சா ஒரு வாரம் பத்து நாள் இல்லே, மாசமானாலும் அப்படியே இருக்கும்.

இதா... படத்தைப் பாருங்க. அழுகிப்போன சப்போட்டா மாதிரி இருக்கே... இது ஆப்பிள்.

நம்ப முடியலே இல்லையா? என்னாலயும் நம்ப முடியாம, பாக்கெட் பாத்தேன்... ADANI FARM-PIK அப்படீன்னு ஒரு பிராண்ட். ஆமா... அதே அதானிதான். வாங்கிட்டு வந்து பிரிஜ்ல வச்சிருந்தது. 10 நாள் இருக்கலாம். வெளியே எடுத்தப்போ இந்த நிலைமை.


எப்போ ஆப்பிள் தோட்டத்தில் கொள்முதல் செஞ்சதோ...? எத்தனை நாள் லாரியிலும் குடோனிலும் கிடந்ததோ? எத்தனை மாதங்கள் கோல்ட் ஸ்டோரேஜ்ல கிடந்ததோ...? எப்போ பேக்கெட் போட்டாங்களோ...? எத்தனை நாள் ஹோல்சேல் கடையில் கிடந்ததோ? எப்போ அந்தக் கடைக்கு வந்துச்சோ... ?!?!

பழக்கடையில் ஆறு ஆப்பிள் வெறும் 40-50 ரூபாய்க்குக் கிடைச்சிருக்கும். இது? 145 ரூபாய்!!!

கொள்ளையில போகட்டும்.

இது அதானிக்கு எதிரான போஸ்ட் இல்லை. அழகான பேக்கிங் பாத்து இது மாதிரி நீங்களும் ஏமாந்து போய் வாங்காதீங்கன்னு சொல்லத்தான் எழுதியிருக்கேன்.


1 comment:

  1. ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் பக்கம் ஒரு நண்பரின் மகனுக்கு கல்யாணவரவேற்பு மாலை கொஞ்சம் முன்னாடி யே போய்ட்டோம் நண்பருக்கு நாங்கள் முன்பே வருவது தெரிந்து காபி சிற்றூண்டி செய்து வைத்திருந்தார். நேரம் இருந்ததால் கடற்கரை சென்று திரும்பி வரும் போது ரிலையன்ஸ் மார்கெட்டுக்கு கூடவந்த நண்பர் வற்புருத்தலால் நுழைந்து பார்த்தால் சிறு வெங்காய குவியல் அத்தகுப்பை விலையும் தாறுமாறு நண்பருக்கு முகம்மாறிப்போச்சு.
    இன்னொரு கடை வீட்டுக்காரம்மா வற்புருத்தலுக்காக கத்தரிகாய் குவியலை காட்டி அழுகலை அந்த குவியலில் இருந்காட்டினேன் எதுவும் வாங்காமல் திருப்பி வந்ட்டோம்.

    ReplyDelete