அனுபவக் கட்டுரைத் தொடர் – பகுதி-6
புகைப்பழக்கத்தை விட்டொழிப்பதற்கான ஆலோசனைகள் சிலவற்றை
முந்தைய பதிவில் பார்த்தோம். அதை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்கி வாசிக்கலாம்.
அந்தப் பதிவில் இருக்கும் இணைப்புகளை சொடுக்கி அதற்கு முந்தைய கட்டுரைகளையும் வாசிக்கலாம்.
சிகரெட் புகைக்கும்போது தற்காலிகமாக மூளைத்தூண்டல் கிடைக்கிறது. அது மிகச்சில நிமிடங்களுக்கே என்றாலும்கூட, வேலையில் ஏற்பட்ட சிக்கல், கோபம், மனம் தளர்தல், சலிப்பு போன்ற நேரங்களில் சிகரெட்டின் புகைத்துப் பழகியிருப்பீர்கள். அதேபோல, அன்றாடச் செயல்பாடுகளை ஒட்டியும் புகைத்துக் கொண்டிருப்பீர்கள். உதாரணமாக, உணவுண்டபிறகு, காபி குடித்த பிறகு, நண்பர்களை சந்திக்கும்போது. ... ஆக, சிகரெட்டை விட்டொழிக்க உங்கள் போதைப்பழக்கம் - அன்றாடச் செயல்பாடுகள் ஆகிய இரண்டிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். முந்தைய பதிவில் சில ஆலோசனைகளைப் பார்த்தோம். இன்னும் சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

• சிகரெட்டை விட்டொழிக்க காரணங்கள் என்ன, விட்டொழிப்பதால்
பயன்கள் என்ன என்று பட்டியலிடுங்கள். உதாரணமாக –
- பணம் மிச்சமாகும், அதை நல்ல காரியத்துக்கு செலவழிக்கலாம்;
- உடல் ஆரோக்கியமாக இருக்கும், இருமல் உள்ளிட்ட இதர
பிரச்சினைகளுக்காக மருத்துவச் செலவு இருக்காது;
- வாய் நாற்றம் இருக்காது;
- பொது இடங்களில் புகைக்கும்போது அடுத்தவரின் கோபப்
பார்வைகளை எதிர் கொள்ள வேண்டாம்;
சிகரெட் பிடிக்கத் தோன்றும்போது இந்தப் பட்டியலை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இன்னும் சில காரணங்கள் உங்களுக்கு
இருக்கும். அவற்றை பட்டியலிட்டு உங்கள் மேசையில் தெரியும்படி வைத்துக்கொள்ளலாம்,
அல்லது சுவரில் மாட்டி வைக்கலாம். சிகரெட் புகைக்கும் தூண்டுதல் வரும்போது அவற்றை
படிக்கலாம்.
• உடற்பயிற்சி செய்வது சிகரெட் ஏக்கத்தைக் குறைக்கும்.
தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். மூச்சுப்பயிற்சி, யோகா
போன்றவையும் பயன்தரும்.
• புகைக்கும் நண்பர்களுடன் வெளியே போவதை சில நாட்களுக்குத்
தவிர்த்திடுங்கள்.
• கம்ப்யூட்டரில் வேலை செய்கிறீர்கள். சிகரெட் புகைக்கும் தூண்டல் எழுகிறது. வேலையை நிறுத்திவிட்டு சற்றுநேரம் கம்ப்யூட்டரில் ஏதேனும் விளையாடலாம்.
• கம்ப்யூட்டரில் வேலை செய்கிறீர்கள். சிகரெட் புகைக்கும் தூண்டல் எழுகிறது. வேலையை நிறுத்திவிட்டு சற்றுநேரம் கம்ப்யூட்டரில் ஏதேனும் விளையாடலாம்.
• நீங்கள் வழக்கமாக சிகரெட் புகைத்துவந்த இடங்களுக்குப்
பதிலாக புகைப்பதற்குத் தடையுள்ள வேறு இடங்களுக்குச் செல்லுங்கள் – உதாரணமாக,
நூலகம், திரையரங்கம், உணவகம்.
• வழக்கமாக ஒரே கடையில் சிகரெட் வாங்கும் பழக்கம் இருந்தால்
மனம் உறுதி பெறும் வரையில் அந்தக் கடைப்பக்கம் போவதைத் தவிர்த்திடுங்கள்.
• பிரச்சினை அல்லது மன அழுத்தம் ஏற்படும்போது, முன்னர்
இருந்த வழக்கப்படி சிகரெட் பிடிக்கத் தோன்றும். சிகரெட் பிடிப்பதால் பிரச்சினைகள்
தீர்வதில்லை என்ற உண்மையை உணருங்கள். உண்மையில், பிரச்சினையை எதிர்கொள்வதற்காகப்
புகைக்கிறோம் என்று நினைத்து நாம் புகைக்கும் சிகரெட்டே பல பிரச்சினைகளுக்குக்
காரணமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
• புகைப்பதை நிறுத்திய முதல் இரண்டு நாட்களைவிட அதற்கடுத்த
நாட்களில்தான் சிகரெட் ஏக்கம் அதிகமாக இருக்கும். ஒரே ஒரு சிகரெட் புகைத்தால் என்ன
குறைந்துவிடும் என்ற எண்ணம் அடிக்கடி வரும். ஆனால், அந்த ஒரு சிகரெட் என்பது ஒருபோதும்
ஒன்றோடு நிற்காது.
• புகைப்பழக்கத்தை நிறுத்தும்போது உடல் நிகோடினுக்காக
ஏங்கும். அதை நிவர்த்தி செய்ய நிகோடின் கலந்த பபுள் கம் அல்லது எலக்டிரானிக்
சிகரெட்டுகள் போன்றவை இப்போது பரவலாக விளம்பரம் செய்யப்படுகின்றன. இது எப்படி இருக்கிறது
என்றால், கஞ்சா போதையிலிருந்து வெளியேற அபின் சாப்பிடலாம் என்பது போல. இதுபோல
மாற்று நிகோடின் வஸ்துக்களை பயன்படுத்துவோர் மீண்டும் புகைப் பழக்கத்தின் பக்கம்
திரும்பும் வாய்ப்புகள் உண்டு.
• புகைக்கும் தூண்டல் ஏற்படும் நேரத்தில் வேறு ஏதாவது
சுவைக்கலாம். (நான் ஒரு கிண்ணத்தில் கிஸ்மிஸ் (உலர் திராட்சை)
வைத்துக்கொண்டேன். அவ்வப்போது ஒன்றை வாயில் போட்டுக்கொள்வேன். ஏலக்காயை உடைத்து
விதைகளை மட்டும் வைத்துக்கொண்டேன். அவ்வப்போது ஒவ்வொரு விதையை வாயில் போட்டு
சுவைத்துக்கொண்டிருப்பேன். கிஸ்மிஸ் அல்லது ஏலக்காய் நிகோடின் ஏக்கத்தைக்
குறைக்கிறதா என்று அறிவியல்ரீதியாகத் தெரியாது, ஆனால் எனக்கு இவை கவனத்தைத் திருப்பக்கூடிய
மாற்றாக இருந்தன.)
• புகைக்கும் ஆசை வரும்போது இதர வேலைகளில் ஈடுபடலாம் — நடைப்பயிற்சி, குழந்தைகளோடு விளையாடலாம், கார் அல்லது ஸ்கூட்டரைக் கழுவலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம், அலமாரி அல்லது மேசையை சுத்தம் செய்யலாம், வாழ்க்கைத் துணையோடு வெளியே போகலாம், சமையல் செய்யலாம் அல்லது சமையலில் உதவலாம். இவை குடும்பத்துடன் நெருக்கமாக உணரவும் செய்யும்.

• புகைக்காமல் இருந்தமைக்காக உங்களை நீங்களே பாராட்டிக்
கொள்ளுங்கள், பெருமைப்படுங்கள். தினமும் சிகரெட் வாங்கச் செலவழித்த அளவு பணத்தை ஒரு உண்டியலில் சேமித்து வாருங்கள். சேமித்த பணத்தைக் கொண்டு நீண்டகாலமாக நீங்கள் செய்ய நினைத்த ஒன்றைச் செய்து முடிக்கலாம், அல்லது உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளலாம்.
Excellent Sir
ReplyDelete