Tuesday, 6 March 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - நூல்பட்டியல்

பிரகதி மைதானத்தில் ஏழாம் வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் 14ஆம் எண் அரங்கின் முன் காணக் கிடைத்தது இந்த மரம். இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு நான்கு காய்கள் மட்டும் சுமந்து கொண்டு நிற்கிறது. வந்துவிட்டது கோடை... இனி எப்போது மீண்டும் துளிர்க்கும்... மனதில் எழுந்தது என்றோ எழுதிய கவிதை வரி...


புத்தாடை
யார் தருவார் எனக்
காத்திருக்கிறது மரம்?

நேற்றைய பதிவு மிகவும் நீளமாகி விட்டது. அதனால் பட்டியல் மட்டும் இங்கே. உழுபவன் கணக்குப் பார்த்தால்... என்பது போல, வாசகன் கணக்குப் பார்க்க முடியுமா...

பெரிய மகள் தேர்வுகள் -
 • உறங்கா நகரம்
 • அமெரிக்கா அல்கொய்தா
 • மனித உரிமைகள்
 • லெனின் வாழ்க்கை வரலாறு
 • ஏங்கெல்ஸ் வாழ்க்கை வரலாறு
 • மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
 • Great Indian Short Stories (Compilation of Rose Reinhardt Anthon, William Wilkie Collins, E.M. Forster, Rabindranath Tagore, Rudyard Kipling)
 • Can Love Happen Twice? - Ravinder Singh
 • Love Lasts Forever - Ramya Mishra Pandey
 • Autumn in My Heart - Saptarshi Basu
 • Choosing Your Faith (New Testament)

சின்னவள் தேர்வுகள் -

 • To the Lighthouse - Virginia Woolf
 • The Aliens have Landed & Aliens Encounters - Dilip M. Salvi
 • An Island of Trees - Ruskin Bond
 • A Bond with the Mountains - Ruskin Bond
 • Time Machine - H.G. Wells
 • The Adventures of Tom Sawyer - Mark Twain
 • The Ring O'bells Mystery - Erid Blyton
 • The Young Adventurers - Erid Blyton
 • The Secret Seven - Erid Blyton
 • Strangers on the 16:02 - Priya Basil
 • Pride & Prejudice - Jane Austen
 • Hans Brinker or the Silver Skates - Mary Mapes Dadge
 • The Goose Girl - Brothers Grimm
 • David Copperfield -  Charles Dickens
 • Around the World in Eighty Days - Jules Verne


இஸ்லாமிய நூல்கள் - துணைவியார் தேர்வுகள் -
 • என்னைக் கவர்ந்த பெருமானார்
 • இவர்தான் முஹம்மத் 
 • பெருமானார் தரும் பரிசு
 • அன்புள்ள அன்னைக்கு
 • தற்கொலை - ஆய்வும் தீர்வும்
 • சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கதைகள்
 • குகைத் தோழர்களின் கதை
 • கதைக்குள் கதை

காலச்சுவடிலிருந்து எங்கள் தேர்வுகள் -
 • 1945இல் அப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்
 • ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில்
 • இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் - கார்டன் வைஸ்
 • லண்டன் உங்களை வரவேற்பதில்லை - இளைய அப்துல்லாஹ்
 • நீதி மறுக்கப்பட்ட கதை - மின்னி வைத்
 • மஹ்ஷர் பெருவெளி - புனத்தில் குஞ்ஞப்துல்லா
 • அக்கா - கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
 • நொறுங்கிய குடியரசு - அருந்ததி ராய்
 • அரபிக் கடலோரம் - சக்கரியா
 • நளினி ஜமீலா - பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
 • திரும்பிச் சென்ற தருணம் - பி.ஏ. கிருஷ்ணன்
 • கலங்கிய நதி - பி.ஏ. கிருஷ்ணன்
 • மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன்
 • பறவைகளும் வேடந்தாங்கலும் - மா. கிருஷ்ணன்
 • அமெரிக்கக்காரி - அ. முத்துலிங்கம்

பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை (Tigerclaw Tree) ஏற்கெனவே இருக்கிறது. படித்து முடித்த உடனே அவருக்கு அஞ்சல் எழுத வேண்டும் என்று தோன்றியது, இன்று வரை செய்யவில்லை. இத்துடன் அவரது அனைத்து நூல்களும் என்னிடம் சேர்ந்து விட்டன என்று நினைக்கிறேன். அவரை அறியாதவர்களுக்கு - பி. அனந்தகிருஷ்ணன், மைய அரசில் அதிகாரியாகப் பணியாற்றியவர், கித்வாய் நகர்வாசி, தில்லித் தமிழ் இலக்கியவட்டத்தில் அறிமுகமானவர்.

வாங்கிய நூல்களில் முதலில் படிக்க எடுப்பது அமெரிக்கக்காரியையா அல்லது கலங்கிய நதியையா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

தமிழ் நூல்களை தேர்வு செய்யும்போது தெரியாமல் போனது பட்டியலைப் பார்க்கும்போது தெரிகிறது - நேற்றும் சரி, முன்னர் வாங்கியதும் சரி, பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகள். புதிய தமிழ் நூல்கள் அதிகம் வரவில்லையோ... அல்லது வாங்கியிருக்க வேண்டியவை சிலவற்றை விட்டு விட்டேனோ....

இந்தப் பதிவை ஒரு படத்துடன் நிறைவு செய்யலாம் என்று உத்தேசம். இதற்கு விளக்கம் எதுவுமே தேவையில்லைதானே... ஆயிரம் வார்த்தைகளில் விளக்க முடியாததை ஒற்றைப்படம் உணர்த்தி விடுகிறது அல்லவா...


குறிப்பு - வேடமில்லாமல் அமர்ந்திருப்பவர் குச்சிகளின்மீது நடந்துகொண்டு உயரமான நபராகக் காட்சி தந்தவர். 

வாசிப்பை நேசிப்போம்

6 comments:

 1. அன்பு நண்பர் திரு ஷாஜஹான் அவர்களுக்கு, மனங்கனிந்த நன்றி.
  போலந்து நாட்டில் பணி நிமித்தம் இருக்கும் எனக்குத் தங்களின் பதிவுகள் தில்லியில் நிகழ்ந்தேறிய உலகப் புத்தகக் கண்காட்சிக்குப் போக முடியாத குறையைப் போக்கின.

  இந்தியாவின் எழுச்சி நாயகர் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம், முன்னாள் கிரிக்கெட் வீரர் சிக்ஸர் ஸ்ரீகாந்த், நவீன தமிழ் எழுத்து ஜாம்பவான் எஸ். ராமகிருஷ்ணன், காலச்சுவடு கண்ணன், நண்பர் பேராசிரியர் இரவீந்திரன் உள்பட பலரைத் தரிசிக்க முடிந்தது.
  சினிமா நடிகர்கள் மீதான புரிதலற்ற நம் மோகம் குறித்த உம் விமர்சனம் நூற்றுக்கு நூறு சரியே.

  நல்லது. இது போல் சமூகப்பயன் அளிக்கும் செயல்பாடுகள் தொடரட்டும்.

  அன்புடன்
  கோவீரா

  ReplyDelete
 2. புத்தகக் கண்காட்சி நடந்த தினங்களில் தினமும் உங்கள் பதிவு படித்து நடந்த விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி...

  இரண்டு நாட்கள் மட்டுமே என்னால் செல்ல முடிந்தது. இரண்டாம் நாள் வாங்கிய புத்தகங்கள் பட்டியல் என் பக்கத்தில் இன்னும் போடவில்லை.....

  தொடர்ந்து சந்திப்போம்....

  ReplyDelete
 3. Dear sir, I am happy to see your detailed narration of 20th
  Internation Book Fair held in New Delhi from Feb.25th to 4th
  March,2012. Due to my pre-occupation, I could not attend the book
  fair, I was very unlucky to miss the fair. But , I am very much
  thankful to you that your visit to the fair and e-mail information is
  very useful as if I was in the fair.
  Thank you very much to you. Keep on writing, we enjoyed your e-mail
  information which may be published as an article so that lot of tamil
  friends and their children will benefit.
  -M.Sampathkumar, New Delhi

  ReplyDelete
 4. puthaga kankaatchiyai paarkaamal pona kuraiyai ungal pathivugalil moolam niraivetri vittireegal.
  Peraasiriyar Ravindran avargal Pudhuvaiyil iruppatha ezhuthi iruntheergal. avargalil thodarpu en kidaikumaa? naan April maathathil Pudhuvai selkiren, avarai santhikka aaravam irukirathu.
  Nandri!

  Arivu

  ReplyDelete
 5. I really enjoyed reading your updates regarding World Book Fair. Though, I did visit the fair 2-3 days, I mainly spent time in our stall at the Children Books pavilion and attended some of the events organized by NBT at the children pavilion. I was hoping to get your views with regard to children section, in particular, our stall.
  Also, looking into your amazing thirst for reading good books, could you please suggest me, some of the must read tamil books of recent times? -- may I borrow from you and I promise, will definitely return the books after reading it?

  ReplyDelete